என் மலர்
சினிமா செய்திகள்

முட்டாள்தனமாக பேசி தப்பிக்கலாம் என்ற அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக உள்ளது - நடிகர் நானி
- கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.
- நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இச்செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
சமந்தா- நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா பெண் மந்திரி கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கே.டி. ராமாராவ் அவதூறு வழக்க தொடர்வதாக கூறியுள்ளார்.
கொண்டா சுரேகாவை கண்டித்த நடிகை சமந்தா அரசியலுக்காக என் பெயரை இழுக்க வேண்டாம் என கூறினார். மேலும் கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை ரோஜா ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தெலுங்கான அமைச்சர் கொண்டா சுரேகா பேச்சுக்கு நடிகர் நானி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியவதாவது:-
எப்பேற்பட்ட முட்டாள்தனத்தையும் பேசி தப்பித்து விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகளைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. இவ்வளவு மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர் ஊடகங்களுக்கு முன்னால் இப்படி அடிப்படை ஆதாரமற்ற குப்பைகளைப் பேசுவது சரியல்ல. நமது சமூகத்தை மோசமாகப் பிரதிபலிக்கும் இச்செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.