என் மலர்
வழிபாடு
புனல்வாசல் புனித வனத்து அந்தோணியார் ஆலய தேர் திருவிழா இன்று நடக்கிறது
- நாளை ஏசுவின் புது நன்மை கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- உறவினர் நண்பர்களுக்கு தங்களது இல்லங்களில் அன்பின் விருந்து வழங்குகின்றனர்.
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர் திருவிழா இன்று (புதன்கிழமை) இரவு நடக்கிறது. இன்று நண்பகல் கிறிஸ்தவ மக்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு தங்களது இல்லங்களில் அன்பின் விருந்து வழங்குகின்றனர்.
நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஏசுவின் புது நன்மை கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏசு கிறிஸ்து உயிர்பெற்ற 40-ம் நாளை கிறிஸ்தவர்களின் விழாக்களில் முதன்மையான விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை புனல்வாசல் கிறிஸ்தவ மக்கள் அந்தோணியார் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் எட்வர்ட், உதவி தந்தை அற்புத சந்தியாகு, அருட் சகோதரிகள், ஆலய நிர்வாகியும் பேராவூரணி ஒன்றிய குழு துணை தலைவருமான ஆல்பர்ட் குணாநிதி மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.