என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்கள் பாதுகாப்பு: ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?
    X

    பெண்கள் பாதுகாப்பு: ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?

    • எந்த இடங்களிலும் ரகசிய கேமராக்களை வைக்கமுடியும்.
    • முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது கண்ணாடியைத்தான்.

    கதவுகள், சுவரின் ஒரு மூலை, அறையின் மேற்கூரை, சுவர் கடிகாரம், மின் விளக்கு, புகைப்பட ஃப்ரேம்கள், டிஷ்யூ பெட்டிகள், பூக்குவளை, பூச்செண்டு, புகை கண்டறியும் கருவிகள் இப்படி முன்புறம் ஒரு சிறுதுளை, அதன்பின்னால் ஒரு பேட்டரியோ அல்லது வயரோ செல்வதற்கான இடம் இவை இருக்கும் எந்த இடங்களிலும் ரகசிய கேமராக்களை வைக்கமுடியும். இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது கண்ணாடியைத்தான். ஏனென்றால் இதுதான் அநேகமான கிட்டதட்ட அனைத்து இடங்களிலுமே இருக்கிறது. ட்ரெயல் ரூம்களிலுள்ள ஆளுயரக்கண்ணாடியை கண்டிப்பாக நாம் சோதிக்கவேண்டும். ஏனென்றால் நமக்கு அது பிரதிபலிக்கும் கண்ணாடியாக தெரிந்தாலும், அதன்பின்னணியில் இருப்பவர்கள் நமது செயல்களை கவனிக்கமுடியும்.

    உங்களுக்கு கண்ணாடியின் மீது சந்தேகம் எழுந்தால் உடனே அதன் அருகில் சென்று உங்கள் விரலை கண்ணாடியில் வைக்கவும். உங்கள் விரலுக்கும், கண்ணாடியின் பிரதிபலிப்பிற்கும் இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி. இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒட்டி இருந்தால் அது பொய்யான கண்ணாடி அதன் பின்னணியில் ஆபத்து இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்னொன்று சில கேமராக்கள் இரவிலும் செயல்படக்கூடியதாக இருக்கும் அதனால் அதனைச்சுற்றி எல்.ஈ.டி. விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். நீங்கள் அறையின் விளக்கை அணைத்தால் அது தெரிய வாய்ப்பிருக்கிறது.

    பெண்கள் பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அங்கு சில அயோக்கியர்களால் அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்.

    முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் செல்போனில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில் உள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள். இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும். இதை வைத்து அறையினுள் ரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை அறியலாம்.

    "ஹிட்டன் கேமரா டிடெக்டர்" (hidden camera detector) என்ற ஒரு ஆப் உள்ளது. இதன்மூலமும் கண்டறியலாம். இந்த ஆப்பை முழுமையாக நம்ப முடியாது என்றாலும், ஓரளவு நம்பகத்தன்மை கொண்டதுதான். இப்படியான வழிகளைக்கொண்டு நாம் கண்டறியலாம்.

    Next Story
    ×