என் மலர்
சினிமா செய்திகள்

வீர தீர சூரன் படத்தின் முதல் நாள் வசூல் விவரம்
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
- சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் பலரும் காலை முதல் எதிர்ப்பார்த்து காத்து இருந்து படங்களை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடினர்.
திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் நேற்று மாலை காட்சியில் இருந்து தொடங்கினாலும் படம் நேற்று மட்டும் 3.25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. தற்பொழுது திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளதால் படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்த வார இறுதியில் திரைப்படம் பல கோடிகளை வசூலிப்பது உறுதி.