என் மலர்
சினிமா செய்திகள்

இன்று மாலை வெளியாகும் 'கங்குவா' டீசர்
- சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார்
- . இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகனாக சூர்யா இருக்கிறார். திரைத்துறை பணியிலும் , சமூக பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் சூர்யா.
2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் மக்களிடையே சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். அவர் இதுவரை தயாரித்த படங்களில் கங்குவா தான்
மிகப்பெரிய பட்ஜட் படம். சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார். பாபி டியோல், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார் என பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. இத்திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணியளவில் கங்குவா படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.