என் மலர்
சினிமா செய்திகள்

வைரமுத்து
உலக நாடுகள் ஓடி வரட்டும்.. கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம் - கவிஞர் வைரமுத்து
- துருக்கியில் திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1 ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன. வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன். உலக நாடுகள் ஓடி வரட்டும் கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
துருக்கியின் கீழே
— வைரமுத்து (@Vairamuthu) February 7, 2023
பூமி புரண்டு படுத்துவிட்டது
ரிக்டர் கருவிகள்
வெடித்துவிட்டன
வான்தொட்ட கட்டடங்கள்
தரைதட்டிவிட்டன
மனித உடல்கள் மீது
வீடுகள் குடியேறிவிட்டன
மாண்டவன் மானுடன்;
உயிர் பிழைத்தவன்
உறவினன்
உலக நாடுகள்
ஓடி வரட்டும்
கண்ணீர்
சிவப்பாய் வடியும் நேரம்#TurkeyEarthquake pic.twitter.com/yJGWZWJjqj