search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் நந்தி...
    X

    லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் நந்தி...

    • நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர், எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை யாரும் கண்டறியாத ஒன்றாக இருக்கிறது.
    • ஒரு குளத்தைச் சுற்றிய நிலையில் இந்த ஆலயம் முழுமை அடைந்து விடும்.

    இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு, வியக்க வைக்கும் பல கட்டிடக் கலை கொண்ட கோயில்கள் ஏராளம். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள ஒரு நந்தி கோயிலில், நந்தியின் வாயிலிருந்து தொடர்ச்சியாக நீர் வடியும் அதிசயம் நிகழ்ந்து வருகின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயில்.

    இந்த கோயிலின் சிறப்பே அங்கு அமைந்துள்ள நந்தியின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றாக ஊறி கொட்டிக் கொண்டிருப்பது தான். அதே போல் எல்லா சிவாலயங்களிலும், நந்தி சிவபெருமானுக்கு எதிராக தான் அமைக்கப்பட்டிருப்பார். ஆனால் இந்த ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயிலில், நந்தி பெருமானோ சிவ லிங்கத்திற்கு மேல் உள்ள தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.


    அதோடு அந்த நந்தியிலிருந்து வடியும் தீர்த்தம், சிவ லிங்கத்தின் தலையில் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிவனை அபிஷேகம் செய்வது போன்று அந்த தீர்த்தம் விழுந்து பின்னர் அந்த நீர், அங்குள்ள தெப்பக்குளத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நதியின் வாயில் எப்படி நீர் ஊறுகின்றது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. சேற்றில் புதைந்து கிடந்துள்ளது. அதனை, சில தன்னார்வலர்கள் 1997ம் ஆண்டு கண்டுபிடித்து கோயிலை மீட்டெடுத்துள்ளனர்.


    இந்த கோயில் அமைந்துள்ள இடம் அப்பகுதியிலேயே மிக தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் நீரூற்று, நந்தி வாயின் வழியே வெளியேறும் வண்ணம் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நீர் கீழே உள்ள லிங்கத்தின் மீது விழுந்து, பின்னர் குளத்தில் கலப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிசயம் நிகழ்வாதாக கூறுகின்றனர்.

    நந்தி தீர்த்தம் விழும் சிவலிங்கத்திற்கு என்று தனி சன்னதியோடு, இந்த கோயிலில் விநாயகருக்கு என்று தனி சன்னதியும், நவகிரகத்திற்கு என்று சன்னதிகள் உண்டு.

    Next Story
    ×