என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
அழகுக் குறிப்புகள்
சருமத்துக்கு பொலிவு கூட்டும் பொருட்கள்
- தக்காளியில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன.
- வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவும்.
சருமத்துக்கு அழகு சேர்ப்பதற்கு அழகுசாதனப் பொருட்களை சார்ந்திருப்பதால் மட்டும் பலன் கிடைக்காது. உண்ணும் உணவுப்பொருட்களும் சருமத்திற்கு பொலிவு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட பொருட்களில் சிலவற்றை பார்ப்போம்.
தக்காளி:
தக்காளியில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் சி நிறைந்துள்ளன. அவை சருமத்திற்கு பளபளப்பை அளிக்கக்கூடியவை. தக்காளியை `ஸ்கிரப்பாக' சருமத்திற்கு பயன்படுத்தலாம். சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதற்கு உதவும். சருமத் துளைகள் அதிகம் இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளி உபயோகிக்கலாம். சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் தக்காளி உதவும்.
டார்க் சாக்லேட்:
சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு சேரும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் டார்க் சாக்லேட்டை பொறுத்தவரை இதயத்திற்கும், சருமத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது. இந்த சாக்லேட்டில் கார்டியோபிராக்டிவ் பண்புகள் உள்ளன. அவை நோய்த்தொற்றுகளில் இருந்து இதயத்தை பாதுகாக்கக்கூடியவை. மேலும் இதில் உள்ள பிளவோனால்கள், தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்கள் உள்ளிட்டவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கக் கூடியவை.
அவகேடோ:
வைட்டமின்கள், தாதுக்கள் என ஏராளமான ஊட்டச்சத்துகள் அவகேடோவில் நிரம்பி உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் ஈ, சருமத்துக்கு பாதுகாப்பு அரணாக செயல்படக்கூடியது. குறிப்பாக சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும் முதன்மை பணியை மேற்கொள்ளும்.
அத்துடன் அவகேடோவில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். இதனை உட்கொள்வது சருமச் சுருக்கம், கரும்புள்ளிகள், விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் நுண்ணிய கோடுகள் போன்றவற்றை தடுத்து சருமத்துக்கு புத்துணர்ச்சி தரும்.
வால்நட்:
இதில் சருமத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கும் கொழுப்புகள், வைட்டமின் ஈ, துத்தநாகம், செலினியம், புரதம் போன்ற சத்துகள் உள்ளடங்கி உள்ளன. அடிக்கடி பூஞ்சைத் தொற்று பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் வால்நட்டை தவறாமல் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். வால்நட்டில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலாஜன் உற்பத்திக்கு உதவும். மன அழுத்த அறிகுறிகளை கட்டுப்படுத்தி சரும நலனை பாதுகாக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்