என் மலர்
வழிபாடு

சந்தன கூடு நிகழ்ச்சி நடந்ததை படத்தில் காணலாம்.
தாராவியில் 57-வது ஆண்டு சந்தன கூடு திருவிழா: முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
- துதிபாடும் நிகழ்ச்சி தினமும் நடந்து வருகிறது.
- பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தாராவியில் 57-வது சந்தன கூடு திருவிழா கடந்த 2-ந் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை தாராவி 90 அடி சாலை சங்கம் கல்லியில் உள்ள அஸ்தானா தர்கா மற்றும் சன்னி ஜிலானி மசூதியில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி நீராட்டு விழாவும், மறுநாள் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது.
இதனை தொடர்ந்து துதிபாடும் நிகழ்ச்சி தினமும் மாலை 6 மணி அளவில் நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் எம்.பி, ராகுல் செவாலே, சயான் கோலிவாடா பா.ஜனதா எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூடு ஊர்வலமாக சங்கம் கல்லி, 90 அடிசாலை, கும்பர்வாடா, ஷாகுநகர், ஜாஸ்மின் மில் ரோடு, மாகி பாடக், படி மஸ்ஜித், ஹோலி மைதானம், காலக்கில்லா எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சங்கம் கல்லி வந்தடைந்தது.
அதன்பின்னர் சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது. தொழுகைக்கு பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.