என் மலர்
மகாராஷ்டிரா
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 195 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நவிமும்பை:
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நவி மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 73 ரன்கள் எடுத்தார்.
தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து 54 ரன்னில் அவுட்டானார். உமா சேத்ரி 24 ரன்னும், ரிச்சா கோஷ் 20 ரன்னும், ஹர்மன்ப்ரீத் கவுர் 13 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கரிஷ்மா ராம்ஹராக் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. இந்திய அணியின் துல்லிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி தடுமாறியது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 49 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது . இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.
- தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
- ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
இதைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவரைத் தொடர்ந்து சிவ சேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
டிசம்பர் 5 ஆம் தேதி தேவேந்திர ஃபட்னாவிஸ் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்ற 10 நாட்களுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது.
பாஜகவின் மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே, ராதாகிருஷ்ண விகே பாட்டீல், ஆஷிஷ் ஷெலர், சந்திரகாந்த் பாட்டீல், கிரீஷ் மகாஜன், கணேஷ் நாயக், மங்கள் பிரதாப் லோதா, ஜெய்குமார் ராவல், பங்கஜா முண்டே, அதுல் சாவே உள்ளிட்டோர் பதவியேற்றனர்.
ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியின் தாதா பூசே, சம்புராஜ் தேசாய், சஞ்சய் ரத்தோட், குலாப்ராவ் பாட்டீல், உதய் சமந்த் ஆகியோர் பதவியேற்றனர்.
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மாணிக்ராவ் கோகடே, தத்தாத்ரே வித்தோபா பார்னே, ஹசன் முஷ்ரிப், அதிதி சுனில் தட்கரே மற்றும் தனஞ்சய் முண்டே ஆகியோர் பதவியேற்றனர்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பகவான் மண்ட்லிக் கோல்டன் பார்க்கில் நடைபயிற்சி சென்றார்.
- நாய் மற்றும் பூனை கடித்த பின்னர் பகவான் மண்ட்லிக், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
மும்பை:
மும்பையை அடுத்த கல்யாணை சேர்ந்தவர் பகவான் மண்ட்லிக் (வயது 27). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கோல்டன் பார்க்கில் நடைபயிற்சி சென்றார். அப்போது அவரை தெருநாய் ஒன்று கடித்து விட்டது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு பூனையும் அவரை கடித்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு தலைவலி, உடல் வலி மற்றும் தொண்டை வறட்சி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. உடனே அவர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்.
இறுதியில் மும்பை கஸ்தூர்பா மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாய் மற்றும் பூனை கடித்த பின்னர் பகவான் மண்ட்லிக், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும், இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பதாக கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது
மேலும் அந்த மாநகராட்சியின் மருத்துவ சுகாதார அதிகாரி தீபா சுக்லா கூறுகையில், "எந்த விலங்குகள் கடித்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். முன்னெச்சரிக்கையாக உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்" என்று பொதுமக்களை வலியுறுத்தி உள்ளார்.
நாய், பூனை கடித்ததை தொடர்ந்து தடுப்பூசி போட்டு இருந்தால் வாலிபரின் விலைமதிப்பற்ற உயிர் பறிபோய் இருக்காது.
இதில் அலட்சியம் காட்டிய வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் தபாங் டெல்லி அணி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், முதலில் நடந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் 36-32 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 44-37 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- மும்ராவில் 25 வயது மனைவி வசித்து வரும் நிலையில் அவரது 31 வயது கணவர் குர்லா பகுதியில் வேலை செய்கிறார்
- கணவனின் திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக மும்ப்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மனைவி தனியாக வாக்கிங் செல்வதால் ஆத்திரமடைந்த கணவன் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் மும்ரா பகுதியில் 25 வயது மனைவி வசித்து வரும் நிலையில் அவரது 31 வயது கணவர் குர்லா நகரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். மனைவி அதிகாலையில் தனியான நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர் என்று தெரிகிறது.
எனவே அவரது கணவன் கடந்த செவ்வாய்கிழமை இரவு, தனது மாமனாரை அழைத்து தனியாக வாக்கிங் செல்வதை காரணம் காட்டி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார். அவர் தொலைபேசியில் மூன்று முறை "தலாக்" என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இது இப்போது இந்தியச் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும்.
எனவே கணவனின் திடீர் முடிவால் அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக மும்ப்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பம்பாய் திருமணங்கள் சட்டம் மற்றும் முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முத்தலாக் சொன்ன கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் பாட்னா அணி 11-வது வெற்றியைப் பதிவு செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.
இதில், பாட்னா அணி 42-38 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 11-வது வெற்றியைப் பதிவு செய்தது.
மற்றொரு போட்டியில் புனேரி பால்டன் அணி 56-18 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
+2
- மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை சென்செக்ஸ் 81,212 புள்ளிகளில் தொடங்கியது.
- குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 80, 082.82 புள்ளிகளிலும், அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,213.92 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
30 நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நேற்று மதியம் 3.30 மணிக்கு சென்செக்ஸ் 81,289.96 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை வர்த்தகம் 9.15 மணிக்கு சென்செக்ஸ் 81,212 புள்ளிகளில் தொடங்கியது. சுமார் 10.30 மணியளவில் சென்செக்ஸ் புள்ளிகள் சரியத் தொடங்கின. காலை 10.45 மணிக்கு சுமார் 1,200 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 80,082.82 புள்ளிகள் வர்த்தகம் ஆனது. அப்போது பாரதி ஏர்டெல் நிறுவன பங்கைத் தவிர மற்ற அனைத்து நிறுவன பங்குகளும் சரிவை சந்தித்தன. குறிப்பாக வங்கி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.
சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் சரிந்த சிறிது நேரத்த்தில் வர்த்தகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது. மெல்லமெல்ல சரிவில் இருந்து மீண்ட வர்த்தகம், பின்னர் உயர்வை நோக்கி சென்றது. அதன்பின் மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கவில்லை. இறுதியாக 3.30 மணிக்கு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 843.6 புள்ளிகள் உயர்ந்து 82,133.12 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. குறைந்த பட்சமாக சென்செக்ஸ் 80, 082.82 புள்ளிகளிலும், அதிகபட்சமாக சென்செக்ஸ் 82,213.92 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா ஸ்டீல், இந்தூஸ்இன்ட் பேங்க் (Indusind Bank) ஆகிய நிறுவன பங்குகள் மட்டும் சரிவை சந்தித்தன.
பாரதி ஏர்டெல் பங்கு 4.42 சதவீதம், ஐ.டி.சி. பங்கு 2.04 சதவீதம், இந்துஸ்தான் யுனிலிவர் பங்கு 19.3 சதவீதம் ஏற்றம் கண்டன.
இந்திய பங்குச் சந்தை நிஃப்டி 50 இன்று 219.60 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிஃப்டி 24,768.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 24548.70 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 24498.35 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது.
இன்று குறைந்த பட்சமாக 24180.80 புள்ளிகளிலும், அதிகபட்சமாசக 24,792.30 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
- மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு மிரட்டல் வந்துள்ளது
- மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என்று கூறிக்கொண்டார்.
மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
நேற்று [டிசம்பர் 12] மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் எழுதப்பட்ட அந்த வெடிகுண்டு மிரட்டலானது வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக நவம்பர் 16 ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி [சி இஓ] என்று கூறிக்கொண்டார். மேலும் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் அவர் ஒரு பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது.
2008-ம் ஆண்டு நவமபர் 26 ஆம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவார அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் யுபி யோதாஸ் 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் தபாங் டெல்லி, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய டெல்லி 33-27 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.
மற்றொரு போட்டியில் யுபி யோதாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் 31-31 என்ற புள்ளிக்கணக்கில் சமனிலை பெற்றன.
- மந்திரி சபையில் 43 பேர் இடம் பெற வாய்ப்பு.
- பா.ஜ.க. 22 மந்திரிகள் வரை எதிர்பார்ப்பதாக தகவல்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சி கூட்டணிகளான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.-வை சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) ஆகியோர் துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளனர்.
பதவி ஏற்று ஒரு வாரத்திற்கு மேலாகியும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இலாகாக்களும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.
முதல்வரான பட்நாவிஸிடம் நிதியமைச்சர் இலாகா இருக்க வேண்டும் என பா.ஜ.க. விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் அஜித் பவார் நிதி இலாகாவை குறிவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், எம்.எல்.சி.-யுமான மிட்கரி "அஜித் பவாருக்கு மட்டுமே நிதித்துறையை கையாளும் திறன் உள்ளது. 10 முறை பட்ஜெட் தாக்குதல் செய்துள்ள அவருக்கு, நிதியை ஒவ்வாறு நிர்வகிக்க முடியும் என்பது தெரியும்.
அஜித் பவாரை நிதியமைச்சராக ஆக்கவில்லை என்றால், இந்த அரசுக்கு (மகாயுதி) பயனுள்ளதாக இருக்காது" என்றார்.
14-ந்தேதி (நாளைமறுநாள்) கேபினட் விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக முதல்வருடன் சேர்த்து 43 மந்திரிகள் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும், பா.ஜ.க. 21 முதல் 22 இடங்களை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் அரியானா 15வது வெற்றியைப் பதிவு செய்தது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.
புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய அரியானா 37-26 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி 15-வது வெற்றியைப் பதிவு செய்தது.
மற்றொரு போட்டியில் யு மும்பா அணி 47-31 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.
- பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் மூலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார்.
- நான் பேராசைக்காரன் இல்லை. கோவில்களுக்கு கூட நன்கொடை தருகிறேன்.
இன்றைய காலக்கட்டத்தில் உழைத்தாலே, தினமும் குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக இருக்கிறது. ஆனால் மும்பையை சேர்ந்த ஒருவர் பிச்சை எடுத்தே, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இப்போது அவர் தான் உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர் என்று கண்டறியப்பட்டு இருக்கிறார்.
அவரது பெயர் பாரத் ஜெயின் (வயது 54). மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். தினமும் 12 மணி நேரம் பிச்சை எடுப்பாராம். அதன் மூலம் தினசரி ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 வரை கிடைக்குமாம்.
ஒரு ரூபாய் பிச்சை போட்டாலும், அதனை இன்முகத்துடன் வாங்கி கொள்வாராம். மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை வருமானம் பார்க்கிறார்.
பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் மூலம் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி உள்ளார். அந்த வீட்டில்தான் அவரது குடும்பம் வசித்து வருகிறது. இதுதவிர 2 கடைகளையும் வாங்கி இருக்கிறார். அந்த கடைகள் மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. அவரது 2 பிள்ளைகளும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவரது குடும்பத்தினர், இனியும் பிச்சை எடுக்க வேண்டாம் என்று கூறி வருகின்றனர். ஆனாலும் பாரத் ஜெயின், தொடர்ந்து பிச்சை எடுத்து வருகிறார். தற்போது அவரது சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 50 லட்சம் ஆகும்.
இது குறித்து அவர் கூறும் போது, 'நான் பேராசைக்காரன் இல்லை. நான் தாராளமாக வாழ்கிறேன். கோவில்களுக்கு கூட நன்கொடை தருகிறேன்' என்று கூறுகிறார்.
இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை பிச்சை எடுக்கும் தொழிலில் நிதி புரள்கிறது. மும்பையை சேர்ந்த சம்பாஜி காலே என்ற பிச்சைக்காரருக்கு சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். லட்சுமி தாஸ் என்பவரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி இருக்கிறது.
"என்னைப் பார்த்தால் பேசாமல் பிச்சை எடுக்கலாம் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல" என்று கர்வத்துடன் கூறுகிறார் பணக்கார பிச்சைக்காரர் பாரத் ஜெயின்.