என் மலர்
வழிபாடு

சனி பகவானின் குணமும், பூஜை முறையும்!
- சனி திசையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவத்தை எங்கும் பெற முடியாது.
- மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.
ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்று இருந்துவிட்டால் திரண்ட செல்வத்தை தந்து சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் பாராட்டவைப்பார். சனி பகவானின் பலத்தைப்பொருத்துத்தான் ஒரு மனிதனின் நேர்மையை கூற முடியும்.
சனி கெட்டு நீசம் அடைந்துவிட்டால் காக்கை வலிப்பு மற்றும் நரம்புக் கோளாறுகள் வந்துவிடும். அவ்வாறு வரும்போது சனிக்குரிய பரிகாரங்களை செய்து மருத்துவரின் உதவியையும் நாடினால் வெற்றிகள் கண்டிப்பாக உண்டாகும். சனி திசையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே அந்த அனுபவத்தை எங்கும் பெற முடியாது.
ஒருவரது வாழ்க்கையில் 7 சனி வரும்போது அவர் கும்பராசியாகவோ அல்லது மகர ராசியாகவோ, அல்லது துலாம், ரிஷபம், மிதுனம், கன்னி ராசிகளாகவோ இருந்தால் நல்வழிப்படுத்தி விடுவார்.
அதே சமயத்தில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் போன்ற ராசிகளாக இருந்தால் கடினமாக தண்டித்து பிறகு நல்வழிப்படுத்துவார்.
அதே சமயத்தில் மீனம், தனுசு ராசிக்காரர்களுக்கு தண்டனையை கொடுத்து முன்னேற்றப் பாதையை காட்டுவார். எனவே, நவ்வழிப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே.
பூஜை முறை
சனிக்கிழமை காலை குளித்து சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும். எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள், கசப்பு பதார்த்தகங்கள் படைத்து பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும்.
சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கவும். எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது போட்டு கட்டி, திரி போல் திரித்து விளக்கில் போட்டு எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும்.
பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் முதலியவற்றில் சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.
பக்குவப்படுத்தும் சனி
ஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார். முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.
சனி பகவான் தியான சுலோகம்
நீலாம்பரோ நீலவடி
கீரீடிக்ருதர ஸ்தித சூராஸ்கர்தனுமான்
சதுர்புஜ, தகயசுத ப்ரகாந்தா
காதாஸ்து யஹ்யம் வரத, ப்ரசந்த