search icon
என் மலர்tooltip icon

    இந்த வார விசேஷங்கள்

    பிப்ரவரி மாதம் 26-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 4-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    26-ந்தேதி (செவ்வாய்) :

    * கோயம்புத்தூர் கோணியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (புதன்) :

    * காளகஸ்தி, திருகோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவ பெருமான் உற்சவம் ஆரம்பம்.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் புலி வாகனத்தில் பவனி.
    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் வீதி உலா.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (வியாழன்) :

    * கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு.
    * திருகோகர்ணம் சிவபெருமான் திருவீதி உலா.
    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி வெள்ளி கயிலாய வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பவனி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.

    1-ந்தேதி (வெள்ளி) :


    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி வருதல்.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.



    2-ந்தேதி (சனி) :

    * சர்வ ஏகாதசி.
    * ராமேஸ்வரம் ஆலயத்தில் சுவாமி- அம்பாள் தங்க விருட்ச சேவை.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் பவனி.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    * மதுரை கூடலழகர் திருவீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    3-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * பிரதோஷம்.
    * காளகஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
    * ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் முத்தங்கி சேவை, தங்கப் பல்லக்கில் பவனி.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (திங்கள்) :

    * மகா சிவராத்திரி.
    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் பத்திர தீப உற்சவம் ஆரம்பம்.
    * திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் பஞ்சமுக அர்ச்சனை.
    * காளகஸ்தி, திருகோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவ பெருமான் விருட்ச சேவை.
    * ராமேஸ்வரம் சுவாமி-அம்பாள் மின்விளக்கு அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் பவனி, இரவு தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு.
    * கோயம்புத்தூர் கோணியம்மன் வெள்ளை யானை வாகனத்தில் பவனி.
    * மூங்கிலனை காமாட்சியம்மன் கோவில் பெருந்திருவிழா.
    * கடம்பூர் சண்முகநாதர் ஆலயத்தில் பூக்குழி விழா.
    * மேல்நோக்கு நாள்.

    பிப்ரவரி 19-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    19-ந்தேதி (செவ்வாய்) :

    மாசி மகம்.
    பவுர்ணமி.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரத உற்சவம்.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவம்.
    கும்பகோணம் சாரங்கபாணி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஆகிய தலங்களில் தெப்ப உற்சவம்.
    திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் அருளித்தல்.
    மதுரை இம்மையில் நன்மை தருவார் மாசி மக தீர்த்தம்.
    காரமடை அரங்கநாதர் கோவில் ரத உற்சவம்.
    கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (புதன்) :

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம், இரவு புஷ்ப சப்பரத்தில் பவனி.
    காரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.
    காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.
    கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வியாழன்) :

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.
    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
    கும்பகோணம் சக்கரபாணி விடையாற்று உற்சவம்.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    மேல்நோக்கு நாள்.

    22-ந்தேதி (வெள்ளி) :


    முகூர்த்த நாள்.
    சங்கடஹர சதுர்த்தி.
    ஆழ்வார் திருநகரியில் பெருமாள் ரத உற்சவம்.
    காரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம்.
    சமநோக்கு நாள்.



    23-ந்தேதி (சனி) :

    ஆழ்வார் திருநகரியில் பெருமாள் தெப்ப உற்சவம்.
    காரமடை அரங்கநாதர் ஆலயத்தில் இறைவனுக்கு சாற்று முறை சந்தான சேவை.
    காங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.
    குச்சனூர் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை.
    சமநோக்கு நாள்.

    24-ந்தேதி (ஞாயிறு) :

    முகூர்த்த நாள்.
    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி வருதல்.
    காரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
    திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் திருமஞ்சன சேவை.
    சமநோக்கு நாள்.

    25-ந்தேதி (திங்கள்) :

    ராமேஸ்வரர் ராமநாதர் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா ஆரம்பம், சுவாமி தங்க நந்தி வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அம்ச வாகனத்திலும் பவனி.
    காங்கேயநல்லூர் முருகப்பெருமான் ஆலயத்தில் லட்சதீப காட்சி.
    ராமநாதபுரம் செட்டித் தெரு முத்தாலம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    கீழ்நோக்கு நாள்.
    பிப்ரவரி 12-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 18-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    12-ந் தேதி (செவ்வாய்)

    ரத சப்தமி.

    குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் அம்மன் திருமாலை உற்சவம்.

    திருப்பதி வெங்கடேசப் பெருமாள் ரத சப்தமி விழா.

    திருச்செந்தூர் சுப்பிரமணியர் காலை பூங்கோவில் சப்பரத்திலும், இரவு தங்க முத்து கிடா வாகனத்திலும் பவனி.

    திருப்போரூர் முருகப்பெருமான் பிரணவம் உபதேசித்து அருளிய காட்சி.

    மதுரை கூடலழகர் காலை கள்ளழகர் திருக்கோலம், இரவு கருட சேவை.

    திருமயம் ஆண்டாள் உச்சிகொண்டா கூடாரை வள்ளி உற்சவம்.

    கீழ்நோக்கு நாள்.

    13-ந் தேதி (புதன்)

    பீஷ்மா அஷ்டமி.

    கார்த்திகை விரதம்.

    மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேஷ வாகனத்தில் வீதி உலா.

    திருமயம் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல்.

    கும்பகோணம் சக்கரபாணி சக்கர சேஷ வாகனத்தில் பவனி.

    திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்க முத்துக் கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கருட சேவை.

    கீழ்நோக்கு நாள்.



    14-ந் தேதி (வியாழன்)

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.

    ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவம் ஆரம்பம்.

    காங்கேயநல்லூர் முருகப்பெருமான் தெய்வானை திருமண காட்சி.

    மதுரை கூடலழகர் வெண்ணெய் தாழி சேவை, கிருஷ்ண அலங்கார காட்சியருளல்.

    காரமடை அரங்கநாதர் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.

    திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.

    மேல்நோக்கு நாள்.

    15-ந் தேதி (வெள்ளி)

    முகூர்த்த நாள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் சுவாமி காலையில் கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி.

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல், தங்க தோளுக்கினியானில் பவனி.

    மதுரை இம்மையில் நன்மை தருவார் விருட்ச வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

    சமநோக்கு நாள்.

    16-ந் தேதி (சனி)

    வைஷ்ணவ ஏகாதசி.

    திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் சண்முகர் உருகு சட்ட சேவை, மாலை தங்கச் சப்பரத்தில் பவனி.

    காரமடை அரங்கநாதர் கருட வாகனத்தில் வீதி உலா.

    பெருவயல் முருகப்பெருமான் காலை சண்முக உற்சவம்.

    காங்கேயநல்லூர் முருகப்பெருமான் ரத உற்சவம்.

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.

    மேல்நோக்கு நாள்.

    17-ந் தேதி (ஞாயிறு)

    முகூர்த்த நாள்.

    பிரதோஷம்.

    திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தி, பகலில் பச்சை சாத்தி வழிபாடு.

    பாளையங்கோட்டை ராமசுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

    மதுரை இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம்.

    காரமடை அரங்கநாதர் கல்யாண உற்சவம்.

    திருப்போரூர் முருகப்பெருமான் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.

    மதுரை கூடலழகர் உபய நாச்சியார்களுடன் தங்க சிவிகையில் ஏகாந்த சேவை.

    சமநோக்கு நாள்.

    18-ந் தேதி (திங்கள்)

    முகூர்த்த நாள்.

    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    ஆழ்வார் திருநகரி பெருமாள் கருட வாகனம்.

    காஞ்சி காமாட்சி அம்மன் வெள்ளி ரதத்தில் வீதி உலா.

    மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் ரத உற்சவம்.

    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் திருமலை ராஜன் பட்டணம் எழுந்தருளல்.

    கும்பகோணம் சக்கரபாணி வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா.

    திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் பவனி.

    மேல்நோக்கு நாள்.
    ஜனவரி மாதம் 29-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 4-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    29-ந்தேதி (செவ்வாய்) :

    சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
    கீழ்நோக்கு நாள்.

    30-ந்தேதி (புதன்) :

    முகூர்த்த நாள்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    திருப்பதி ஏழுமலையப்பன் ஆலயத்தில் சுவாமிக்கு சகசர கலசாபிஷேகம்.
    சமநோக்கு நாள்.

    31-ந்தேதி (வியாழன்) :

    சர்வ ஏகாதசி.
    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம். காலை சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் சுவாமி பவனி.
    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    சமநோக்கு நாள்.

    1-ந்தேதி (வெள்ளி) :

    முகூர்த்த நாள்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் பவனி வருதல்.
    திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    கீழ்நோக்கு நாள்.



    2-ந்தேதி (சனி) :

    சனிப் பிரதோஷம்.
    மாத சிவராத்திரி.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீப உற்சவம் ஆரம்பம்.
    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் திருவீதி உலா.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
    இன்று மாலை அனைத்து சிவாலயங்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
    கீழ்நோக்கு நாள்.

    3-ந்தேதி (ஞாயிறு) :

    திருவாவடுதுறை சிவன் கோவில், கல்லிடைக்குறிச்சி சூரியநயினார் கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி வருதல்.
    வைத்தீஸ்வரன் கோவிலில் முத்துக்குமாரசாமி உற்சவம் தொடக்கம்.
    திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலகாப்பு உற்சவ காட்சி.
    மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (திங்கள்) :

    தை அமாவாசை.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீபம்.
    மதுரை மீனாட்சி அம்மன் வைர கிரீடம் சாற்றி அருளல்.
    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் நாச்சியார் திருக்கோலம், இரவு யாழி வாகனத்தில் பவனி.
    மேல்நோக்கு நாள்.
    ஜனவரி 22-ம் தேதியில் இருந்து ஜனவரி 28-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    22-ந்தேதி (செவ்வாய்) :

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சவுந்திர சபா நடனம்.
    * கோயம்புத்தூர் பால தண்டாயுதபாணி ஆலயத்தில் தெப்ப உற்சவம்.
    * சென்னை சிங்காரவேலவர் கோவில் தெப்ப உற்சவம்.
    * திருச்சேறை சாரநாதர் ஆலயத்தில் சப்தாவரணம்.
    * பழனி முருகப்பெருமான் தங்க ரதத்தில் பவனி.
    * காஞ்சீபுரம் வரதராஜர் தெப்ப உற்சவம்.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (புதன்) :


    * முகூர்த்த நாள்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம், சுவாமி ரிஷப வாகனத்தில் வீதி உலா.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் ஆரம்பம்.
    * பழனி முருகப்பெருமான் பெரிய தங்க மயில் வாகனத்தில் பவனி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (வியாழன்) :

    * சங்கடஹர சதுர்த்தி.
    * பழனி முருகப்பெருமான் காலை தோளுக்கினியானிலும், இரவு தெப்பத் தேரிலும் பவனி.
    * திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    * கீழ்நோக்கு நாள்.

    25-ந்தேதி (வெள்ளி) :

    * திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில் வருசாபிஷேகம்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
    * திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை.
    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் பவனி வருதல்.
    * திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிக்கை புறப்பாடு கண்டருளல்.
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    * மேல்நோக்கு நாள்.



    26-ந்தேதி (சனி) :

    * குடியரசு தினம்.
    * திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    * சமநோக்கு நாள்.

    27-ந்தேதி (ஞாயிறு) :

    * முகூர்த்த நாள்.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் கருட சேவை.
    * சமநோக்கு நாள்.

    28-ந்தேதி (திங்கள்) :

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.
    ஜனவரி 15-ம் தேதியில் இருந்து ஜனவரி 21-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    15-ந் தேதி (செவ்வாய்) :

    பொங்கல் திருநாள்.
    சபரிமலை மகர ஜோதி தரிசனம்.
    அனைத்து சிவன் கோவில்களிலும் அயன தீர்த்தம்.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டின திருவிளையாடல்.
    மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோவிலில் கல் யானைக்கு கரும்பு அளித்த லீலை.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நின்ற திருக்கோல காட்சி.
    காஞ்சி உலகளந்த பெருமாள் கருட சேவை.
    சமநோக்கு நாள்.

    16-ந்தேதி (புதன்) :

    மாட்டுப் பொங்கல்.
    திருவள்ளுவர் தினம்.
    கார்த்திகை விரதம்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க தோளுக்கினியானில் பெரியாழ்வார் சன்னிதிக்கு எழுந்தருளி, இரவு ஆண்டாள் சன்னிதியில் முத்துக்குறி கண்டருளல்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், சுவாமி நந்தீஸ்வரர் வாகனத்திலும், அம்பாள் யாழி வாகனத்திலும் பவனி.
    காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சிறிய வைர தேரில் உற்சவம்.
    கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (வியாழன்) :

    சர்வ ஏகாதசி.
    திருச்சேறை சாரநாதர் ராம அவதார காட்சி, இரவு அனுமன் வாகனத்தில் வீதி உலா.
    குன்றக்குடி சிவபெருமான் தங்க ரதத்தில் வீதி உலா.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவில் தெப்ப உற்சவம், இரவு தங்க குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கில் வீதி உலா.
    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி யாழி வாகனத்தில் பவனி வருதல்.
    கீழ்நோக்கு நாள்.

    18-ந்தேதி (வெள்ளி) :


    பிரதோஷம்.
    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் பவனி.
    காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில் ரத உற்சவம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காலை எடுப்பு தேர், இரவு சப்தாவரணம்.
    திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வீதி உலா.
    திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    மேல்நோக்கு நாள்.

    19-ந்தேதி (சனி) :

    குன்றக்குடி முருகப்பெருமான் ஆலயத்தில் வெள்ளி ரதம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காலை தங்கப் பல்லக்கில் சுவாமி- அம்பாள் விருட்ச சேவை.
    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சுவாமி திருவீதி உலா.
    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சுவாமி மயில் வாகனத்தில் புறப்பாடு.
    திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிஷேகம், இரவு பூ சப்பரத்தில் பவனி.
    சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (ஞாயிறு) :

    பவுர்ணமி.
    திருநெல்வேலி டவுண் கரியமாணிக்கப் பெருமாள் கோவில் வருசாபிஷேகம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கதிரறுப்பு நிகழ்வு.
    பழனி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.
    கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.
    காஞ்சி உலகளந்த பெருமாள் சாற்று முறை.
    திருப்புடைமருதூர், திருவிடைமருதூர், குன்றக்குடி ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.
    திருச்சேறை சாரநாதர் வெண்ணெய் தாழி சேவை.
    சமநோக்கு நாள்.

    21-ந்தேதி (திங்கள்) :

    தைப்பூசம்.
    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் ரத உற்சவம்.
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வண்டியூரில் எழுந்தருளி தெப்ப உற்சவம்.
    குன்றக்குடி முருகப்பெருமான் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.
    சகல முருகன் கோவில்களிலும் தைப்பூச திருவிழா.
    வடலூர் ராமலிங்க அடிகளார் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
    சமயபுரம் மாரியம்மன் வட காவிரிக்கு கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளல்.
    மேல்நோக்கு நாள்.

    ஜனவரி 8-ம் தேதியில் இருந்து ஜனவரி 14-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    8-ந்தேதி (செவ்வாய்) :

    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய்க் காப்பு உற்சவம், 16 வண்டி சப்பரத்தில் பவனி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் உற்சவம் ஆரம்பம், சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு.
    * மதுரை செல்லத்தம்மன் புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி.
    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
    * மேல்நோக்கு நாள்.

    9-ந்தேதி (புதன்) :


    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கள்ளழகர் திருக்கோலமாய் இரவு சந்திர பிரபையில் பவனி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதி உலா.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    * மேல்நோக்கு நாள்.

    10-ந்தேதி (வியாழன்) :

    * சதுர்த்தி விரதம்.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தைப்பூச உற்சவம் ஆரம்பம், கற்பக விருட்ச வாகனத்தில் பவனி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கண்ணன் திருக்கோலமாய் மாலை தந்த பரங்கி நாற்காலியில் புறப்பாடு.
    * பெருஞ்சேரி வாகீஸ்வரர் பவனி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
    * மேல்நோக்கு நாள்.

    11-ந்தேதி (வெள்ளி) :

    * மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் சுவாமி பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் புறப்பாடு.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை, இரவு தங்க சேஷ வாகனத்தில் பவனி.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் காலை தங்க சப்பரத்தில் வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.



    12-ந்தேதி (சனி) :

    * விநாயகர் சஷ்டி.
    * திருநெல்வேலி, குன்றக்குடி, பழனி, திருச்சுழி, காளையார்கோவில், சுவாமி மலை ஆகிய திருத் தலங்களில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்.
    * மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், சுந்தரராஜ கோலமாய் காட்சியளித்தல், இரவு தங்க அம்ச வாகனத்தில் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (ஞாயிறு) :

    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி- அம்பாள் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு கண்டருளல்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம்.
    * காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள், திருச்சேறை சாரநாதர் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (திங்கள்) :

    * போகி பண்டிகை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் ஊர்வலம், இரவு தங்க கவசம் அணிந்து ஆளேறும் பல்லக்கில் பவனி.
    * திருச்சேறை சாரநாதர் சூரிய பிரபையில் வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சி தருதல்.
    * மதுரை மீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ரத்தின சிம்மாசனத்தில் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.
    ஜனவரி 1-ம் தேதியில் இருந்து ஜனவரி 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    1-ந்தேதி (செவ்வாய்) :

    ஆங்கில வருடப் பிறப்பு.
    சுமார்த்த ஏகாதசி.
    திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயருக்கு ராஜ அலங்காரம்.
    மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
    சமநோக்கு நாள்.

    2-ந்தேதி (புதன்) :

    வைஷ்ணவ ஏகாதசி.
    ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
    மதுரை செல்லத்தம்மன் யானை வாகனத்தில் திருவீதி உலா.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பவனி வருதல்.
    கீழ்நோக்கு நாள்.

    3-ந்தேதி (வியாழன்) :

    பிரதோஷம்.
    மதுரை செல்லத்தம்மன் காலை சப்பரத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி.
    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    இன்று மாலை அனைத்து சிவாலயங்களிலும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
    பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.
    சமநோக்கு நாள்.

    4-ந்தேதி (வெள்ளி) :

    மாத சிவராத்திரி.
    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
    திருத்தணி முருகப்பெருமான் பவனி வருதல்.
    மதுரை செல்லத்தம்மன் சப்பரத்தில் பவனி.
    சமநோக்கு நாள்.



    5-ந்தேதி (சனி) :

    அனுமன் ஜெயந்தி.
    அமாவாசை.
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை.
    மதுரை செல்லத்தம்மன் விருட்ச சேவை.
    திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
    வீரராகவபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு புஷ்பாங்கி சேவை.
    கீழ்நோக்கு நாள்.

    6-ந்தேதி (ஞாயிறு) :

    மதுரை செல்லத்தம்மன் காலை சிம்மாசனத்தில் புறப்பாடு, இரவு பட்டாபிஷேகம், புஷ்ப சப்பரத்தில் பவனி.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
    கீழ்நோக்கு நாள்.

    7-ந்தேதி (திங்கள்) :

    மதுரை செல்லத்தம்மன் ரத உற்சவம்.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கேவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
    மேல்நோக்கு நாள்.

    டிசம்பர் மாதம் 25-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    25-ந் தேதி (செவ்வாய்)

    கிறிஸ்துமஸ் பண்டிகை

    சங்கடஹர சதுர்த்தி

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் திருவாய்மொழி திருநாள் உற்சவ சேவை.

    சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

    சகல ஆலயங்களிலும் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    மேல்நோக்கு நாள்.

    26-ந் தேதி (புதன்)

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.



    திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.

    கீழ்நோக்கு நாள்.

    27-ந் தேதி (வியாழன்)

    மதுரை கூடலழகர், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் ஆலயங்களில் திருவாய்மொழி சாற்றுமுறை.

    பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.

    திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் திருமஞ்சன சேவை.

    சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    கீழ்நோக்கு நாள்.

    28-ந் தேதி (வெள்ளி)

    ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.

    திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

    திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    கீழ்நோக்கு நாள்.

    29-ந் தேதி (சனி)

    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அஷ்டமி பிரதட்சணம்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

    திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

    மேல்நோக்கு நாள்.

    30-ந் தேதி (ஞாயிறு)

    மதுரை வடக்குவாசல் செல்லத்தம்மன் உற்சவம் ஆரம்பம்.

    கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

    இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.

    சமநோக்கு நாள்.

    31-ந் தேதி (திங்கள்)

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    சமநோக்கு நாள்.
    டிசம்பர் மாதம் 18-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    18-ந்தேதி (செவ்வாய்) :

    * வைகுண்ட ஏகாதசி.
    * சகல விஷ்ணு ஆலயங்களிலும் இராபத்து உற்சவம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி, இரவு வெள்ளி யானை வாகனத்திலும் சுவாமி பவனி.
    * குற்றாலம் குற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரத உற்சவம்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.
    * காஞ்சீபுரம் பச்சை வண்ணன், பவள வண்ணன் கருட பரமபத வாசல் திறப்பு விழா.
    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (புதன்) :

    * திருப்பதி நவநதி மகா தீர்த்தம்.
    * நாச்சியார்கோவில் தெப்ப உற்சவம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை ருத்ராட்சி விமானத்தில் பிட்டுக்கு மண்சுமந்த லீலை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.
    * சங்கரன்கோவில் சங்கரநாராயணர் யானை வாகனத்திலும், கோமதி அம்மன் அன்ன வாகனத்திலும் வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (வியாழன்) :


    * பிரதோஷம்.
    * சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சுவாமி கயிலாய வாகனத்தில் வீதி உலா.
    * சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் அஷ்டாபிஷேகம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தராய் இரவு வெள்ளி குதிரையில் சேவகனாக காட்சியருளல்.
    * வீரவநல்லூர் சுவாமி விசேஷ அலங்கார சப்பரத்தில் பவனி.
    * காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய ஆலயங்களில் உற்சவ சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வெள்ளி) :

    * சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஈசன் தங்க ரதத்தில் பிச்சாண்டவர் திருக்கோல காட்சி.
    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் மகா ரத உற்சவம், மாலை ஆனந்த தாண்டவ காட்சி.
    * சங்கரன்கோவில் சங்கரநாராயணர் தந்த பல்லக்கில் வீதி உலா.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.
    * மேல்நோக்கு நாள்.



    22-ந்தேதி (சனி) :

    * பவுர்ணமி.
    * தத்தாத்ரேயர் ஜெயந்தி.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இரவு நடராஜர் மகா அபிஷேகம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் பஞ்ச பிரகார உற்சவம், இரவு வெள்ளி ரதம்.
    * சிதம்பரம் நடராஜ மூர்த்தி- சிவகாமசுந்தரி ரத உற்சவம், இரவு இருவரும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளல்.
    * சங்கரன் கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் ரத உற்சவம்.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் திருவாய்மொழி உற்சவம்.
    * சமநோக்கு நாள்.

    23-ந்தேதி (ஞாயிறு) :

    * ஆருத்ரா தரிசனம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தாம்பிரசபா நடனம்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் ஊஞ்சல் சேவை.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராட்டினம், பொன்னூஞ்சல்.
    * ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகருக்கு இறைவன் உபதேசம் வழங்கிய காட்சி.
    * சிதம்பரம் ஆடல்வல்லபிரான் சித்திரசபையில் சிதம்பர ரகசிய பூஜை.
    * மேல்நோக்கு நாள்.

    24-ந்தேதி (திங்கள்) :

    * காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கமன்னார், மதுரை கூடலழகர் ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    டிசம்பர் 11-ம் தேதி முதல் டிசம்பர் 17-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    11-ந்தேதி (செவ்வாய்) :

    * சதுர்த்தி விரதம்.
    * திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் ரத உற்சவம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆண்டாள் திருக்கோலம்.
    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்டராமர் திருக்கோலமாய் காட்சி தருதல்.
    * குரங்கணி முத்துமாலையம்மன் பவனி.
    * மேல்நோக்கு நாள்.

    12-ந்தேதி (புதன்) :

    * முகூர்த்த நாள்.
    * திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.
    * காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், காலிங்கநர்த்தன காட்சி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கண்ணன் திருக்கோலமாய் காட்சி தருதல்.
    * மேல்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வியாழன்) :

    * முகூர்த்த நாள்.
    * சஷ்டி விரதம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம், வெள்ளி சீவிகையில் சுவாமி பவனி.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பரமபத நாதராய் திருக்காட்சி அருளல்.
    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர், காஞ்சி வரதராஜர் ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
    * மேல்நோக்கு நாள்.

    14-ந்தேதி (வெள்ளி) :

    * முகூர்த்த நாள்.
    * வள்ளியூர் சுப்பிரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்.
    * திருநெல்வேலி, திருச்செந்தூர், மதுரை, சிதம்பரம், சுசீந்திரம் ஆகிய தலங்களில் திருவாதிரை உற்சவம் ஆரம்பம்.
    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் யோகாம்பிகை வடிவமாய் திருக்காட்சி.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்சம்.
    * கும்பகோணம் சாரங்கபாணி, திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமொழி திருநாள் தொடக்கம்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், வாகாசூரவதம் திருக்கோலமாய் காட்சி.
    * மேல்நோக்கு நாள்.



    15-ந்தேதி (சனி) :

    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் முதல் அமைச்சர் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.
    * சிதம்பரம் சிவபெருமான் காலை சந்திர பிரபையிலும், இரவு அன்ன வாகனத்திலும் பவனி.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருவீதி உலா.
    * மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் பகல் பத்து உற்சவ சேவை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பட்டாபிராமர் திருக்கோலக் காட்சி.
    * கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (ஞாயிறு) :

    * மார்கழி மாத பூஜை ஆரம்பம்.
    * அனைத்து ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் திரிபுர சம்ஹார லீலை, இரவு கயிலாச பர்வத வாகனத்தில் சுவாமி வீதி உலா.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோவர்த்தன லீலை.
    * ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவரகுணமங்கை ஆகிய தலங்களில் பகல்பத்து உற்சவ சேவை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், முரளி கண்ணன் திருக்கோல காட்சி.
    * மேல்நோக்கு நாள்.

    17-ந்தேதி (திங்கள்) :

    * குற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு.
    * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மாலை முத்துக்குறி கண்டருளல்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுனன் மண்டபம் எழுந்தருளல்.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், மோகன அவதாரம்.
    * சமநோக்கு நாள்.

    டிசம்பர் மாதம் 4-ம் தேதியில் இருந்து டிசம்பர் மாதம் 10-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    4-ந்தேதி (செவ்வாய்) :

    பிரதோஷம்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
    திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
    சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    திருநாகேஸ்வரம் ஆலயத்தில் அருளும் திருநாகேஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.
    சகல சிவன் கோவில்களிலும் மாலை வேளையில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.
    சமநோக்கு நாள்.

    5-ந்தேதி (புதன்) :

    மாத சிவராத்திரி.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் திருவீதி உலா.
    திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ஆகியோர் புறப்பாடு கண்டருளல்.
    கீழ்நோக்கு நாள்.

    6-ந்தேதி (வியாழன்) :

    அமாவாசை.
    திருநாகேஸ்வரம் ஆலயத்தில் திருநாகேஸ்வரர் பவனி வருதல்.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் புறப்பாடு கண்டருளல்.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
    திருப்பதி ஏழுமலையப்பன் ஆலயத்தில் புஷ்பாங்கி சேவை.
    சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    சமநோக்கு நாள்.

    7-ந்தேதி (வெள்ளி) :

    மதுரை கூடலழகர் சன்னிதியில் பெரியாழ்வார் வென்ற கிளி விலாசம் எழுந்தருளல். கூடலழகர் கருடோற்சவம்.
    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
    திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
    சமநோக்கு நாள்.



    8-ந்தேதி (சனி) :

    திருச்சானூர் பத்மாவதி தாயார் திருவீதி உலா.
    திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் புறப்பாடு கண்டருளல்.
    சகல விஷ்ணு ஆலயங்களிலும் திருப்பல்லாண்டு உற்சவம் ஆரம்பம்.
    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
    கீழ்நோக்கு நாள்.

    9-ந்தேதி (ஞாயிறு) :

    ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆகிய தலங்களில் பகற்பத்து உற்சவ சேவை.
    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
    திருச்சானூர் பத்மாவதி தாயார் புறப்பாடு கண்டருளல்.
    இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
    கீழ்நோக்கு நாள்.

    10-ந்தேதி (திங்கள்) :

    சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம், 1008 கலசாபிஷேகம்.
    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், வேணுகான கண்ணன் திருக்கோலக் காட்சி.
    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காலிங்க நர்த்தன திருக்கோலம்.
    திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர், குன்றக்குடி, திருமயிலை ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
    திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொலு தர்பார் காட்சி.
    கீழ்நோக்கு நாள்.
    ×