என் மலர்
தரவரிசை
- தற்கொலை செய்து கொள்ளும் பின்னணியை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை .
கதைக்கரு
தற்கொலை செய்து கொள்ளும் பின்னணியை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியின் கதை.
கதைக்களம்
கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஷாம். கொள்ளையன் ஒருவனை ஷாம் பிடிக்க போகும் போது, அவரது தோள்பட்டையில் குண்டு காயம் அடைந்து வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவரது போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பூங்காவில் ஒருவர் பொதுமக்கள் மத்தியில் திடீரென வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொள்கிறார். பல ஊர்களில் இது போன்று தற்கொலை சம்பவங்கள் நடக்கிறது. மர்மமான இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து ஷாம் விசாரிக்க தொடங்குகிறார். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.
இறுதியில் பலரின் தற்கொலைக்கு பின்னணியில் இருப்பதை ஷாம் கண்டுபிடித்தாரா? தற்கொலை சம்பவங்கள் ஏன் நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ஷாம், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கையில் கட்டுடன் இவர் விசாரணை நடத்தும் தோரணை வியக்க வைக்கிறது. இவருக்கு பக்கபலமாக நடித்து இருக்கிறார் நாயகி மீரா.
ஷாமுடன் இணைந்து துப்பறியும் காட்சிகளில் போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் சுமந்த் நடிப்பு கூடுதல் பலம். மனநல மருத்துவராக நிழல்கள் ரவி மற்றும் போலீஸ் அதிகாரியாக அருள்ஜோதி, கொடூர சைக்கோ கொலையாளியாக விதேஷ் மற்றும் ஜீவா ரவி ஆகியோர் நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளனர்.
இயக்கம்
ஜப்பானிய அரசர் ஒருவர் தன்னிடம் செஸ் ஆடி தோல்வி அடைந்தவர்களை வயிற்றில் குத்தி தற்கொலை செய்ய வைத்த கதை களத்தை 'அஸ்திரம்' படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜகோபால். படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை மாறுபட்ட கதை களத்தை காலத்திற்கேற்றவாறு திரில்லர் படமாக கொண்டு வந்துள்ளது பாராட்ட வைக்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு & இசை
கே.எஸ்.சுந்தரமூர்த்தி பின்னணி இசை, கல்யாண் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
தயாரிப்பு
Best Movies நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
சாதி வேறுபாடு உள்ள ஒரு கிராமம். அங்கு மேல் வகுப்பு மக்கள், கீழ் வகுப்பு மக்கள் உயர்ந்து விட கூடாது என்று முனைப்போடு இருக்கிறார்கள். இந்நிலையில் அந்த கிராமத்தில் திருவிழா நடக்கிறது. இதில் மேல் வகுப்பு மக்களிடையே கோவில் மரியாதை செலுத்துவதில் பிரச்சனை ஏற்படுகிறது.

இதே சமயம் கீழ் வகுப்பைச் சேர்ந்த நாயகன் பூசாரி வைத்திருக்கும் தட்டில் விபூதி எடுக்கும் நேரத்தில் தட்டு கீழே விழ, அங்கு கலவரம் வெடிக்கிறது.

இறுதியில் கலவரம் என்ன ஆனது? கோவில் திருவிழா முறையாக நடைபெற்றதா? சாதி பிரிவினை நீங்கியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் சங்ககிரி மாணிக்கம், ஹர்ஷிதாஸ்ரீ, விக்ரம், சுருதி, பிரபு மாணிக்கம் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் புது முகங்கள் என்பதால் நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜாஜி. ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் பெரியதாக படம் ஒர்க்கவுட் ஆகவில்லை. காட்சிகள் ஒவ்வொன்றும் தொடர்ச்சி இல்லாமல் பயணிக்கிறது. சொல்ல வந்த கருத்து நியாயம் என்றாலும், எடுத்த விதம் நியாயம் இல்லாமல் இருக்கிறது.

ஓ.மகேஷ் ஒளிப்பதிவில் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆண்டணி தாசின் இசையில் பாடல்கள் ஓகே. ஜேம்ஸ் வசந்தனின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு செட் ஆகவில்லை.
- நடிகை ஜெனிலியா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.
பாலிவுட் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜெனிலியா. பின்னர், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஜெனிலியா, தென்னிந்திய சினிமா குறித்து மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் தென்னிந்திய படங்களில் நடித்த போது என்னை பாலிவுட் கைவிட்டது. அங்கேயே செல் என்று கூறியது. ஆனால், எனக்கு தென்னிந்திய சினிமாவை மிகவும் பிடிக்கும். எனக்கு நடிப்பின் மீது காதல் வர காரணமே தென்னிந்திய சினிமாதான். தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்க விருப்பம் உள்ளது என்று கூறியுள்ளார்.
- இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
- இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவான திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. விஜய் சேதுபதி நாயகனாக நடித்த இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில், லண்டனில் இருந்து கொடைக்கானலுக்கு தன் இசைக் குழுவுடன் வரும் "ஜெசி" என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றவர் மதுரா. தற்போது, ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழ் பெண்ணான இவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்திருந்த சிறப்பு பேட்டியின் போது பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தை பற்றி உங்களது கருத்து என்ன என்ற கேள்விக்கு, என் அம்மாவின் பூர்வீகம் இலங்கை, யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் கதையோ ஈழத் தமிழர்களின் வலியையும் வேதனையையும் சொல்லும் கதை என்பதால் என்னால் உணர்வுபூர்வமாக புரிந்து கொள்ள முடிந்தது, இந்தப் படம் ஈழத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவே நான் பார்க்கிறேன். கண்டிப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும் இது நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்தும் படமாகவும் அமையும் என்று நான் கருதுகிறேன் என்று கூறினார்.

நடிகர் விஜய் சேதுபதி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்ட போது, தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி. என் முதல் நாள் படப்பிடிப்பில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது என்னை பார்த்ததும் புரிந்துகொண்டு எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து பதட்டத்தை போக்கி எனக்கு ஒரு ஆசனாக இருந்தார். அவருடன் இந்தப் படத்தில் பயணிக்க வாய்ப்பு தந்ததற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விவேக் அவர்களைப் பற்றி உங்களின் கருத்து, நடிப்பின் மீது ஆர்வம் வந்த பிறகு அவருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு அவருடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு பேரானந்தம், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பேசியது பழகியது அனைத்தும் இன்றும் எனக்கு ஞாபகம் வருகிறது.
எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறிய இடைவேளை இருந்தது அப்போது பியானோ அங்கிருந்தது அதில் எனக்கு முதல்வன் படத்தில் இருந்து குறுக்கு சிறுத்தவளே என்ற பாடலை வாசிக்க கற்று கொடுத்தார், அதுமட்டுமல்ல நிறைய இளையராஜா பாடல்களை எங்களுக்கு வாசித்து காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். ஆனால் அவரின் மறைவு எனக்கு மிகுந்த வேதனையை தந்தது, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரத்தை இழந்து விட்டோமே என்று.

மேகா ஆகாஷுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து கேட்ட போது, என்னுடைய நடிப்பு பயணத்தில் முதல் நட்சத்திர நடிகையும் எனக்கு நல்ல தோழியும் ஆன மேகா ஆகாஷ் உடன் நடித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன். எங்களது நட்பு என்றும் நீடிக்கும்.
சந்திரா ஆர்ட்ஸ் புரொடக்சன் பற்றியும் தயாரிப்பாளர் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் ஜெர்மனியில் இருந்து படப்பிடிப்புக்காக சென்னை வரும்போதெல்லாம் இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அக்கரையாகவும் எனக்கு தேவையான வசதிகளையும் அனைத்தையும் ஒரு புதுமுக நடிகை என்று பார்க்காமல் தாய் வீட்டில் இருந்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய சந்திரா ஆர்ட்ஸ் புரொடக்சனுக்கு மிக்க நன்றி.
இயக்குனரைப் பற்றியும் அவரது பணியை பற்றியும் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டதற்கு, தமிழ் திரை உலகில் எத்தனையோ கதைகள் இருந்தாலும் தன் முதல் படத்தில் ஈழத் தமிழனின் கதையை ஆழமாகவும் நேர்த்தியாகவும் அழகாக வடிவமைத்து அதில் எனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை தந்ததற்கு என்னுடைய இயக்குனருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

அவரைப் பற்றியும் அவரின் குடும்பத்தை பற்றியும் பகிர்ந்துகொண்ட அவர், நான் ஜெர்மனி நாட்டில் பெர்லின் மாநகரில் பிறந்தேன் என்னுடைய அப்பா ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் என்னுடைய தாயார் இலங்கையை யாழ்ப்பாண தமிழ் பெண், எனக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர், நான் ஜெர்மன் நாட்டில் வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பை முடித்து பயிற்சிப்பட்டறையில் கடமை ஆற்றுகின்றேன். என்னுடைய சிறு வயதிலிருந்து தமிழ் மொழி அதை சார்ந்த கலைகளான பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், மிருதங்கம் அனைத்தையும் கற்றுத் தெரிந்தேன் என் கல்லூரி நாட்களில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளும் வாங்கியுள்ளேன்.
தமிழ் மொழியில் உயர்தர கல்வியை முடித்து ஜெர்மன் பிராங்பேர்ட் நகரில் உள்ள தமிழ் பாடசாலையில் ஆசிரியராகவும் தற்போது பணியாற்றுகிறேன். சுவிட்சர்லாந்து மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன், அது மட்டுமல்லாமல் ஜெர்மனில் மூன்று இசை வீடியோக்களில் நடித்துள்ளேன்
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திற்குள் எப்படி வந்தீர்கள் என்ற கேள்விக்கு, ஜெர்மனியில் நான் செய்த மாடலிங் வீடியோக்கள் மற்றும் நான் நடித்த மியூசிக் ஆல்பம் மூலமாக எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கலைத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது என்பது குறித்து பேசிய அவர், சிறு வயதிலிருந்தே எனக்கு நடிப்பின் மீதும் நடனத்தின் மீதும் ஈடுபாடு அதிகம் நடிப்பில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற கனவு ஆசையாக மாறி அதற்காக அனைத்தையும் கற்றுக் கொண்டேன் அதற்காக கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டிருந்தேன், என்னுடைய ஆசைக்கும் கனவுக்கும் துணையாக நின்ற அத்தனை பேருக்கும் முக்கியமாக என்னுடைய பெற்றோருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தமிழ் படத்தின் மீது உங்களுக்கு உண்டான புரிதல் பற்றிய கேள்விக்கு, தமிழ் எனக்கு பிறப்பிலிருந்து ஊட்டப்பட்டது, நான் ஒரு தமிழ் பெண், சிறு வயதில் இருந்தே தமிழ் பேசி வளர்ந்ததால் தமிழ் திரைப்படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன், ஆனால் தமிழில் நடிக்கப் போகிறோம் என்றவுடன் தமிழில் எல்லா நடிகர், நடிகைகள் உடைய படத்தை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளவும் செய்தேன். ரஜினி சார் உடைய மாஸ், கமல் சார் உடைய நடிப்பு, விஜய் சேதுபதி அவர்களுடைய இயல்பான நடிப்பு அனைத்தையும் பார்த்து ரசித்திருக்கிறேன். நான் தமிழ் சினிமாவில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. படத்திற்கும் எனக்கும் ஆதரவு கொடுத்த என் ரசிகர்களுக்கும், தமிழ் மக்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
- நடிகர் ரோபோ சங்கர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
- நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

ரோபோ ஷங்கர்
சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. நல்ல உடல்வாக்குடன் இருந்த ரோபோ சங்கர் மெலிந்த உருவத்தில் இருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். படத்திற்காக ரோபோ சங்கர் உடல் இடையை குறைத்தாரா? அல்லது உடல்நலக்குறைவால் அவர் இப்படி ஆனாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

ரோபோ ஷங்கர்
இந்த நிலையில் ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக தான் நடனமாடும் வீடியோ ஒன்றை ரோபோ சங்கர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'வாரணம் ஆயிரம்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரோபோ சங்கர் நடனமாடியுள்ளார். ரசிகர்கள் பலரும் ரோபோ சங்கரின் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் தன் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
- இவர் தற்போது சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர், பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் களம் இறங்கினார். தெலுங்கில் பிரபாஸ், இந்தியில் சல்மான் கான் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பூஜா ஹெக்டே
தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் பூஜா ஹக்டே தனக்கு அடிப்பட்டு விட்டதாக சமுக வலைதளத்தில் காலில் கட்டுடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பூஜா ஹெக்டே
இந்நிலையில், இவர் தொடர்ந்து சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "இரண்டு வாரங்களுக்கு முன்பு.. நான் என் வாழ்வில் இரண்டாவது முறையாக நடக்க கற்றுக் கொண்டேன்.. இது மிகவும் வேடிக்கையானது" என்று பதிவிட்டுள்ளார்.

பூஜா ஹெக்டே பதிவு
இதற்கு முன்பும் தான் சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை பூஜா ஹெக்டே இணையத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'வணங்கான்'.
- 'வணங்கான்' படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'வணங்கான்'. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை '2டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது.

வணங்கான்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பாடல்கள் ரெக்கார்ட் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை ஜி.வி. பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
'வணங்கான்' படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் 'வாடிவாசல்' திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#vanangaan songs recording on progress 🔥🔥🔥 … @Suriya_offl @rajsekarpandian #directorbala
— G.V.Prakash Kumar (@gvprakash) September 11, 2022









