என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- ஆடி மாதம் அம்மனை வழிபட உகந்த மாதமாகும்.
- கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கோனியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு:-
சந்தன தைலம்- சுகம் தரும்
திருமஞ்சனம்- சம்பத்து நல்கும்
பாசிப்பயறு மாவு- மகிழ்ச்சியாய் வாழலாம்
அரிசி மாவு - உயர்பதவி அடையலாம்
நெல்லிப்பொடி - சாந்தி உண்டாகும்
வில்வப்பொடி - யோகம் அளிக்கும்
பஞ்சாமிர்தம் - கல்வி அறிவு பெருகும்
பால் - மனக்கவலை தீரும்
தயிர் - மனநோய் அகலும்
தண்ணீர்- சாந்தி உண்டாகும்
நெய் - தொழில் சிறக்கும்
தேன் - குரல் இனிமை பெறும்
வெல்லம் - துக்க நிவர்த்தி அளிக்கும்
கரும்புச்சாறு - மன அமைதிபெறும்
இளநீர் - பக்தி பெருகும்
எலுமிச்சம்பழம் - விதியை வெல்லலாம்
சாதம் - சகல பாக்கியம் உண்டாகும்
திருநீறு - துன்பம் நீங்கும்
சந்தனம் - நிலம் வீடு வாங்கலாம்
நல்லெண்ணெய் - ஐயம் நீங்கும்
பழவகை - திருவருள் பெறலாம்
வாழைப்பழம் - வறுமை ஒழியும்
கரும்புச் சர்க்கரை - குழந்தைபேறு கிட்டும்
எள் - சனி பயம் நீங்கும்
மாம்பழம்- வெற்றியை கொடுக்கும்
பூ மாலை- உடல் பிணி தீரும்
பரிவட்டம்- பெருஞ்செல்வம் பெருகும்
பச்சரிசி- தீராக்கடன் தீரும்
மஞ்சள் தூள் - விபத்துகள் தவிர்க்கலாம்
தேங்காய்- பொன்பொருள் சேரும்
பேரிச்சம்பழம்- கடல் கடந்து செல்லலாம்
கல்கண்டு- வாகனம் வாங்கலாம்.
முந்திரி- பிரிந்தவர் ஒன்று சேரலாம்
ஏலம்- தீமைகள் நீங்கும்
உலர் திராட்சை- சங்கடங்கள் தீரும்
எள்ளுமாவு- மரணபயம் நீங்கும்
எள்ளுருண்டை- அரசு வேலை பெறலாம்
எள்ளு சாதம் - பகை நீங்கும்
பன்னீர் - நன்னடத்தை உண்டாகும்
கும்ப ஜலம்- சாந்தி உண்டாகும்
- வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சோதனைகளை வென்றால் தான் சாதனை படைக்க முடியும்.
- நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் நம்பிக்கை.
இந்தப் பூவை சிவபெருமானுக்கும், முருகனுக்கும், வைத்து வழிபட்டு வந்தால், தடைபட்ட காரியமானது 11 வாரங்களில் வெற்றி அடையும்.
எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அந்த காரியமானது எடுத்த முதல் மார்க்கத்திலேயே வெற்றி அடைந்துவிட வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் எந்த ஒரு செயல்பாடும் தொடங்கிய மார்க்கத்திலேயே வெற்றி அடைந்து விடும் என்ற எண்ணத்தை நமக்குள் வளர வைக்கக்கூடாது .
தோல்வி என்ற கசப்பை சுவைக்கும் போது தான், வெற்றி என்ற இனிப்பு நிலைத்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை .
இறைவன் சில சமயங்களில் நம்முடைய மனவலிமையை சோதித்துப் பார்ப்பதற்காக கூட நமக்கு தோல்வியை தரலாம். தோல்வியைக் கண்டு அஞ்சாமல் எவன் இருக்கிறானோ, அவனுக்கு தான் வெற்றியை தர வேண்டும் என்று கூட அந்த இறைவன் நினைத்திருக்கலாம். ஆகவே, தோல்வியை கண்டு பயப்படாமல் எவரொருவர், வெற்றிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றாரோ அவர் தான் வாழ்க்கையில் ஜெயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நமக்கு வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சோதனைகளை வென்றால் தான் சாதனை படைக்க முடியும்.
உங்களுக்கு தொழிலில் ஏற்பட்ட கஷ்டமாக இருந்தாலும், நஷ்டமாக இருந்தாலும் அல்லது வேறு வகையில் உங்கள் வாழ்க்கையை முன்னேற விடாமல் இருக்கும் எந்த தடையாக இருந்தாலும் அதனை வெற்றியடையச் செய்ய எந்த பூவை சிவபெருமானுக்கும் சூட்டினால் வெற்றி அடையலாம் என்பதை பற்றியும், நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் குறிப்பிட்ட இந்த ஒரு பூவை முருகப்பெருமானுக்கு சாத்தினால் நல்ல பலனை அடையலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எல்லோருக்கும் வெற்றியை தேடித்தரும் அந்த பூ செண்பகப்பூ. சிவபெருமானுக்கு எந்த தினத்தில் வேண்டும் என்றாலும் இந்தப் பூவை வைத்து பூஜை செய்யலாம். அது நமக்கு நல்ல பலனை தேடித்தரும். சிவபெருமானுக்கு மிகவும் உகந்த இந்த செண்பகப்பூவால் அர்ச்சனை செய்து மனதார உங்களது வேண்டுதல்களை வைத்துப் பாருங்கள். 11 வாரங்களில் அதற்கான பலனை நீங்கள் நிச்சயம் அடைவீர்கள்.
இதைப்போல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பூவினை முருகப்பெருமானுக்கு 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்து, குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் நம்பிக்கை.
குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் முருகனுக்கு இந்தப்பூவை அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மட்டும்தான் இந்த செண்பகப் பூவை, முருகப்பெருமானுக்கு சாத்தி வழிபட வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உங்கள் மனதில் இருக்கும் எந்த வேண்டுதல்களை வைத்து வேண்டினாலும் அதற்கான பலன் கட்டாயம் கிட்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை .
எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத துன்பங்களையும் தீர்த்து வைக்கும் இந்தப் பூவை வெள்ளிக்கிழமை அன்று முருகப்பெருமானுக்கு சூட்டி வேண்டினால் விரைவாகவே உங்களது கஷ்டம் தீர்ந்து விடும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் செண்பகப் பூ வானது கடைகளில் கிடைப்பது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான். இருப்பினும் உங்களுக்கு தெரிந்த பூ கடைக்காரர்களிடம் சொல்லி வைத்தால் கட்டாயம் கொண்டு வந்து தருவார்கள்.
- கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
- எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்று பார்க்கலாம்.
கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. அதில் எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்:
2 விளக்கு- குடும்பம் மேன்மைபெறும்.
3 விளக்கு- எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.
4 விளக்கு- நற்கல்வி, உடல் ஆரோக்கியம் கிட்டும்.
5 விளக்கு- விநாயகர் அருள் கிடைக்கும்.
6 விளக்கு- நோய்கள் குணமாகும்.
7 விளக்கு- திருமணத்தடை நீங்கும்.
8 விளக்கு- மாங்கல்ய பலம் கூடும்.
9 விளக்கு- நவக்கிரக பிணிகள் நொடியில் அகலும்.
10 விளக்கு- தொழில் மேன்மை பெறும். கடன் தொல்லைகள் அகலும்.
11 விளக்கு- செய்தொழிலில் லாபம் கிட்டும். போட்டியில் வெற்றி வசப்படும்.
12 விளக்கு- ஜென்மராசியில் உள்ள தோஷங்கள் நீங்கும்.
13 விளக்கு- பில்லிசூனியபாவம் விலகும்.
14 விளக்கு- குலதெய்வபலம், சந்தான பலன் கிடைக்கும்.
15 விளக்கு- வழக்கில் வெற்றி வசப்படும்.
16 விளக்கு- வாழ்வில் 16 செல்வங்களும் கிட்டும்.
17 விளக்கு- வாகனம், வண்டி யோகம் கிடைக்கும்.
27 விளக்கு- நட்சத்திர தோஷம் நீங்கும்.
48 விளக்கு- தொழில் வளரும், பயம் நீங்கும்.
108 விளக்கு- நினைத்த காரியம் நடக்கும்.
508 விளக்கு- தீராத திருமண தோஷங்கள் அகலும்.
1008 விளக்கு- சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.
- சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர்.
- துர்க்கை வழிபாடு என்பது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது.
துர்க்கை வழிபாடு என்பது தற்பொழுது எல்லா தலங்களிலுமே நடைபெற்று வருகின்றது. ஆனால் கோனியம்மன் கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் ராகு காலத்தில் ஆதிகோனியம்மன் சன்னதிக்கு பக்கத்தில் உள்ள மேடையில் எலுமிச்சம் பழத்தில் விளக்கு வைத்து வழிபடுவர்.
திருமண தடைகள், காரிய தடைகள், தொழிலில் நஷ்டம், உடல்நிலை சரியில்லாதவர்கள் தங்கள் நோய் தீர்க்க வேண்டியும் 48 வாரம், 18 வாரம், 9 வாரம் போன்ற கணக்குகள் வைத்து துர்க்கைக்கு செவ்வரளி மாலை கட்டிபோட்டு வழிபடுகின்றனர்.
அவர்கள் நினைத்த வாரம் வரை வந்து விட்டால் இறுதி யில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், திருமண தடைகளுக்காக வேண்டியவர் அம்மனுக்கு பொட்டு மாங்கல்யம் செய்து அம்மன் கழுத்தில் அணிவித்து அதை காணிக்கையாக செலுத்துவர்.
உடல்நிலை சரியில்லாத வர்கள் வெள்ளியாலேயோ அல்லது அதுபோன்ற வேறு உலோகத்தாலேயோ செய்யப்பட்ட கண்ணடக்கம், கை, கால் போன்றவை வாங்கி பூஜை செய்துபின் அதை காணிக்கையாக செலுத்துவர்.
சிலர் மண்ணால் பொம்மை செய்தும் வைப்பர். காரியத்தடை ஏற்படுபவர்கள் பல தானங்களை செய்கின்றனர். இவ்வாறு செய்வதனால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்றது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த வேண்டுதல் உள்ளூர் மக்கள் மட்டும் வேண்டுவது இல்லை. வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பம்பாய், கொல்கத்தா, டெல்லி போன்ற நகரங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்து வேண்டுதல் செய்கின்றனர். மேலும் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளிலும் கோனியம்மனுக்கு தீவிர பக்தர்கள் உண்டு. அவர்கள் வேண்டுதலுக்கு காணிக்கைகளை அஞ்சலில் அனுப்புவதும் உண்டு.
- ராகு-கேதுவுக்கு பரிகார தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
- இங்குள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடினால் வியாதிகள் குணமாகும்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சுயம்பு மூர்த்தியாக சுகந்த பரிமளேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அன்னை சக்தி இங்கு 'பெரியநாயகி' என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர்- பெரியநாயகி அம்பாளை மனமுருகி வேண்டினால், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இதேபோல் நாக தோஷம், புத்திர தோஷம் மற்றும் ராகு-கேதுவுக்கு பரிகார தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
தீராத வியாதி உள்ளவர்கள், இங்குள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடி, மண்டபத்தில் தங்கி சுவாமியையும்-அம்பாளையும் வழிபட்டால் வியாதிகள் குணமாகி பூரண நலமுடன் திரும்புவார்கள்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாம்பூண்டி என்ற ஊர்.
- இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாம்பூண்டி என்ற ஊர். இந்த திருத்தலத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் கோவில் கொண்டுள்ளனர்.
இங்கு பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு, மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
கோவிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை இந்த பெருமாளின் பெருமையை பறைசாற்றுகிறது.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் நாயுடுமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கூட்டுரோட்டில் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் நார்த்தாம்பூண்டியை அடையலாம்.
- சூனியம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.
- அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இந்த தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.
சக்தி தீர்த்தம்
தென்னகத்தின் பெருமைமிக்க காவேரியின் உபநதியான வெருவளை வாய்க்கால் புனித சக்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் தெற்கு தேரோடும் வீதியின் தென்புறத்தில் உள்ள புகழ்பெற்ற தீர்த்தமாகும். இத்தீர்த்தம் அருகே உள்ள படித்துறையில் சுப்பிரமணிய கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களது முடி காணிக்கையினையும், புனித நீராடுதலையும், ஆதி முதல் இன்றளவும் இங்கு மேற்கொள்வதை வழக்கமாக கொள்கின்றனர். அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் இங்கு நீராடி வழிபாடு மேற்கொண்ட பின்னரே பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணத்தை செய்து முடிப்பர். இங்கு ஆடிப்பூர தீர்த்தவாரியும், ஆடி 18 தீர்த்தவாரியும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. அதுசமயம் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் இத்தீர்த்தத்தில் நீராடி மகாமாரியின் அருளை பெற்று செல்கிறார்கள்.
மகமாயி தீர்த்தம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வடமேற்கே, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திற்கு இடப்புறம் இத்தீர்த்தம் அமைந்துள்ளது. விஜய நகர நாயக்கர் கால கோவில் திருப்பணிகளில் இந்த குளம் வடிவமைக்கப்பட்டதாகும். நாற்புறமும் நுழைவுப்பாதை படிகளுடன் அமைக்கப்பட்டு நடுவில் அழகிய கோபுரத்துடன் சிறு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. பல கட்டிடக்கலை மரபுகளை இத்திருக்குளம் பெற்று இருப்பதையும் காணமுடிகிறது.
இத்திருக்குளத்திற்கு பெருவளை வாய்க்கால் வழியாக நீர் கொண்டுவரவும், எஞ்சிய நீரை வெளியேற்ற தரையின் உட்புறம் வாய்க்கால் மூலமாக நீர் வெளியேறும், நிலத்தடி நீர்வழி வாய்க்காலும் அமைக்கப்பட்டு இருப்பது இதன் சிறப்பாகும். பிற காலங்களில் மேற்குறிப்பிட்ட முறையில் நீரை நிரப்பி தெப்பஉற்சவபெருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்கு முதல் நாளும், சித்திரை தெப்பமும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாட்களில் மாரியம்மன் மேற்கு கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி வழங்குகிறாள்.
முற்காலத்தில் அரசர்களால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த இக்குளம் தற்போது கோவில் நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக சீரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தீர்த்தத்தில் இருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி எடுப்பது, அலகு குத்தி வருவது இன்றளவும் மரபாக இருந்து வருகிறது. பிரசித்தி பெற்ற இத்திருக்கு ளத்தில் பலவகையான தீபங்களை மிதக்கவிட்டு அம்மனுக்கு பிரார்த்தனை தீபம் ஏற்றுகின்ற ஐதீகமும் உள்ளது.
சர்வேஸ்வரன் தீர்த்தம்
இத்தீர்த்தம் வடமேற்கேயுள்ள வாயு மூலையில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலின் தீர்த்த வளாக பகுதியில் கோவில் பணியாளர் குடியிருப்புகள் உள்ளன. புராண காலத்தில் சப்த கன்னியர்கள் ஒவ்வொரு மகா மகத்திற்கு முன்பும், கங்கா தேவியை இப்புனித தீர்த்தத்தில் ஆவாகணம் செய்து அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரை கும்பகோணம் மகாமக குளத்தில் சேர்ப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே தான் வரலாற்று சிறப்பு பெற்ற இத்தீர்த்தத்தின் வடமேற்கு பகுதியில் அதிசய மகாமக தீர்த்த ஊற்று உள்ளது. இங்ஙனம் சக்தி தீர்த்தத்தை தன்னகத்தே அதிசய மகாமக தீர்த்தம் என்றதொரு புனித ஊற்று தீர்த்தத்தை உள்ளடக்கி யதாக காணப்படுகிறது. இன்றும் இந்த அதிசய மகாமக தீர்த்தத்தில் கும்பகோணத்தில் நடைபெறும் ஒவ்வொரு மகாமக தீர்த்தம் முன்பாகவும் வெள்ளம் பெருக்கெடுத்து, சக்தி தீர்த்தம் நிரம்பும். ஒவ்வொரு மகாமக காலத்தின்போதும் ஏற்படும் இவ்வாறான அதிசய நிகழ்வின்போது ஏராளமான பக்தர்கள் வந்து இத்தீர்த்த நீரை எடுத்துச்செல்வது வழக்கம்.
ஜடாயு தீர்த்தம்
கனகாம்பிகை உடனுறை ஸ்ரீமுக்தீஸ்வரர் கோவிலின் தெற்கேயும், மாரியம்மன் கோவிலின் தென்கிழக்கேயும் அமைந்திருப்பது வரலாற்று சிறப்பு பெற்ற ஜடாயு தீர்த்தமாகும். ஜடாயுவிற்கு இறைவன் முக்தி கொடுத்ததாக கூறப்படும் புகழ்பெற்ற தலம் இதுவே ஆகும். ஜடாயுவின் தாகத்தை தணிக்கவும், ராவணன் சீதையை கடத்தி சென்ற விபரத்தை ராமனிடம் கூறும்வரை தன் உயிர் பிரியாமல் இருக்க ஜடாயு மகேஸ்வரனிடம் வேண்ட மகேஸ்வரனால் பிரசித்தி பெற்றதாகவும் இத்தீர்த்தம் கருதப்படுகிறது. இன்றும் வற்றாத நீர்நிலையை கொண்டு இந்த தீர்த்தம் விளங்குகிறது. மேலும் உயிர்பிரிந்த ஜடாயு தன்னுடைய தந்தை தசரதனுக்கு நண்பன் என்பதால் ஜடாயுவிற்கு ஈமக்கடன்களை செய்ய ராமன் முடிவு செய்தான். தன் கை அம்பினால் ராமன் பூமியில் நீர் ஊற்று ஒன்றினை உண்டாக்கினான். அதுவே ஜடாயு தீர்த்தம் என்பதாயிற்று என்ற மற்றொரு புராண குறிப்பும் இதற்கு கூறப்படுகிறது.
கங்கை தீர்த்தம்
இக்கோவிலின் உப கோவிலான உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலின் கிழக்கில் அமைந்திருப்பது கங்கை தீர்த்தமாகும். இது அருள்மிகு மாரியம்மன் கோவிலின் தென்கிழக்கே அமைய பெற்றுள்ளது. காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் என கொண்டி ருந்த விக்கிரமாதித்தன் தமது இஷ்ட தேவதையான காளி பூஜைக்கு நித்திய பூஜைகளை செய்ய கங்கா தேவியிடம் வேண்டினான். கங்கையும் அங்கு பிரத்தியம்சமாய் தோன்றினாள். இதுவே கங்கை தீர்த்தம் என்னும் வற்றாத தீர்த்தமாகும். மகளிவனத்து மாகாளி வீற்றிருக்கும் இந்த இடத்திலுள்ள தீர்த்தம் வற்றாத தன்மையை கொண்டதாகும். திருமண தடைகள், தீராத நோய்கள், பில்லி, சூனியம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஒரு அருமருந்தாகும்.
மூளைக்கோளாறு, குழந்தையின்மை ஆகியவற்றை குணப்படுத்த அற்புத மருந்தாக இந்த புனித தீர்த்தம் இன்றும் பக்தர்களுக்கு பயன்பட்டு வருகிறது.
அம்பாளின் அளவிலா கருணையினாலும், பேரொளியினாலும் இந்த தீர்த்தத்தை பயன்படுத்தும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நிலைகளில் நலன் பயப்பதாக அறியப்படுகிறது. அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இந்த தீர்த்தம் ஒரு அருமருந்தாகும். செய்வினை மற்றும் மந்திர சக்தியை இக்கோவில் தீர்த்தம் கட்டுப்படுத்தும். அனைத்து திருக்கோவில்களிலும் இறை சக்தியை நிலை நிறுத்த இத்தீர்த்தம் மிகப்புனிதமாக பயன்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவில் புனித தீர்த்தம், காவேரியின் உபநதியாக இருப்பதால் இதில் குளித்தவுடன் சகலவித பாவங்களும், வியாதிகளும் அம்பாளின் அனுக்கிரகத்தால் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. இப்புனித நீரில் அம்பாளின் நாமத்தை மூன்று முறை உச்சரித்து மூழ்கி எழுந்தால் இதுவரை கண்டிராத உள்ளத்தூய்மை, உடல் தூய்மை ஆகியன ஏற்பட்டு புத்துணர்ச்சியை அடைந்து மக்கள் மனநிறைவு பெறுவது கண்
கொள்ளா காட்சியாகும்.
- நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.
- சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள்.
கோனியம்மன் கோவிலில் திருமண பேறு, குழந்தை பேறு, நல்ல உடல் நலம் மற்றும் தொழில் விருத்தி ஆகிய 4 விதமான கோரிக்கைகள் தான் அதிக அளவில் பக்தர்களால் வேண்டுதல்களாக வைக்கப்படுகிறது.
இந்த வேண்டுதல்களை கோனியம்மன் குறைவின்றி நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறாள். இதன் காரணமாக கோனியம்மன் மீது கொங்கு மண்டல மக்களுக்கு தணியாத பற்றும், பாசமும் இருக்கிறது.
கோனியாத்தா உத்தரவு தராமல் எந்த ஒரு செயலையும் செய்வதில்லை என்பதை கொங்கு மண்டல தொழில் அதிபர்களும், அரசியல் வாதிகளும் ஒரு சடங்கு போல, மரபு போல கடைபிடித்து வருகிறார்கள்.
இதனால் தான் தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சியான திருமணத்தை உறுதி செய்வதற்கான நிச்சயதார்த்தத்தையும் கொங்கு மக்கள் கோனியம்மன் ஆலயத்தில் நடத்துகிறார்கள்.
கோனியம்மனை சாட்சியாக வைத்து அவள் முன்னிலையில் திருமண நிச்சயம் செய்தால் மணமக்கள் அனைத்து வித செல்வங்களும் பெற்று குறைவின்றி நீடூழி வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது அவர்களது நம்பிக் கையாகும். திருமண நிச்சயதார்த்தத்துக்கு கொங்கு மண்டல மக்கள் உப்பை மாற்றி கொள்ளும் சடங்கை கடைபிடிக்கிறார்கள்.
மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மீது மஞ்சள், குங்குமம், வெற்றிலை - பாக்கு, பூ வைத்து ஒருவருக்கொருவர் கொடுத்து மாற்றி கொள்வார்கள்.
கோனியம்மன் கண் எதிரில் அவள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதால் மணமக்கள் வீட்டார் தாங்கள் கொடுத்த வாக்கை மீற மாட்டார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
பூ போட்டு உத்தரவு கேட்கும் பக்தர்கள்
கோவை மாவட்ட பக்தர்கள் திருமணம், புதிய தொழில் தொடக்கம் என எந்தவொரு சுபநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாலும் கோனியம்மனிடம் உத்தரவு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
சிவப்பு மற்றும் வெள்ளை பூவை தனித்தனியாக கட்டி அம்மன் முன்பு போடுகிறார்கள். பின்னர் அம்மனை வேண்டி பூவை எடுக்கிறார்கள். வெள்ளை பூ கிடைத்தால் சுபகாரியத்தை உடனே நடத்தலாம், அம்மன் உத்தரவு கிடைத்து விட்டது என்று அர்த்தமாம். சிவப்பு பூ வந்தால் அவசரம் வேண்டாம், கொஞ்ச நாள் கழித்து அந்த நிகழ்ச்சியை நடத்தலாம் என எண்ணப்படும்.
- இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.
- மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை.
நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ராகு-கேது நிவர்த்தி தலமான நாகநாத சாமி கோவில் உள்ளது. நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக கூறப்படும் நாகூர் நாகநாத சாமி கோவில் காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.
ராகு கால நேரத்தில் இத்தலத்து மூலவர் பெருமான் நாகநாத சாமியையும், நாகவல்லி தாயாரையும் வணங்கி, ராகு பகவானுக்கும் அவரது தேவியருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷ நிவர்த்தியுடன், திருமணத் தடை விலகி குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ராகுபகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்புக்குரியதாக கூறப்படுகிறது.
காசிக்கு இணையானதாக குறிப்பிடப்படும் இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, தர்ப்பணம் அளித்து, தானம் செய்தால் கயாவில் வழிபாடு செய்த பலனும், பிதுர்தோஷ நிவர்த்தியும் கிட்டும் என கூறப்படுகிறது. இங்கு கிருத்திகை நட்சத்திர தினத்தில் சாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டால் சர்வதோஷ நிவர்த்தி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாகூர் நாகநாத சாமி கோவில் இறைவன் நாகநாதர், நாகராஜனால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் இத்தலம் ராகு, கேது மற்றும் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. மேலும் இங்குள்ள புன்னாகவனத்தின் கீழே நாகலோகம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு நாகர் லிங்கமும் அதைச்சுற்றி இரு நாகங்கள் இணைந்து சிவலிங்க பூஜை செய்வதைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட நாகர்கள் சிலைகளும் உள்ளன.
நாகர் லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் சாற்றி வழிபட்டால் மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை. இக்கோவிலின் கன்னி பகுதியில் நாககன்னி, நாகவல்லி சமேதராக ராகு பகவான் காட்சியளிக்கிறார். கன்னி ராசியில் ராகு அமைந்தால் ராஜயோகம் என்ற ஜோதிட சாஸ்திரப்படி இத்தலத்தில் கன்னி பகுதியில் ராகு பகவான் தனது தேவியருடன் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புக்குரியது ஆகும்.
நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூரில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள நாகூர் நாகநாதர் கோவிலை அடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.
- ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவது விஷேச பலன்களை தரும்.
- உங்கள் வம்சத்திற்கு கஷ்டம் ஏற்படாமல் காக்கும்.
ஆடி மாதம் எந்த அளவுக்கு அம்மனை வழிபடுகிறோமோ, அந்த அளவுக்கு குலதெய்வ வழிபாட்டையும் செய்தல் வேண்டும். பெண்கள் ஆடி மாதம் குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தால் குடும்ப நலன்களை ஒருங்கே பெற முடியும்.
இந்த மாவிளக்கு வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
பச்சரிசி கால் கிலோ, பாகு வெல்லம் கால் கிலோ, ஏலக்காய் நாலு, 50 கிராம், நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி ஆகியவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
பச்சரியை நன்கு களைந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும், ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக்கவும்.
மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் பொதுவாய்ச் சலிப்பதில்லை என்றாலும் அவங்க அவங்க வீட்டு வழக்கத்திற்கு ஏற்ப மாறும். நன்கு அரைத்து மாவாகிவிடும் வெல்லத்தைப் போட்டுக் கலந்தால் நன்கு கெட்டியாக உருட்டும் பதத்தில் வரவேண்டும்.
பந்து போல் உருட்டவேண்டும், அவரவர் வீட்டு வழக்கப்படி ஒரு உருண்டை அல்லது இரண்டு உருண்டை பிடிக்கவேண்டும். உருண்டையில் நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும் அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு நேரே அம்மன் சாப்பிட்டால் இலையை எப்படிப் போடுவோமோ அப்படி நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு மாவு உருண்டைகளை வைக்கவேண்டும்.
குழி செய்த இடத்தில் ததும்ப நெய்யை ஊற்ற வேண்டும். திரியை அந்தக் குழியில் விட்ட நெய்யில் வைத்துத் திரியை ஏற்றவும். இப்போது பூவை மாலை போல் இரண்டு மாவிளக்குகளையும் சேர்த்துப்போடவும். நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும். பூவைத்திருக்கும் இடத்திலேயே வெற்றிலை, பாக்கு,வாழைப்பழம் வைத்துத் தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும்.
திரி நன்கு எரியும். நீளமான திரி எரிந்து முடியும் நேரத்தில், அந்தத் திரியை ஒரு கரண்டியில் அல்லது ஸ்பூனால் எடுத்துக் கோயிலில் இருக்கும் விளக்குகள் ஏதாவதொன்றில் அணையாமல் வைக்கவேண்டும்.
பின்னர் தண்ணீர் சுற்றி நிவேதனம் செய்துவிட்டுக் கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.
ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவது விஷேச பலன்களை தரும். வருடத்திற்கு ஒரு முறையாவது மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்து குலதெய்வத்தை வழிபடுவதால் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கும் உங்கள் பரம்பரைக்கும் எப்போதும் இருக்கும். உங்கள் வம்சத்திற்கு கஷ்டம் ஏற்படாமல் காக்கும். திருமண தடை, வேலைவாய்ப்பின்மை, தொழில் – வியாபார முடக்கம் போன்ற நிலைகள் அகலும். வாழ்க்கை மேம்பட எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். துஷ்ட சக்திகள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அணுகாமல் காக்கும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்கள் நிச்சயம் நல்ல பலனைத்தரக்கூடியவை.
- பிரச்சனைகளையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
* சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.
* கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி , திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
* ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.
* வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.
* சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும். 21 செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
* கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
* மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
* செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.
* ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தூரத்திற்கு செய்வினை அணுகாது.
* பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க , தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும். பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.
* புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
* பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
* வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.
* எத்தகைய கிரக தோஷமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
* வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்
- பிரத்தியங்கிராதேவி வழிபாட்டில் மிளகாய் ஹோமம் மிகவும் புகழ்பெற்றது.
- தீவினைகள் அடியோடு விலகும்
வன்முறையும் பாதுகாப்பற்ற நிலையும் வளர்ந்துள்ள நிலையில், துஷ்டர்களும், எதிரிகளும் சூழ்ந்து வளர்ந்து வரும் நிலையில், கூட இருந்து குழிபறிக்கும் பகைவர்களும் கெட்ட எண்ணம் கொண்டோரும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்குப் பாதுகாப்புத் தருபவள் பிரத்தியங்கிரா தேவி.
பிரத்தியங்கிராதேவி வழிபாட்டில் மிளகாய் ஹோமம் மிகவும் புகழ்பெற்றது. அய்யாவாடியில் உள்ள பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதியன்று காலை நேரத்தில் மிளகாய் ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது. எரியும் யாக குண்டத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய்களை அர்ப்பணிக்கிறார்கள்.
எந்த விதமான நெடி, கமறல், காரம் போன்றவை இருக்காது என்பது அதிசயமான விஷயம். இந்த யாகத்தை நாம் நடத்தினாலும், மற்றவர்கள் நடத்தும்போது கலந்து கொண்டாலும் மரண பயம் நீங்கும். நோய்கள், துன்பங்கள், மன வேதனைகள், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள், செய்வினைக் கோளாறுகள் அனைத்தும் நீங்கி வாழ்வு சிறக்கும்.
இந்த மிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை மன முக தரிசனம் செய்பவர்களுக்கு பகை, கடன், நோய் அகலும். சகலவித நன்மைகள் உண்டாகும். தீவினைகள் அடியோடு விலகும். பொன், பொருள் வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில், வேலை, உத்தியோகம் அபிவிருத்தி அடைந்து பணம் வரவு அதிகரித்து வளம் உண்டாகும்.