என் மலர்
சினிமா செய்திகள்
'சூரரைப்போற்று' இந்தி ரீமேக்கில் தீவிரம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்
- இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரைப்போற்று' இந்தி ரீமேக் உருவாகி வருகிறது.
- இதில், மாறன் கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
சூரரைப்போற்று படக்குழு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Recorded @MikaSingh for #sooraraipottru Hindi song … lyrics by @manojmuntashir … @Sudha_Kongara @akshaykumar @Abundantia_Ent @rajsekarpandian … lots of dhols on the wayyyyyy ??? pic.twitter.com/MA0YsLx8bZ
— G.V.Prakash Kumar (@gvprakash) May 30, 2023