search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஜேஷ்டா நட்சத்திரலட்சுமி பூஜை
    X

    ஜேஷ்டா நட்சத்திரலட்சுமி பூஜை

    • சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.
    • இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    நவராத்திரியில் வரும் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி பூஜை மிகவும் விசேஷமானதொரு பூஜையாகும். மூல நட்சத்திரத்திற்கு முதல் நாள் வரும்.

    தமிழில் கேட்டை நட்சத்திரம் என்று சொல்வார்கள்.

    சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

    இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    மகாலட்சுமியை குறித்து சொல்லும் சுலோகங்கள், அக்ஷ்டோத்திரம், ஸஹஸ்ர நாமம் சொல்லி குங்குமம், புஷ்பம், அட்சதைகளினால் அர்ச்சிக்கலாம்.

    மூலநட்சத்திர தீபம்:

    மூல நட்சத்திர தீபம் என்பது நவராத்திரி பூஜை சமயத்தில் சரஸ்வதி ஆவாகனம் செய்யும் மூலநட்சத்திரத்தன்று ஏற்றும் ஒரு அகண்ட தீபம் ஆகும்.

    இந்த தீபமானது சரஸ்வதி பூஜை வரையிலும் அகண்டமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.

    இதை ஏற்றுவதற்கு நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது.

    மூலா நட்சத்திரத்தன்று காலையில் குளித்து புதிய ஆடை அணிந்து கொண்டு சுவாமியின் முன் ஒரு இடத்தை சுத்தம் செய்து செம்மண் கோலம் போட்டு அலங்கரித்து அதன் மேல் ஒரு சிறிய மர பலகை அல்லது தட்டு வைத்து சிறிய அரிசியை பரப்பி அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றி பூக்களைப்போட்டு நமஸ்கரிக்க வேண்டும்.

    பசு நெய் ஸ்ரேஷ்டம் ஆனால் மூன்று நாட்களும் எரிந்து கொண்டிருக்க வேண்டியதினால் அந்த அளவு நெய் கிடைப்பது கஷ்டம். ஆகையால் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம்.

    விளக்கு மலையேறாமல் அடிக்கடி எண்ணை ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும்.

    இரவில் படுப்பதற்கு முன்பு நிதானமாக திரியின் மேல் பாகத்தை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்ற வேண்டும்.

    திரியை சுத்தம் செய்யும் பொழுது அணையாமல் இருக்க வேறு திரியை ஏற்றி விட்டு சுத்தம் செய்து பிறகு ஏற்ற வேண்டும்.

    Next Story
    ×