search icon
என் மலர்tooltip icon

    இந்த வார விசேஷங்கள்

    நவம்பர் 5-ம் தேதியில் இருந்து நவம்பர் 11-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    5-ந்தேதி (செவ்வாய்) :

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் ஊஞ்சல் சேவை.
    சிக்கல் சிங்காரவேலவர் விடையாற்று உற்சவம்.
    சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
    மேல்நோக்கு நாள்.

    6-ந்தேதி (புதன்) :

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவ சேவை.
    உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு கண்டருளல்.
    மேல்நோக்கு நாள்.

    7-ந்தேதி (வியாழன்) :

    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ஆலயத்தில் கொடிமரத்தில் தர்ப்பை கயிறு கட்டுதல்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
    சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    மேல்நோக்கு நாள்.

    8-ந்தேதி (வெள்ளி) :

    சர்வ ஏகாதசி.
    வள்ளியூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் வள்ளி திருக்கல்யாணம்.
    மதுரை கள்ளழகர் சயனக் கோல காட்சி.
    திருஇந்துளூர் பரிமளரங்கராஜர் உற்சவம், யானை வாகனத்தில் வீதி உலா.
    மாயவரம் கவுரிமாயூரநாதர் வெள்ளி படிச் சட்டத்தில் புறப்பாடு.
    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    மதுரை கூடலழகா் புறப்பாடு கண்டருளல்.
    திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.
    திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
    உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் பவனி.
    கீழ்நோக்கு நாள்.

    9-ந்தேதி (சனி) :

    சனி மகாபிரதோஷம்.
    மதுரை கள்ளழகர் மலைமேல் தொட்டிக்கு எழுந்தருளி எண்ணெய் காப்பு உற்சவம்.
    திருஇந்துளூர் பரிமளரங்கராஜர் சந்திர பிரபையில் பவனி வருதல்.
    மாயவரம் கவுரி மாயூரநாதா் நாற்காலி மஞ்சத்தில் பவனி.
    சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
    மேல்நோக்கு நாள்.

    10-ந்தேதி (ஞாயிறு) :

    மிலாடி நபி.
    முகூர்த்த நாள்.
    திருஇந்துளூர் பரிமளரங்கராஜர் சேஷ வாகனத்தில் பவனி.
    மாயவரம் கவுரி மாயூரநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் உலா.
    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
    உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
    சமநோக்கு நாள்.

    11-ந்தேதி (திங்கள்) :

    மாயூரம் கவுரி மாயூரநாதர் ரிஷப வாகனத்தில் பவனி.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் சேவை.
    திருஇந்துளூர் பரிமளரங்கராஜர் கருட வாகனத்தில் பவனி.
    சமநோக்கு நாள்.
    அக்டோபர் 29-ம் தேதியில் இருந்து நவம்பர் 4-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    29-ந்தேதி (செவ்வாய்) :

    * சிக்கல் சிங்கார வேலவர் நாகாபரண காட்சி, இரவு ஆட்டு கிடா வாகனத்தில் திருவீதி உலா.
    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை மஞ்சள் நீராட்டு விழா, இரவு விருட்சபாரூடராய் பட்டினப் பிரவேசம்.
    * குமாரவயலூர் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.
    * வள்ளியூர் முருகப்பெருமான் இரவு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    30-ந்தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேய சுவாமிக்கு வருசாபிஷேகம்.
    * சிக்கல் சிங்கார வேலவர் காலை மோகன அவதாரம், இரவு தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.
    * வள்ளியூர் முருகப்பெருமான் காலை கேடய சப்பரத்திலும், இரவு பூங்கோவில் சப்பரத்திலும் பவனி.
    * குமாரவயலூர் முருகப்பெருமான் விருட்ச வாகனத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.

    31-ந்தேதி (வியாழன்) :

    * சதுர்த்தி விரதம்.
    * சிக்கல் சிங்கார வேலவர் வேணுகோபாலர் திருக்கோலக் காட்சி, இரவு வெள்ளி விருட்ச வாகனத்தில் பவனி.
    * குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுகசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.
    * வள்ளியூர் முருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்திலும், இரவு யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் வீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    1-ந்தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * சிக்கல் சிங்காரவேலவர் ரத உற்சவம், இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.
    * குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுகசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
    * வள்ளியூர் முருகப்பெருமான் சண்முக உருகு பலகையில் தரிசனம். மூலவர் சொர்ண அங்கி சேவை. இரவு ஏக சிம்மாசனத்திலும் பஞ்சமூர்த்தி அலங்காரத்துடனும் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    2-ந்தேதி (சனி) :

    * கந்தசஷ்டி விரதம், சூரசம்ஹாரம்.
    * சிக்கல் சிங்கார வேலவர் தங்க ஆட்டு கிடா வாகனத்திலும், தாரக மற்றும் சிங்கமுக அசுரர்களை சங்கரித்து, சூரபத்மனை சம்காரம் செய்து இந்திர விமானத்திலும் பவனி.
    * குமாரவயலூர் முருகப்பெருமான், பார்வதி தேவியிடம் சக்திவேல் வாங்குதல்.
    * வள்ளியூர் முருகப்பெருமான் வெள்ளை சாத்தி தரிசனம், மாலை பச்சை சாத்தி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    3-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சகல முருகன் கோவில்களிலும் தெய்வானை திருக்கல்யாணம்.
    * சிக்கல் சிங்கார வேலவர் காலை சூர்ணோற்சவம், மாலை தங்கக் குதிரையில் பவனி, இரவு தெய்வானையை மணந்து வெள்ளி ரதத்தில் காட்சி.
    * குமாரவயலூர் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்.
    * வள்ளியூர் முருகப்பெருமான் கோ ரதத்தில் உலா, இரவு பல்லக்கு சேவை.
    * திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
    * மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (திங்கள்) :

    * சிக்கல் சிங்கார வேலவர், வள்ளி- தெய்வானையை மணந்து இந்திர விமானத்தில் காட்சி தருதல்.
    * வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி.
    * திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.
    அக்டோபர் 22-ம் தேதியில் இருந்து அக்டோபர் 28-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    22-ந்தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி காந்திமதியம்மன் வெள்ளி சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம், இரவு கிளி வாகனத்தில் புறப்பாடு.
    * சோழிங்கபுரம் அமிர்தவல்லி தாயார்- பக்தோசி பெருமாள் திருக்கல்யாண வைபவம்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
    * திருநெல்வேலி அருகன்குளம் (மேலூர்) எட்டெழுத்துப் பெருமாள் தருமபதி பஞ்சரத்ன பூஜை.
    * மேல்நோக்கு நாள்.

    23-ந்தேதி (புதன்) :

    * திருநெல்வேலி காந்திமதியம்மன் மாலை சிவபூஜை செய்தல், இரவு சப்தாவரண பல்லக்கில் வீதி உலா.
    * வீரவநல்லூர் மரகதாம்பிகை திருவீதி உலா வருதல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (வியாழன்) :


    * முகூர்த்த நாள்.
    * சர்வ ஏகாதசி.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    25-ந்தேதி (வெள்ளி) :

    * பிரதோஷம், இன்று மாலை அனைத்து சிவன் கோவில்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    * திருநெல்வேலி காந்திமதியம்மன் அதிகாலை தபசுக்கு புறப்படுதல்.
    * தென்காசி, பத்தமடை, வீரவநல்லூர், தூத்துக்குடி, சங்கரன்கோவில், கடையம் ஆகிய தலங்களில் அம்பாள் திருக்கல்யாண வைபவம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (சனி) :

    * மாத சிவராத்திரி.
    * திருநெல்வேலி  நெல்லையப்பர் கோவிலில் காந்திமதியம்மன் திருக்கல்யாணம்.
    * திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயங்களில் உற்சவம் ஆரம்பம்.
    * வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் சேவை.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (ஞாயிறு) :

    * தீபாவளி பண்டிகை.
    * அமாவாசை
    * கேதார கவுரி விரதம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் தீபாவளி தர்பார் காட்சி.
    *  திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி- அம்பாள் ஊஞ்சல் சேவை.
    * மதுரை மீனாட்சி அம்மன் வைர கிரீடம் சாற்றியருளல்.
    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், வீபிஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (திங்கள்) :

    * அமோ சோமவாரம்.
    * சகல முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி உற்சவம் ஆரம்பம்.
    * சிக்கல் சிங்கார வேலவர், குமாரவயலூர் முருகப்பெருமான் ஆகிய தலங்களில் சிறப்பு பிரார்த்தனை.
    * வள்ளியூர் முருகப்பெருமான் கோவிலில் தெய்வானை சமேத முருகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.
    அக்டோபர் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் 21-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    15-ந்தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி காந்திமதியம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம்.
    * வீரவநல்லூர் மரகதாம்பிகை, தூத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் பவனி வருதல்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * சமநோக்கு நாள்.

    16-ந் தேதி (புதன்) :

    * திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் திருவீதி உலா.
    * கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் விருட்ச வாகனத்தில் வீதி உலா.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
    * திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம் கண்டருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (வியாழன்) :

    * சங்கடஹர சதுர்த்தி.
    * கார்த்திகை விரதம்.
    * திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
    * தென்காசி உலகம்மை திருவீதி உலா.
    * திருத்தணி, சுவாமிமலை ஆகிய தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * இன்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது நன்மை தரும்.
    * கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (வெள்ளி) :

    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவை.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதியம்மன் ரிஷப வாகனத்தில் உலா.
    * அனைத்து சிவன் கோவில்களிலும் விஷூ தீர்த்தம்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் தீர்த்தாபிஷேகம்.
    * கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் திருவீதி உலா.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    19-ந் தேதி (சனி) :


    * திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை விருட்ச வாகனத்திலும், இரவு இந்திர விமானத்திலும் பவனி.
    * தூத்துக்குடி பாகம்பிரியாள் புறப்பாடு கண்டருளல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    * குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு அபிஷேக ஆராதனை.
    * இன்று கருட தரிசனம் செய்வது நன்று.
    * சமநோக்கு நாள்.

    20-ந் தேதி (ஞாயிறு) :

    * திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
    * தென்காசி உலகம்மை பவனி வருதல்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜராஜசோழன் 1034-வது பிறந்தநாள்.
    * மேல்நோக்கு நாள்.

    21-ந் தேதி (திங்கள்) :

    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
    * திருநெல்வேலி காந்திமதியம்மன் தவழும் கண்ணன் அலங்காரம், இரவு காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    * கோவில்பட்டி செண்பக வள்ளியம்மன் பவனி வருதல்.
    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.
    அக்டோபர் 8-ம் தேதியில் இருந்து அக்டோபர் 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    8-ந்தேதி (செவ்வாய் கிழமை) :

    * தசரா பண்டிகை
    * குலசை முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹார விழா
    * விஜயதசமி

    9-ந்தேதி (புதன்) :

    * துளசி கவுரி விரதம்
    * மதுரை பிரசன்ன வெங்கடேசர் சப்தாவரணம் பவனி
    * சிருங்கேரி சாரதாம்பாள் தேர்
    * சர்வ ஏகாதசி

    10-ம் தேதி (வியாழன்) :

    * கோத்துவாதசி
    * மதுரை பிரசன்ன வெங்கடேசர் தெப்பம்
    * சுவாமிமலை முருகன் தங்க கவசம்
    * துவாதசி திதி

    11-ந்தேதி (வெள்ளி ) :

    * பிரதோஷம்
    * நந்தீஸ்வரர் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நன்று

    12-ந்தேதி (சனி) :

    * கரூர் தான்தோன்றி கல்யாண வெங்கடேசர் ஊஞ்சல்
    * மதுரை கூடலழகர் சந்தன காப்பு
    * திருநள்ளாறு சனி சிறப்பு ஆராதனை
    * விஷ்ணு வழிபாடு, கருட தரிசனம் நன்று

    13-ந்தேதி ( ஞாயிறு)

    * பவுர்ணமி
    * மதுரை கூடலழகர் பால்குடம்
    * சென்னை மணலி புதுநகர் வைகுண்ட தர்மபதி தேரோட்டம்
    * கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதி எதிரில் அனுமன் திருமஞ்சனம்
    * கோமதி பூஜை

    14-ந்தேதி (திங்கள்)

    * ஸ்ரீரங்கம் பெருமாள் புறப்பாடு
    * தேவகோட்டை ரெங்கநாதர் பவனி
    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் விழா தொடக்கம்
    அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து அக்டோபர் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    1-ந்தேதி (செவ்வாய்) :

    * திருப்பதி ஏழுமலையப்பன் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் பவனி.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ண அவதாரம், சிம்ம வாகனத்தில் வீதி உலா.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சந்திர பிரபையில் புறப்பாடு.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.
    * சமநோக்கு நாள்.

    2-ந்தேதி (புதன்) :

    * சதுர்த்தி விரதம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் பகலில் சிம்ம வாகனத்தில் பவனி, இரவு முத்துப்பந்தல் அருளிய காட்சி.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராம அவதாரம், இரவு அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.
    * சிருங்கேரி சாரதாம்பாள் வைஷ்ணவி அலங்காரம், கருட வாகனத்தில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    3-ந்தேதி (வியாழன்) :

    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கஜேந்திர மோட்சம்.
    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் திருவீதி உலா.
    * திருப்பதி ஏழுமலையப்பன் காலை விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபாள வாகனத்திலும் புறப்பாடு.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.
    * சமநோக்கு நாள்.

    4-ந்தேதி (வெள்ளி) :

    * சஷ்டி விரதம்.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராஜாங்க சேவை.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் பவனி.
    * திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம், இரவு நகர கெண்டி லட்சுமிகார ஆபரணங்களுடன் கருட உற்சவம்.
    * சிருங்கேரி சாரதாம்பாள் வீணை சாரதா அலங்காரம்.
    * சமநோக்கு நாள்.

    5-ந்தேதி (சனி) :

    * திருப்பதி ஏழுமலையப்பன் காலை அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனத்தில் பவனி.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை காலிங்க நர்த்தனம், மாலை மோகன அவதாரம்.
    * சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார காட்சி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    6-ந்தேதி (ஞாயிறு) :

    * துர்காஷ்டமி.
    * திருப்பதி ஏழுமலையப்பன் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
    * கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம், இரவு புஷ்ப விமானத்தில் பவனி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கண்ணாடி சப்பரத்தில் பவனி.
    * மதுரை மீனாட்சியம்மன் கொலு மண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.
    * கீழ்நோக்கு நாள்.

    7-ந்தேதி (திங்கள்) :

    * சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.
    * மகா நவமி.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ஆலயத்தில் தசரா திருவிழா.
    * மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் வையாழி சேவை.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.
    செப்டம்பர் 24-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    24-ந் தேதி (செவ்வாய்) :

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    * திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    25-ந்தேதி (புதன்)

    * சர்வ ஏகாதசி.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (வியாழன்) :

    * பிரதோஷம்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    * கீழ்நோக்கு நாள்.

    27-ந்தேதி (வெள்ளி) :

    * மகாளய கேதார விரதம்.
    * மாத சிவராத்திரி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
    * கீழ்நோக்கு நாள்.

    28-ந்தேதி (சனி) :

    * மகாளய அமாவாசை.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.
    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.
    * மேல்நோக்கு நாள்.

    29-ந்தேதி (ஞாயிறு) :

    * நவராத்திரி ஆரம்பம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு லட்சார்ச்சனை ஆரம்பம்.
    * சகல சிவன் கோவில்களிலும் நவராத்திரி தொடக்கம்.
    * மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் கொலு தர்பார் காட்சி.
    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், அருப்புக்கோட்டை சவுடாம்பிகை, கழுகுமலை முருகன், மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், மைசூர் சாமுண்டீஸ்வரி ஆகிய தலங்களில் நவராத்திரி ஆரம்பம்.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்காரக் காட்சி.
    * சமநோக்கு நாள்.

    30-ந்தேதி (திங்கள்) :

    * திருப்பதி ஏழுமலையான், தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், நாட்டரசன்கோட்டை எம்பெருமாள், குணசீலம் பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
    * குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அலங்கார தரிசனம்.
    * சமநோக்கு நாள்.
    செப்டம்பர் 17-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 23-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    17-ந் தேதி (செவ்வாய்) :

    * சங்கடஹர சதுர்த்தி.
    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
    * குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    18-ந்தேதி (புதன்) :

    * பரணி மகாளயம்.
    * சதுர்த்தி விரதம்.
    * திருப்போரூர் முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (வியாழன்) :

    * கார்த்திகை விரதம்.
    * திருத்தணி, சுவாமிமலை ஆகிய திருத்தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் ஆலயத்தில் தங்க ரதக் காட்சி.
    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (வெள்ளி) :

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பவனி வருதல்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை திருவீதி உலா.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
    * அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் 8-ம் நாள் திருவிழா. மாலை 6.30 மணிக்கு இனிப்பு வகைகள், பலகாரங்கள், பழங்களால் திருக்கல்யாண சுருள் வைத்து மேளதாளத்துடன் பக்தர்கள் பதிவலம் வரும் நிகழ்ச்சி.
    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (சனி) :

    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுவாமிக்கு 5008 வடை மாலை அலங்காரம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள திருவண்ணாமலையில் சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
    * மேல்நோக்கு நாள்.

    22-ந்தேதி (ஞாயிறு) :

    * சங்கரன்கோவில் சங்கரநயினார் சுவாமி மீது சூரிய ஒளி படும் நிகழ்வு தரிசனம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
    * அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் 10-ம் நாள் திருவிழா. மாலை 5.30 மணிக்கு அய்யா இந்திர விமான வாகனத்தில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி.
    * சமநோக்கு நாள்.

    23-ந்தேதி (திங்கள்) :

    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருட ஆழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.
    செப்டம்பர் 10-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 16-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    10-ந்தேதி (செவ்வாய்) :

    * வாமன ஜெயந்தி.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் விறகு விற்ற திருவிளையாடல், சுவாமி- அம்பாள் தங்க சப்பரத்தில் பவனி.
    * விருதுநகர் சொக்கநாதர் ஆலயத்தில் ரதம், இரவு ஏகாந்த சேவை.
    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் திருவீதி உலா.
    * கீழ்திருப்பதி கல்வேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    11-ந்தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * ஓணம் பண்டிகை.
    * பிரதோஷம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத்தேரில் பவனி, இரவு சப்தாவரணம்.
    * விருதுநகர் சொக்கநாதர் தீர்த்தவாரி, இரவு சுவாமி- அம்பாள் விருட்ச சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    12-ந்தேதி (வியாழன்) :

    * முகூர்த்த நாள்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ஆலயத்தில் ரதம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீர்த்தவாரி, விருட்சபாரூட தரிசனம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வெள்ளி) :

    * உமாமகேஸ்வர விரதம்.
    * பவுர்ணமி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (சனி) :

    * மகாளய ஆரம்பம்.
    * திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உறியடி உற்சவம்.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
    * குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
    * கீழ்நோக்கு நாள்.

    15-ந்தேதி (ஞாயிறு) :

    * திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    16-ந் தேதி (திங்கள்) :

    * முகூர்த்த நாள்.
    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.
    * பிரகதி கவுரி விரதம்.
    * சமநோக்கு நாள்.
    செப்டம்பர் 3-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 9-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    3-ந்தேதி (செவ்வாய்) :

    * ரிஷி பஞ்சமி.
    * மகாலட்சுமி விரதம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாணிக்கம் விற்ற திருவிளையாடல், கயிலாச காமதேனு வாகனத்தில் வீதி உலா.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி மச்ச அவதாரம்.
    * விருதுநகர் சொக்கநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    4-ந்தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * சஷ்டி விரதம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளுதல், யானை வாகனத்தில் திருவீதி உலா.
    * விருதுநகர் சொக்கநாதர் ஆலயத்தில் சுவாமி கயிலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ருக்மணி - சத்யபாமா சமேத கிருஷ்ணன் தோற்றத்தில் கோவர்த்தனகிரியில் கண்ணாடி சப்பரத்தில் புறப்பாடு.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    5-ந்தேதி (வியாழன்) :

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் உலவாய் கோட்டை அருளிய திருவிளையாடல், நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் வீதி உலா.
    * விருதுநகர் சொக்கநாதர் யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி இரவு புஷ்ப சப்பரத்தில் ராஜாங்க அலங்காரம்.
    * கீழ்நோக்கு நாள்.

    6-ந்தேதி (வெள்ளி) :

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, விருட்சபாரூட தரிசனம்.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி.
    * விருதுநகர் சொக்கநாதர் குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    7-ந்தேதி (சனி) :

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல், இரவு சுவாமி பட்டாபிஷேகம். சுவாமியும் அம்பாளும் தங்க பல்லக்கில் பவனி.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் வீதி உலா.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி வருதல்.
    * விருதுநகர் சொக்கநாதர் விருட்ச வாகனத்தில் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் குதிரை கயிறு மாறுதல்.
    * திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் கரூர் சித்தரால் திருநெல்வேலிக்கு ஏற்பட்ட சாப நிவர்த்தி விழா.
    * விருதுநகர் சொக்கநாதர் நந்தி வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
    * கீழ்நோக்கு நாள்.

    9-ந்தேதி (திங்கள்) :

    * சர்வ ஏகாதசி.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்தருளிய லீலை.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் அதிகாலை சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரத்தில் வீதி உலா.
    * விருதுநகர் சொக்கநாதர் யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் பவனி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.
    ஆகஸ்டு 27-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    27-ந்தேதி (செவ்வாய்) :

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் காட்சி தருதல்.
    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, சேஷ வாகனத்தில் நாராயண திருக்கோலமாய் காட்சியளித்தல்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    * பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கமல வாகனத்தில் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (புதன்) :

    * பிரதோஷம்
    * மாத சிவராத்திரி.
    * திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு வெள்ளை சாத்தி வெள்ளிக் குதிரையிலும் பவனி.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு விருட்ச வாகனத்திலும் வீதி உலா.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ரெங்கநாதர் திருக்கோலக் காட்சி. மாலை வெண்ணெய் தாழி சேவை, இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    29-ந்தேதி (வியாழன்) :

    * போதாயன அமாவாசை.
    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரத உற்சவம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம்.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ராம அவதாரம், மாலை தவழ்ந்த கண்ணன் திருக்கோலக் காட்சி.
    * திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருவீதி உலா.
    * உப்பூர் விநாயகர் விருட்ச வாகனத்தில் பவனி.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் உலா, மாலை கஜமுகாசூரன் சம்ஹாரம்.
    * கீழ்நோக்கு நாள்.

    30-ந்தேதி (வெள்ளி) :

    * அமாவாசை.
    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம்.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னைமர கிருஷ்ண அலங்காரம், இரவு புஷ்ப தண்டியில் தவழும் கண்ணனாய் காட்சியருளல்.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    31-ந்தேதி (சனி) :

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.
    * உப்பூர் விநாயகர் திருக்கல்யாண உற்சவம்.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் பவனி.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
    * குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * கீழ்நோக்கு நாள்.

    1-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * இஸ்லாமிய வருடப் பிறப்பு.
    * திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலை, கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் பவனி.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை ரத ஊர்வலம், சந்தன காப்பு, யானை வாகனத்தில் உலா.
    * உப்பூர் விநாயகர் கோவிலில் ரதம்.
    * மேல்நோக்கு நாள்.

    2-ந்தேதி (திங்கள்) :

    * விநாயகர் சதுர்த்தி.
    * முகூர்த்த நாள்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாரைக்கு மோட்சம் கொடுத்தல், பூத மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி அம்பாள் பவனி.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜ அலங்காரம், மாலை அமிர்த மோகினி அலங்காரம், இரவு புஷ்ப விமானத்தில் உலா.
    * சமநோக்கு நாள்.
    ஆகஸ்டு 20-ம் தேதியில் இருந்து ஆகஸ்டு 26-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    20-ந்தேதி (செவ்வாய்) :

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.
    * சமநோக்கு நாள்.

    21-ந்தேதி (புதன்) :

    * திருச்செந்தூர், பெருவயல் ஆகிய தலங்களில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் உற்சவம் தொடக்கம்.
    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு கண்டருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (வியாழன்) :

    * திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை சிங்க கேடய சப்பரத்திலும், இரவு பல்லக்கிலும் புறப்பாடு.
    * திருப்போரூர் முருகப்பெருமான் ஆலயத்தில் சுவாமிக்கு அபிஷேகம்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (வெள்ளி) :

    * கோகுலாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி).
    * கார்த்திகை விரதம்.
    * திருநெல்வேலி டவுண் சந்தானகோபால நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம் ஆரம்பம்.
    * திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவில் சப்பரத்திலும், இரவு தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.
    * வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் தங்கரதக் காட்சி.
    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (சனி) :

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் குடவருவாயில் ஆராதனை.
    * வரகூர் உறியடி உற்சவம்.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம்.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ஆலயத்தில் உற்சவம் தொடக்கம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    25-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.
    * திருச்செந்தூர் முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், இரவு சுவாமி- அம்பாள் தங்க மயில் வாகனத்திலும் திருவீதி உலா.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு வெள்ளி சிம்ம வாகனத்திலும் பவனி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    26-ந்தேதி (திங்கள்) :

    * சர்வ ஏகாதசி.
    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச்சப்பரம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் திருவீதி உலா.
    * மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை ஊஞ்சலில் வீணை மோகினி அலங்காரம், இரவு ராமாவதார காட்சி.
    * மேல்நோக்கு நாள்.
    ×