என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
சிறுவாபுரி முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
- சிறுவாபுரியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது.
- கடந்த ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொடர்ந்து 5 செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய் தீபம் ஏற்றினால் பக்தர்களின் வேண்டுதலான வீடு, மனை, நிலம், வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில், கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
இந்த கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு பின்னர் விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் கோவிலில் கட்டுக்கடகாத பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். எனவே, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.