என் மலர்
சினிமா செய்திகள்

விஜய்
விஜய் நடிக்கும் 68-வது படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?
- நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இதைத்தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
வெங்கட் பிரபு -விஜய்
இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் குடும்ப படமாகவும் அப்பா-மகன் உறவுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் இதே கதைக்களத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story