search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாங்கனி திருவிழா:காரைக்கால் அம்மையார் கோவிலில் திரண்ட பக்தர்கள்
    X

    மாங்கனி திருவிழா:காரைக்கால் அம்மையார் கோவிலில் திரண்ட பக்தர்கள்

    • சிவன்-பார்வதி பூஜை நிகழ்ச்சி நடந்தது
    • கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    இறைவனின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை நினைவுகூறும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாங்கனி திருவிழா கடந்த மாதம் (ஜூன்) 30-ந் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. கடந்த 1-ந் தேதி காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவின் 3-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக, 2-ந் தேதி பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

    4-ம் நாள் நிகழ்ச்சியாக 3-ந் தேதி அதிகாலை இறைவன் அம்மையாருக்கு காட்சி தரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு நடைபெறும் மாங்கனி திருவிழாவில் பல்வேறு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் காரைக்கால் அம்மையாருக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் மாங்கனி திருவிழாவிற்கு வருகை தந்தனர். காலை முதல் இரவு வரை கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    மாங்கனி திருவிழா பந்தலின் கீழே திறக்கப்பட்டுள்ள பல்வேறு கடைகளில் பொருட்கள் மலிவு விலைக்கு விற்கப்பட்டதால் பக்தர்கள் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கி சென்றனர்.

    நேற்று காரைக்கால் அம்மையார் கோவிலில் சிவன்-பார்வதி பூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில் காரைக்கால் அம்மையார் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    Next Story
    ×