என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வருகிறான் வணங்கான்.. டிரைலர் இந்த தேதியில் வெளியாகும் - அசத்தல் அப்டேட்
    X

    வருகிறான் 'வணங்கான்'.. டிரைலர் இந்த தேதியில் வெளியாகும் - அசத்தல் அப்டேட்

    • வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
    • ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிபில் உருவாகியுள்ள படம் 'வணங்கான்'. இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில் அவருக்கு பதிலாக அருண் விஜயை வைத்து படத்தை இயக்கி முடித்துள்ளார் பாலா. ஒரு கையில் பெரியார் சிலை மறு கையில் விநாயகர் சிலை என பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவனத்தை ஈர்த்த வணங்கான் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

    அதற்கு முக்கிய காரணம் பாலாவின் பிதா மகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருந்ததே ஆகும். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணங்கான் படமாக்கப்பட்டது.

    இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதால் படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது ரசிகர்களை உற்ச்சாகப் படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, வணங்கான் படத்தின் டிரைலர் நாளை மறுநாள் ஜூலை 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

    Next Story
    ×