என் மலர்tooltip icon

    சமையல்

    காரசாரமான ஆட்டு ஈரல் மிளகு வறுவல்
    X

    காரசாரமான ஆட்டு ஈரல் மிளகு வறுவல்

    • இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    ஈரல் - 500 கிராம்

    சின்ன வெங்காயம் - 150 கிராம்

    பச்சை மிளகாய் - 2

    வர மிளகாய் - 5

    மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    சோம்பு - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை - இரண்டு கொத்து

    கொத்தமல்லி - சிறிதளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த ஈரலை போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், ப.மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் 1 டீஸ்பூன், உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஈரல் கலவையை சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். அப்பொழுது தான் ஈரல் மென்மையாக இருக்கும். ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும்.

    பின்னர் மீதமுள்ள மிளகு தூளை தூவி கரண்டி போட்டு கிளற வேண்டும்.

    எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.

    கடைசியாக அதன் மீது கொத்தமல்லித்தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.

    Next Story
    ×