search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நம்ம ஸ்டோரில் காதல் கிடையாது ஒன்லி திருட்டு தான் - சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் டீசர்
    X

    நம்ம ஸ்டோரில் காதல் கிடையாது ஒன்லி திருட்டு தான் - சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் டீசர்

    • கடைசியாக ரணம் அறம் தவறேல் திரைப்படத்தில் வைபவ் நடித்து இருந்தார்.
    • டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

    கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர்.

    கடைசியாக ரணம் அறம் தவறேல் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    டீசர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. ஒரு கேங் ஒரு திருட்டை செய்கிறார்கள் இதை சுற்றியே டீசர் காட்சிகள் அமைந்துள்ளது. விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×