என் மலர்
வழிபாடு
X
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவித்த பக்தர்கள்
BySuresh K Jangir13 Aug 2022 11:51 AM IST
- பக்தர்கள் பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
- எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது, இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இன்று சனிக்கிழமை என்பதாலும், தொடர்ந்து ஞாயிறு | சுதந்திர தின விடுமுறை என தொடர் விடுமுறையாக இருப்பதால் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறு நளன் குளத்தில் புனித நீராடி சனீஸ்வரனை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சில பக்தர்கள் பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்தனர். எள் தீபம் ஏற்றி தங்களது தோஷங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் வருகை காரணமாக திருநள்ளாறு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
X