என் மலர்
சினிமா செய்திகள்

மனோபாலா
படப்பிடிப்பை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்.. பிரபல நடிகர் கொடுத்த அப்டேட்..
- விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.
விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
விஜய் - லோகேஷ் கனகராஜ்
ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது.
லோகேஷ் கனகராஜ் - விஜய்
இந்நிலையில், தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன்... அதே ஆற்றல் முழு வீச்சில்.. முதல் நாளே தூள்.." என்று நடிகர் மனோபாலா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
Thalapathi 67- shoot starts today...met lokesh and engal thalapathi...same energy and full swing..first day itself..thool...
— Manobala (@manobalam) January 2, 2023