என் மலர்
வழிபாடு

மதுரை தெற்குவாசல் தர்கா சந்தனக்கூடு விழா
- நாள்தோறும் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
- தர்கா முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் தர்காவில் சந்தனக்கூடு விழாவானது கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதற்காக மின் விளக்குகளால் கப்பல் போன்று அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதமானது, ஊர்வலமாக சிலம்பாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க, தெற்குமாரட் வீதி, காஜிமார்தெரு, நேதாஜி ரோடு, சிம்மக்கல், நெல்பேட்டை வழியாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்தனர். சந்தனகூடுவிழாவினை முன்னிட்டு தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Next Story