search icon
என் மலர்tooltip icon

    இந்த வார விசேஷங்கள்

    மே மாதம் 21-ம் தேதியில் இருந்து மே மாதம் 28-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    21-ந் தேதி (செவ்வாய்)

    * மதுரை கூடலழகர் குதிரை வாகனத்தில், இரவு தசாவதாரக் காட்சி.

    * தர்மபுரி ஞானபுரீஸ்வரர் வெள்ளை ரதத்தில் பவனி.

    * காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவிலில் ரத ஊர்வலம்.

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் புறப்பாடு.

    * பழனி முருகப்பெருமான் மயில் வாகனத்தில் உலா.

    * கீழ்நோக்கு நாள்.

    22-ந் தேதி (புதன்)

    * சங்கடஹர சதுர்த்தி.

    * மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் வீதி உலா.

    * காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் யானை வாகனத்தில் பவனி.

    * காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், காலை வேணுகான கண்ணன் திருக்கோலமாய் காட்சி.

    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள் காலை ஆடும் பல்லக்கிலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் புறப்பாடு. விடையாற்று உற்சவம்.

    * தர்மபுரி ஞானபுரீஸ்வரர் குதிரை வாகனத்தில் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந் தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோவில் ரத உற்சவம்.

    * காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோவிலில் தெப்ப உற்சவம், இரவு புஷ்ப பல்லக்கு.

    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம்.

    * காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உபய நாச்சியார்களுடன் ரத ஊர்வலம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந் தேதி (வெள்ளி)

    * திருவோண விரதம்.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாட வீதி புறப்பாடு.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் வீதி உலா.

    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

    * தர்மபுரி ஞானபுரீஸ்வரர் கோவிலில் நடராஜர் தீர்த்தம், பஞ்சமூர்த்திகள் பவனி.

    * காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.

    * மேல்நோக்கு நாள்.

    25-ந் தேதி (சனி)

    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

    * குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.

    * இன்று கருட தரிசனம் நன்மை தரும்.

    * மேல்நோக்கு நாள்.

    26-ந் தேதி (ஞாயிறு)



    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குள்ளகரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    27-ந் தேதி (திங்கள்)

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் திருமஞ்சன சேவை.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    மே மாதம் 14-ம் தேதியில் இருந்து மே மாதம் 20-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    14-ந்தேதி (செவ்வாய்) :

    * வாசவி ஜெயந்தி.
    * நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.
    * மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் பவனி.
    * திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ஆலயத்தில் வருசாபிஷேகம்.
    * காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உற்சவம், வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் வீதி உலா.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா.
    * குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காலை காலிங்க நர்த்தனம், மாலை வேணு கோபாலர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
    * கீழ்நோக்கு நாள்.

    15-ந்தேதி (புதன்) :

    * சர்வ ஏகாதசி.
    * சமயபுரம் மாரியம்மன் பஞ்சப் பிரகாரம்.
    * காளையார்கோவில் சிவபெருமான், பொய்பிள்ளையை மெய்பிள்ளை ஆக்குதல், இரவு வெள்ளி விருட்ச சேவை.
    * உத்தமர்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம், இரவு புஷ்ப விமானத்தில் பவனி.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று உற்சவம்.
    * காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் கோவிலில் ரதம்.
    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.
    * சமநோக்கு நாள்.

    16-ந்தேதி (வியாழன்) :


    * முகூர்த்த நாள்.
    * பிரதோஷம்.
    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், அப்பன் சன்னிதிக்கு எழுந்தருளி, தவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.
    * பழனி பாலதண்டாயுதபாணி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
    * காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்.
    * காரைக்குடி கொப்புடைய நாயகி அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
    * நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி காலை பல்லக்கிலும், இரவு அன்ன வாகனத்திலும் வீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * நரசிம்மர் ஜெயந்தி.
    * மாயவரம் கவுரிமாயூரநாதர், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரா், நயினார்கோவில் நாகநாதர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், உத்தமர்கோவில், திருப்புகளூர், காளையார்கோவில் ஆகிய தலங்களில் ரதம் உலா.
    * பழனி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், வெண்ணெய் தாழி சேவை.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோ ரதம், இரவு புஷ்பப் பல்லக்கில் தவழும் கண்ணன் திருக்கோலம்.
    * சமநோக்கு நாள்.



    18-ந்தேதி (சனி) :

    * வைகாசி விசாகம்.
    * பவுர்ணமி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பால்குடக் காட்சி.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள், திருக்கண்ண புரம் சவுரிராஜப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி, பழனி முருகப்பெருமான் ஆலயங்களில் ரதம் வீதி உலா.
    * திருப்பத்தூர் திருத்தணி நாதர் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.
    * கீழ்நோக்கு நாள்.

    19-ந்தேதி (ஞாயிறு) :

    * மதுரை கூடலழகர் கோவிலில் ரத ஊர்வலம், இரவு தங்க சீவிகையில் சுவாமி பவனி.
    * காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்.
    * காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
    * நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் வெள்ளிக் குதிரையில் வீதி உலா.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்ப விமானத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (திங்கள்) :

    * திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் கோவிலில் விடையாற்று உற்சவம். சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.
    * தர்மபுரி ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம், புஷ்பக விமானத்தில் சுவாமி வீதி உலா.
    * காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.
    மே மாதம் 7-ம் தேதியில் இருந்து மே மாதம் 13-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    7-ந்தேதி (செவ்வாய்) :

    * அட்சய திருதியை.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் பொங்கல் விழா, இரவு மின் விளக்கு அலங்கார புஷ்ப விமானத்தில் அம்மன் வீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
    * செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருவீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.

    8-ந்தேதி (புதன்) :

    * சதுர்த்தி விரதம்.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார முத்துப் பல்லக்கில் பவனி.
    * திருச்செங்காட்டாங்குடி உத்திர பதீஸ்வரர் கோவில் ரத உற்சவம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் விடையாற்று உற்சவம், புஷ்பப் பல்லக்கில் சுவாமி வீதி உலா.
    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    9-ந்தேதி (வியாழன்) :


    * ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி.
    * ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் மின்விளக்கு அலங்கார புஷ்பப் பல்லக்கில் பவனி.
    * மாயவரம் கவுரிமாயூரநாதா், திருவாடனை ஆதிரத்தினேஸ்வரர், திருப்பத்தூர் திருத்தணிநாதர், நயினார்கோவில் நாகநாதா், திருப்புகழுர் மற்றும் திருவாதவூர் தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
    * மேல்நோக்கு நாள்.

    10-ந்தேதி (வெள்ளி) :


    * முகூர்த்த நாள்.
    * சஷ்டி விரதம்.
    * திரவுபதி அம்மன் தீக்குளி உற்சவம்.
    * மதுரை வீரராகவப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி, திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், திருமோகூர் காளமேகப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம்.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் சன்னிதி தெருவில் ரதத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.



    11-ந்தேதி (சனி) :

    * மதுரை கூடலழகர் கோவிலில் உற்சவம்.
    * மாயவரம் கவுரி மாயூரநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் பவனி வருதல்.
    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தங்க புன்னைமர வாகனத்தில் வீதி உலா.
    * அரியக்குடி சீனிவாசப் பெருமாள், பின்னங்கிளி வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    * நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி இரவு சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரத வீதியில் ரத ஊர்வலம்.
    * மேல்நோக்கு நாள்.

    12-ந்தேதி (ஞாயிறு) :

    * காளையார்கோவில் அம்பாள் கதிர்குளித்தல் தபசுக்காட்சி, இரவு சுவாமி வெள்ளி விருட்ச வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் பவனி.
    * பழனி முருகப்பெருமான் கோவிலில் உற்சவம்.
    * திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் ராம அவதாரக் காட்சி.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரதவீதியில் பவனி, இரவு மேற்கு ரத வீதியில் உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (திங்கள்) :

    * ஆழ்வார்திருநகரியில் ஒன்பது கருட சேவை.
    * திருப்பத்தூர் திருத்தணிநாதர், காளையார்கோவில் சிவன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்.
    * மதுரை கூடலழகர் காலை பல்லக்கிலும், இரவு அனுமன் வாகனத்திலும் வீதி உலா.
    * வீரபாண்டி கவுமாரியம்மன் மேற்கு ரத வீதியில் இருந்து நிலைக்கு வருதல்.
    * கீழ்நோக்கு நாள்.
    ஏப்ரல் 30-ம் தேதியில் இருந்து மே மாதம் 6-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    30-ந்தேதி (செவ்வாய்) :

    சர்வ ஏகாதசி.
    திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் உற்சவம் ஆரம்பம்.
    சென்னை சென்னகேசவப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
    வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    திருமோகூர் காளமேகப்பெருமாள் புறப்பாடு.
    செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி வருதல்.
    ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
    மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (புதன்) :

    உழைப்பாளர் தினம்.
    திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் புஷ்பப் பல்லக்கில் பவனி.
    வீரபாண்டி கவுமாரியம்மன் திருவீதி உலா.
    திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
    செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் வீதி உலா.
    ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
    கீழ்நோக்கு நாள்.

    2-ந்தேதி (வியாழன்) :

    முகூர்த்த நாள்.
    பிரதோஷம்.
    மதுரை வீரராகவப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் பூத வாகனத்தில் பவனி வருதல்.
    திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
    வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
    செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி.
    அனைத்து சிவன் கோவில்களிலும் மாலையில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை.
    மேல்நோக்கு நாள்.

    3-ந்தேதி (வெள்ளி) :


    மாத சிவராத்திரி.
    திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் யானை வாகனத்தில் பவனி.
    சென்னை சென்னகேசவப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரத உற்சவம்.
    வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி வருதல்.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    சமநோக்கு நாள்.



    4-ந்தேதி (சனி) :

    அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
    அமாவாசை.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
    திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் விருட்ச சேவை.
    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சப்தாவரணம்.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடை யழகு சேவை காண்பித்தருளல்.
    செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி.
    திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
    சமநோக்கு நாள்.

    5-ந்தேதி (ஞாயிறு) :


    திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சீராளக்கறி நைவேத்தியம்.
    திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் பிச்சாடன உற்சவம்.
    திருப்போரூர் முருகப்பெருமானுக்கு அபிஷேகம்.
    வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.
    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் திருவீதி உலா.
    மதுரை வீரராகவப் பெருமாள் பவனி வருதல்.
    செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் புறப்பாடு.
    கீழ்நோக்கு நாள்.

    6-ந்தேதி (திங்கள்) :

    கார்த்திகை விரதம்.
    சந்திர தரிசனம்.
    திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் புஷ்பக விமானத்தில் திருவீதி உலா.
    வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் பாலமுருகன் தங்க ரதக் காட்சி.
    கீழ்நோக்கு நாள்.
    ஏப்ரல் 23-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 29-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    23-ந்தேதி (செவ்வாய்) :

    வராக ஜெயந்தி.
    சென்னை சென்னகேசவப் பெருமாள், நாச்சியார் திருக்கோலமாய் காட்சியருளல், இரவு தங்கப் பல்லக்கில் பவனி.
    கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் திருவீதி உலா.
    வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
    சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    சமநோக்கு நாள்.

    24-ந்தேதி (புதன்) :

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் இரவு புண்ணிய கோடி விமானத்தில் பவனி.
    திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை.
    வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.
    செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருவீதி உலா.
    கீழ்நோக்கு நாள்.

    25-ந்தேதி (வியாழன்) :

    ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
    சென்னை சென்னகேசவப் பெருமாள் கோவில் ரதம்.
    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உற்சவம் தொடக்கம்.
    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருவீதி உலா.
    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    கீழ்நோக்கு நாள்.

    26-ந்தேதி (வெள்ளி) :

    முகூர்த்த நாள்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் வெண்ணெய்த் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் பவனி.
    வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை திருவீதி உலா.
    மேல்நோக்கு நாள்.



    27-ந்தேதி (சனி) :

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
    திருநெல்வேலி திருவேங்கடமுடையான் சன்னிதியில் ரத உற்சவம்.
    சென்னை சென்னகேசவப் பெருமாள் தங்கப் பல்லக்கிலும், புண்ணிய கோடி விமானத்திலும் பவனி.
    சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் வீதி உலா.
    செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் இரவு கண்ணாடி பல்லக்கில் திருவீதி உலா.
    மேல்நோக்கு நாள்.

    28-ந்தேதி (ஞாயிறு) :

    சென்னை சென்னகேசவப் பெருமாள் புஷ்பப் பல்லக்கில் பவனி.
    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சப்தாவரணம்.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் திருமஞ்சன சேவை.
    வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
    மேல்நோக்கு நாள்.

    29-ந்தேதி (திங்கள்) :

    முகூர்த்த நாள்.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்.
    ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி சன்னிதியில் நான்கு கருட சேவை.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
    வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு.
    செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி வருதல்.
    மேல்நோக்கு நாள்.

    ஏப்ரல் 16-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 22-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    16-ந்தேதி (செவ்வாய்) :

    நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தங்கச் சப்பரம்.
    சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் ரத உற்சவம்.
    திருஉத்திரகோசமங்கை தபசு காட்சி.
    மதுரை மீனாட்சி திக் விஜயம் செய்தருளல், சுவாமியும் அம்பாளும் இந்திர விமானத்தில் பவனி.
    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை வேணுகோபாலனாய் காட்சியருளல்.
    கீழ்நோக்கு நாள்.

    17-ந்தேதி (புதன்) :

    முகூர்த்த நாள்.
    பிரதோஷம்.
    மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், யானை வாகனத்தில் திருவீதி உலா.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், மதுரை எழுந்தருளல்.
    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் ரத உற்சவம்.
    திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சிவலிங்க பூஜை செய்தருளல்.
    மேல்நோக்கு நாள்.

    18-ந்தேதி (வியாழன்) :

    முகூர்த்த நாள்.
    திருநெல்வேலி வீரராகவபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி திருக்கல்யாணம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ரத உற்சவம், இரவு சப்தாவரணம்.
    திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ரத உற்சவம்.
    மதுரை கள்ளழகர் தல்லாகுளத்தில் எதிர்சேவை.
    சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (வெள்ளி) :

    சித்ரா பவுர்ணமி.
    புனித வெள்ளி.
    நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவிலில் ரத உற்சவம்.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    மதுரை கள்ளழகர் மாலை மாற்றி வைகை ஆற்றில் எழுந்தருளல்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வெள்ளி விருட்ச சேவை.
    விழுப்புரம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா.
    சமநோக்கு நாள்.



    20-ந்தேதி (சனி) :

    காஞ்சி சித்ரகுப்தர் திருக்கல்யாணம்.
    திருமலை திருப்பதியில் திருப்படி திருவிழா.
    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளி, பகலில் கருடரூடராய் மண்டுக மகரிஷிக்கு மோட்சம் அருளல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
    சமநோக்கு நாள்.

    21-ந்தேதி (ஞாயிறு) :

    ஈஸ்டர் திருநாள்.
    மதுரை கள்ளழகர் காலை மோகன அவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலம்.
    சென்னை சென்னகேசவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
    கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் புறப்பாடு கண்டருளல்.
    சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் விடையாற்று உற்சவம்.
    கீழ்நோக்கு நாள்.

    22-ந் தேதி (திங்கள்) :

    முகூர்த்த நாள்.
    சங்கடஹர சதுர்த்தி.
    மதுரை கள்ளழகர் அதிகாலை திருமலைக்கு எழுந்தருளல்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
    கோயம்புத்தூர் தண்டு மாரியம்மன் திருவீதி உலா.
    கள்ளக்குறிச்சி கலியப் பெருமாள் ஏகாந்த சேவை.
    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    சமநோக்கு நாள்.

    ஏப்ரல் மாதம் 9-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    9-ந்தேதி (செவ்வாய்) :

    * லட்சுமி கணேச விரதம்.
    * சதுர்த்தி விரதம்.
    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் ரத உற்சவம்.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் உற்சவம் தொடக்கம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பூத, அன்ன வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா.
    * சமயபுரம் மாரியம்மன் பூத வாகனத்தில் பவனி.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை நவநீதன் சேவை, இரவு தங்கக் குதிரையில் ராஜாங்க சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    10-ந்தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    * திருநெல்வேலி லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில் உற்சவம் தொடக்கம்.
    * திருச்செந்தூர், திருவையாறு, திருநெல்வேலி, கும்பகோணம், காஞ்சீபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய தலங்களில் சித்திரை உற்சவம்.
    * அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோவில் பூக்குழி விழா.
    * மதுரை மீனாட்சி சொக்கநாதர் கயிலாய, காமதேனு வாகனத்தில் வீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் ரத உற்சவம்.
    * மேல்நோக்கு நாள்.

    11-ந்தேதி (வியாழன்) :


    * சஷ்டி விரதம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கில் பவனி.
    * சமயபுரம் மாரியம்மன் விருட்ச சேவை.
    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள், திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி ஆலயங்களில் உற்சவம் ஆரம்பம்.
    * சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (வெள்ளி) :


    * முகூர்த்த நாள்.
    * மதுரை மீனாட்சி சொக்கநாதர், வேடர் பரிலீலை. சுவாமியும், அம்பாளும் குதிரை வாகனத்தில் வீதி உலா.
    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் பவனி.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி விடையாற்று உற்சவம்.
    * திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்.
    * மேல்நோக்கு நாள்.



    13-ந்தேதி (சனி) :

    * ஸ்ரீ ராம நவமி.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
    * திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (ஞாயிறு) :

    * தமிழ் வருடப் பிறப்பு.
    * திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு 5008 கனி அலங்காரம்.
    * நாங்குநேரி வானமாமலை பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.
    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சண்முகர் அன்னாபிஷேகம்.
    * திருச்சி உச்சிப்பிள்ளையார் பாலாபிஷேகம்.
    * மதுரை மீனாட்சி சொக்கநாதர், நந்தீஸ்வரர் மற்றும் யாழி வாகனத்தில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    15-ந்தேதி (திங்கள்) :

    * சர்வ ஏகாதசி.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரத்தில் பவனி.
    * மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம். சுவாமியும், அம்பாளும் வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா.
    * மதுரை கள்ளழகர் கோடை உற்சவம் ஆரம்பம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி விடையாற்று உற்சவம்.
    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலமாய் காட்சியளித்தல், இரவு யானை வாகனத்தில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.
    ஏப்ரல் மாதம் 2-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 8-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    2-ந்தேதி (செவ்வாய்) :

    * பிரதோஷம்.
    * தாயமங்கலம் முத்துமாரியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
    * ஒழுகைமங்கலம் மாரியம்மன் புஷ்ப படிசட்டத்தில் பவனி.
    * அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் ஆளேறும் பல்லக்கில் திருவீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
    * மேல்நோக்கு நாள்.

    3-ந்தேதி (புதன்) :

    * மாத சிவராத்திரி.
    * கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்க சூரிய பிரபையில் வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் விடையாற்று மாலை புஷ்ப யாகம்.
    * தாயமங்கலம் முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா.
    * ஒழுகைமங்கலம் மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    4-ந்தேதி (வியாழன்) :

    * அமாவாசை.
    * தாயமங்கலம் முத்துமாரியம்மன் பூத வாகனத்தில் திருவீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் பரமபதநாதன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
    * கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கேடய சப்பரத்தில் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    5-ந்தேதி (வெள்ளி) :

    * திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் ஐந்து கருட சேவை.
    * திருக்குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * தாயமங்கலம் முத்துமாரியம்மன் பொங்கல் பெரு விழா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை, இரவு தங்க கருட வாகனத்தில் வைகுண்டநாதர் சேவை.
    * ஒழுகைமங்கலம் மாரியம்மன் புஷ்ப விமானத்தில் பவனி.
    * மேல்நோக்கு நாள்.



    6-ந்தேதி (சனி) :


    * தெலுங்கு வருடப் பிறப்பு.
    * தாயமங்கலம் முத்துமாரியம்மன் மின்விளக்கு தீப அலங்கார ரத உற்சவம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை காலிங்க நர்த்தனம், மதியம் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமன் வாகனத்தில் ராமர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
    * சமநோக்கு நாள்.

    7-ந்தேதி (ஞாயிறு) :

    * ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ரத உற்சவம்.
    * திருக்குற்றாலம் குற்றாலநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
    * தாயமங்கலம் முத்துமாரியம்மன் பால்குடக் காட்சி, இரவு புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா.
    * சமயபுரம் மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (திங்கள்) :

    * கார்த்திகை விரதம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை உற்சவம் தொடக்கம், சுவாமி கற்பக விருட்சத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
    * தாயமங்கலம் முத்துமாரியம்மன் புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி.
    * கரிவலம்வந்தநல்லூர் சுவாமி யானை வாகனனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் இரவு கோ ரதம், புஷ்பப் பல்லக்கில் கல்யாண திருக்கோலம்.
    * கீழ்நோக்கு நாள்.
    மார்ச் மாதம் 26-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    26-ந்தேதி (செவ்வாய்)

    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் வீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி புன்னை மர வாகனத்தில் கண்ணாடி அலங்கார சேவை.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
    * நத்தம் மாரியம்மன் கோவில் பொங்கல் பெரு விழா, மாலையில் பூக்குழி விழா.
    * உப்பிலியப்பன் கோவில் சீனி வாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கில் பவனி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தீர்த்தவாரி, தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (புதன்) :

    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க சேவை, அம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கிலும், இரவு சுவாமி வெள்ளி அனுமன் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் பவனி.
    * நத்தம் மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு.
    * சென்னை மல்லீஸ்வரர் கோவிலில் விடையாற்று உற்சவம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (வியாழன்) :

    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு.
    * உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கு, இரவு சுவாமி தாயாருடன் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரத்தில் திருக்காட்சி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.

    29-ந்தேதி (வெள்ளி) :

    * தென்திருப்பேரை பெருமாள் ரத உற்சவம்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் இரவு புன்னை மர வாகனத்தில் பவனி.
    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் புறப்பாடு.
    * தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி பஞ்சமுக ஆஞ்சநேயர் வாகனத்தில், ராமர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
    * சென்னை மல்லீஸ்வரர் கோவிலில் விடையாற்று உற்சவம்.
    * கீழ்நோக்கு நாள்.



    30-ந்தேதி (சனி) :

    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கில் பவனி, வெண்ணெய் தாழி சேவை, இரவு சுவாமி வெள்ளி குதிரையிலும், தாயார் அலங்கார படிச்சட்டத்திலும் ஆற்றங்கரையில் வேடர்பரி உற்சவம்.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பட்சிராஜன் அலங்காரம்.
    * மேல்நோக்கு நாள்.

    31-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சர்வ ஏகாதசி.
    * ஒழுகை மங்கலம் மாரியம்மன் கோவில் உற்சவம், அன்ன வாகனத்தில் வீதி உலா.
    * திருவெள்ளாறை சுவேதாத்திரிநாதர் கோவில் ரத உற்சவம்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல், இரவு மூலவருக்கு புஷ்பாங்கி சேவை.
    * தாயமங்கலம் முத்து மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
    * சென்னை மல்லீஸ்வரர் கோவிலில் விடையாற்று உற்சவம்.
    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி(திங்கள்) :

    * திருநெல்வேலி டவுண் கரியமாணிக்கப்பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
    * ஒழுகை மங்கலம் மாரியம்மன் யாழி வாகனத்தில் பவனி.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் சப்தாவரணம்.
    * தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரிஷிமுக பர்வத பட்டாபிராமர் திருக்கோலமாய் காட்சியருளல்.
    * சென்னை மல்லீசுவரர் விடாயாற்று உற்சவம்.
    * முகூர்த்தநாள்.
    * மேல்நோக்குநாள்.

    மார்ச் 19-ம் தேதியில் இருந்து மார்ச் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    19-ந்தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுகநயினார் வருசாபிஷேகம்.
    * காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்பித்தல், இரவு அறுபத்து மூவருடன் பவனி.
    * நத்தம் மாரியம்மன் பால்குட ஊர்வலம், இரவு மின் விளக்கு அலங்கார தாமரையில் புறப்பாடு.
    * கழுகுமலை முருகப்பெருமான் வெள்ளிக்குதிரையில் பாரி வேட்டை.
    * திருச்சுழி திருமேனிநாதர் திருக்கல்யாணம், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்பப் பல்லக்கிலும் பவனி.
    * திருப்புல்லாணி ஜெகநாதர் பெருமாள் தோளுக்கினியானில் வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (புதன்) :

    * ஹோலி பண்டிகை
    * பவுர்ணமி விரதம்
    * நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில் தங்க தேரோட்டம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் கொடுத்த லீலை.
    * பழனி முருகன் கோவிலில் வெள்ளி ரதம்.
    * ராமகிரிபேட்டை கல்யாண நரசிம்ம பெருமாள் திருக்கல்யாண உற்சவம்.
    * கழுகுமலை முருகப்பெருமான், திருச்சுழி திருமேனிநாதர், கங்கைகொண்டான் வைகுண்டபதி ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பச்சைக் குதிரையில் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வியாழன்) :

    * பங்குனி உத்திரம்.
    * தென்திருப்பேரை மகர நெடுங்குழக்காதர், திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உற்சவம்.
    * சகல முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம்.
    * மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கு.
    * திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் ரத உற்சவம்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க குதிரையில் பவனி.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    22-ந்தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * மதுரை கள்ளழகர் மஞ்சள் நீராடல்.
    * ராமகிரிபேட்டை கல்யாண நரசிம்ம பெருமாள் ரத உற்சவம்.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு கருட வாகனத்திலும் தசாவதாரக் காட்சி.
    * நத்தம் மாரியம்மன் சந்தனக் குட ஊர்வலம், இரவு மின்விளக்கு அலங்காரத்துடன் வசந்த மாளிகைக்கு எழுந்தருளல்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சூரசம்ஹாரம், தங்க மயில் வாகனத்தில் பவனி.
    * சமநோக்கு நாள்.



    23-ந்தேதி (சனி) :

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பட்டாபிஷேகம்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கள்ளர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
    * திருவெள்ளாரை சுவேதாத்திரி நாதர் கோவில் உற்சவம்.
    * கும்பகோணம் சாரங்கபாணி திருக்கல்யாணம்.
    * சமநோக்கு நாள்.

    24-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சங்கடஹர சதுர்த்தி.
    * திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு எண்ணெய் காப்பு.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கல்யாணம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் எழுந்தருளல்.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு சுவாமியும் தாயாரும் சூரிய பிரபையிலும் பவனி.
    * திருவெள்ளாரை சுவேதாத்திரி நாதர் கற்பக விருட்ச வாகனத்தில் உலா, இரவு சுவாமியும் அம்பாளும் கமல பல்லக்கில் கொள்ளிடம் எழுந்தருளல்.
    * சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (திங்கள்) :

    * திருக்குறுங்குடி 5 நம்பிகள், 5 கருட வாகனத்தில் பவனி.
    * தென்திருப்பேரை பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் உற்சவம்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பெரிய வைரத் தேரில் ஊர் வலம், இரவு தங்க மயிலில் வீதி உலா.
    * உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை வெள்ளிப் பல்லக்கிலும், இரவு சுவாமி- தாயார் வெள்ளி சேஷ வாகனத்திலும் பவனி.
    * கீழ்நோக்கு நாள்.

    மார்ச் 12-ம் தேதியில் இருந்து மார்ச் 18-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    12-ந்தேதி (செவ்வாய்) :

    * கார்த்திகை விரதம்.
    * சஷ்டி விரதம்.
    * பழனி, குன்றக்குடி, மதுரை, சுவாமிமலை, திருப்பரங்குன்றம் தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் ஆரம்பம்.
    * திருச்சிமலை, கழுகுமலை, திருவாரூர், கங்கைகொண்டான், திருச்சுழி, காஞ்சீ புரம், திருப்புவனம் ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கிருஷ்ண அவதார காட்சி, இரவு சேஷ வாகனத்தில் வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * பாளையங்கோட்டை கோபாலசுவாமி கோவிலில் பங்குனி உற்சவம்.
    * திருச்சி தாயுமானவர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
    * காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் வீதி உலா.
    * திருப்புவனம் ஜெகநாத பெருமாள், பரமக்குடி முத்தாலம்மன் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (வியாழன்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வேணுவன லிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி.
    * கழுகுமலை முருகப்பெருமான் காலை புஷ்பக விமானத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் திரு வீதி உலா.
    * பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனத்தில் பவனி.
    * ராமகிரிபேட்டை கல்யாண நரசிங்கப் பெருமாள் ஆலய உற்சவம் ஆரம்பம்.
    * சமநோக்கு நாள்.

    15-ந்தேதி (வெள்ளி) :

    * காரடையான் நோன்பு
    * நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆண்டாள் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
    * நத்தம் மாரியம்மன் ஆலயத்தில் பால் காவடி உற்சவம்.
    * ராமகிரிபேட்டை கல்யாண நரசிங்கப்பெருமாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.
    * திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் அனுமன் வாகனத்தில் வீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.



    16-ந்தேதி (சனி) :

    * திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் ஆலயத்தில் கருட சேவை.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம், இரவு பூப்பல்லக்கில் பவனி.
    * பரமக்குடி முத்தாலம்மன் விருட்ச வாகனத்தில் வீதி உலா.
    * திருச்சி தாயுமானவர் வெள்ளி விருட்ச சேவை.
    * கழுகுமலை முருகப்பெருமான் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு மயில் வாகனத்திலும் உலா வருதல்.
    * சமநோக்கு நாள்.

    17-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சர்வ ஏகாதசி.
    * நாங்குநேரி வானமாமலை பெருமாள் மாலை தங்கச் சப்பரத்திலும், இரவு கண்ணாடி சப்பரத்திலும் பவனி.
    * திருச்சுழி திருமேனிநாதர் விருட்ச வாகனத்திலும் உலா, ஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டும் நிகழ்வு.
    * கழுகுமலை முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சப்பரத்திலும் பவனி.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    18-ந்தேதி (திங்கள்) :

    * பிரதோஷம்.
    * காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயங்களில் ரத உற்சவம்.
    * திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாளுக்கு காலை திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் சுவாமி பவனி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா.
    * அனைத்து சிவாலயங்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    * கீழ்நோக்கு நாள்.
    மார்ச் மாதம் 5-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 11-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    5-ந்தேதி (செவ்வாய்) :

    * கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி.
    * காளஹஸ்தி, திருகோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர், ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில், ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    6-ந்தேதி (புதன்) :

    * அமாவாசை.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிர மணியர் கோவிலில் பத்திர தீபம்.
    * ராமேஸ்வரம் ஆலயத்தில் சுவாமி- அம்பாள் காலை இந்திர விமானத்திலும், இரவு தங்க விருட்சத்திலும் பவனி.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் ரத உற்சவம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் தெப்ப உற்சவம்.
    * மேல்நோக்கு நாள்.

    7-ந்தேதி (வியாழன்) :

    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
    * திருகோகர்ணம் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.



    8-ந்தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * சந்திர தரிசனம்.
    * திருநெல்வேலி டவுண் மேலரத வீதியில் உள்ள பரமேஸ்வரி அம்மன் கோவில் வருசாபிஷேகம்.
    * திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
    * திருவைகாவூர் சிவபெருமான் திருவீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.

    9-ந்தேதி (சனி) :

    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
    * தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் ஆலயத்தில் தீர்த்தவாரி, யாழி வாகனத்தில் அம்மன் புறப்பாடு.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    10-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * சதுர்த்தி விரதம்.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம், அன்ன வாகனத்தில் வீதி உலா.
    * கோயம்புத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில் அம்மன் புறப்பாடு.
    * தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் திருவீதி உலா.
    * ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    11-ந்தேதி (திங்கள்) :

    * நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் தொடக்கம்.
    * மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை ராஜாங்க அலங்காரம், இரவு சிம்ம வாகனத்தில் வீதி உலா.
    * திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.
    ×