என் மலர்
வழிபாடு

கணவாய்பட்டி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா
- சந்தன குட ஊர்வலம், சந்தனம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- முடிவில் பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
கோபால்பட்டி அருகே கணவாய்பட்டியில் பக்கீர் செய்யது சாயுபு தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா தர்காவில் கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சந்தன குட ஊர்வலம், சந்தனம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கந்தூரி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முடிவில் பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
இந்த விழாவில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தர்மராஜன், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக்சிக்கந்தர் பாட்ஷா, கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், கணவாய்பட்டி ஜமாத் தலைவர் ராஜ்கபூர், செயலாளர் பாட்ஷா, பொருளாளர் ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.