search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வேலூர் தங்க கோவிலில் 1700 கிலோ வெள்ளி விநாயகருக்கு உலகிலேயே பெரிய வைடூரிய பதக்கம்
    X

    வைடூரிய பதக்கத்தை படத்தில் காணலாம்.

    வேலூர் தங்க கோவிலில் 1700 கிலோ வெள்ளி விநாயகருக்கு உலகிலேயே பெரிய வைடூரிய பதக்கம்

    • இந்தப் பதக்கத்துக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கணபதிக்கு சமர்ப்பித்தார்.
    • இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் அடுத்த அரியூரில் கடந்த 2007- ம் ஆண்டில் 1500 கிலோ கிராம் சுத்த தங்கத்தை பயன்படுத்தி செய்த தங்க தகடுகளால் ஸ்ரீபுரம் தங்க கோவில் கட்டப்பட்டது.

    அமிர்தசரத்தில் இருக்கும் பொற்கோவிலின் உட்புற விமானத்தில் உள்ள 750 கிலோ கிராம் தங்க அளவைவிட 2 மடங்கு அதிக தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

    தங்க கோவிலில் 1700 கிலோ வெள்ளியிலான சக்தி கணபதி சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு உலகிலேயே மிகப்பெரிய அளவிலான சுமார் 840 கேரட் எடை கொண்ட ஒரே கல்லாலான கேது கிரகத்திற்குரிய வைடூரிய கல்லால் ஆன பதக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் பதக்கத்துக்கு சக்தி அம்மா சிறப்பு பூஜைகள் செய்து சக்தி கணபதிக்கு சமர்ப்பித்தார். இந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×