என் மலர்
வழிபாடு

திருச்செங்கோடு ஹஜ்ரத் மஹபூபே சுபஹானி தர்காவில் சந்தனக்குட உரூஸ் கந்தூரி விழா
- தினமும் மஹபூபே சுபஹானி பயான் வரலாறு படிக்கப்பட்டது.
- ஏராளமான முஸ்லிம்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு மஜித் தெருவில் உள்ள ஹஜ்ரத் மஹபூபே சுபஹானி தர்காவில் 140-ம் ஆண்டு சந்தனக்குட உரூஸ் கந்தூரி விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தர்காவில் தினமும் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மஹபூபே சுபஹானி பயான் வரலாறு படிக்கப்பட்டது. இதில் இந்து, முஸ்லிம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சந்தனக்குட உரூஸ் கந்தூரி விழா முஸ்லிம் மஜீத் முத்தவல்லி முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது. நிர்வாக கமிட்டியினர் முன்னிலை வகித்தனர். கவுஸ் மைதீன் கொடியேற்றி சந்தனக்கூடு விழாவை தொடங்கி வைத்தார். ஷேக் உசேன் சந்தனக்குடத்தை தலையில் தாங்கி கொண்டு ஊர்வலமாக சென்றார்.
சந்தனக்குடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 4 ரத வீதிகளில் ஊர்வலமாக சென்று தர்கா வந்தடைந்தது. விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன் மற்றும் திருச்செங்கோடு, சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.