என் மலர்tooltip icon

    மிசோரம்

    • 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.
    • மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும்.

    மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், 5 மாநில தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியானது.

    இதில், மிசோரம் மாநிலத்தில் மொத்த இடங்கள் 40 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 21.

    கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் வருமாறு:

    ஜன் கி பாத்: மி.தே.மு 10- 14, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ்: மி.தே.மு 14- 18, ஜோ.ம.இ 12- 16, காங்கிரஸ் 08- 10, மற்றவை 00- 02.

    பி- மார்க்யூ: மி.தே.மு 14- 20, ஜோ.ம.இ 15- 25, காங்கிரஸ் 05- 09, மற்றவை 00- 02.

    (மி.தே.மு- மிசோ தேசிய முன்னணி, ஜோ.ம.இ- சோரா மக்கள் கட்சி)

    • தியாவ் நதிக்கு அருகே சாய்கும்பாய் பகுதியின் வழியாக அவர்கள் இந்திய எல்லைக்குள் வந்தனர்.
    • மியான்மருக்கு திருப்பி அனுப்பும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அசாம் ரைபிள் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஐஸ்வால்:

    மியான்மர் நாட்டு எல்லையில், சில குழுக்களை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள், ராணுவ முகாம் ஒன்றை கைப்பற்றினர். சில ராணுவ வீரர்களை பணயக் கைதிகளாக சிறைப்பிடித்தனர். அப்போது மியான்மர் ராணுவ வீரர்கள் ஏராளமானவர்கள், எல்லையை ஒட்டி இருந்த இந்திய பகுதியான மிசோரமில் புகுந்தனர். அவர்களில் சுமார் 40 பேர் மிசோரம் போலீசாரிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு தஞ்சம் அடைந்தனர். இருநாட்டு ராணுவ பேச்சுவார்த்தைக்கு பின்பு, சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தற்போது மேலும் 29 மியான்மர் ராணுவ வீரர்கள் மிசோரமில் நுழைந்திருப்பது தெரியவந்து உள்ளது. அவர்கள் நேற்று முன்தினம் மிசோரம் போலீசார் மற்றும் அசாம் ரைபிள் ராணுவ பிரிவினரிடம் தஞ்சம் கேட்டனர். தியாவ் நதிக்கு அருகே சாய்கும்பாய் பகுதியின் வழியாக அவர்கள் இந்திய எல்லைக்குள் வந்தனர். அவர்களை மியான்மருக்கு திருப்பி அனுப்பும் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக அசாம் ரைபிள் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    2021-ல் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பொது மக்களும், பல்வேறு கிளர்ச்சி குழுக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சனை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு சியோனா சானா தனது 76-வது வயதில் மறைந்தார்.
    • அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவார்கள் என அப்பகுதி மக்கள் கூறினர்.

    கூட்டுக்குடும்ப வாழ்க்கை குறைந்து கொண்டே வரும் இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 199 பேர் ஒரே வீட்டில் வசித்து வருவதும், அந்த வீடு சுற்றுலா தலமாக மாறி இருப்பதும் பேசு பொருளாகி இருக்கிறது.

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமில் உள்ள பக்தவாங் கிராமத்தில் தான் இந்த மிகப்பெரிய குடும்பம் உள்ளது. சியோனா சானா என்பவர் தான் இந்த குடும்பத்தின் தலைவர் ஆவார். 38 பெண்களை மணந்த அவருக்கு அந்தந்த மனைவிகள் மூலம் 89 குழந்தைகள் மற்றும் 36 பேரக் குழந்தைகள் உள்பட இந்த குடும்பத்தை சேர்ந்த 199 பேர் ஒரே வீட்டில் இருந்தனர். இவர்கள் அனைவரும் பக்தவாங் கிராமத்தில் 100 அறைகள் கொண்ட 4 மாடி கட்டிடத்தில் ஒரே குடும்பமாக வசித்து வந்தனர். உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சனை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு சியோனா சானா தனது 76-வது வயதில் மறைந்தார். அதன் பிறகும் அந்த குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து பாரம்பரியத்துக்கு சான்றாக விளங்குகிறார்கள்.

    சியோனா தனது முதல் மனைவியை 17 வயதில் திருமணம் செய்தாராம். அதன் பிறகு ஒரே வருடத்தில் 10 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு மனைவிகளுக்கும் தனி படுக்கை அறை மற்றும் தங்குமிடம் அமைத்து கொடுத்தாலும், ஒரே வீட்டில் தான் வசித்துள்ளனர். அவர் எல்லா நேரங்களிலும் 7 அல்லது 8 மனைவிகளை பக்கத்தில் வைத்திருப்பதை விரும்புவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பரந்து விரிந்த டைனிங் ஹாலில் முழு குடும்பமும் கூடி சாப்பிடும் போது அது ஒரு பெரிய ஹாஸ்டல் மெஸ் போல இருக்கும். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவார்கள் என அப்பகுதி மக்கள் கூறினர்.

    • மிசோரமில் மதியம் 3 மணியளவில் வாக்குப்பதிவு முடிந்தது. அங்கு 69.87 சதவீதம் வாக்குகள் பதிவானது.
    • மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 9 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ஐஸ்வால்:

    மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கு ம், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் முதல் கட்டமாக 20 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மிசோரம் மாநிலத்தில் அதிகாலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன்பு நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்பதிவு தொடங்கியதும் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர்.

    மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 8.57 லட்சம் பேர் வாக்கு உரிமை பெற்றுள்ளனர். அவர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்காக 40 தொகுதிகளிலும் 1,274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், மிசோரமில் மதியம் 3 மணியளவில் வாக்குப்பதிவு முடிந்தது. அங்கு 69.87 சதவீதம் வாக்குகள் பதிவானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 9 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகிறார்கள்.

    மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

    மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா இன்று காலை ஐசால் வடக்கு-II தொகுதிக்குட்பட்ட 19-ஐசால் வெங்லாய்-I ஒய்.எம்.எம். ஹாலில் அமைக்கப்பட்டிருந்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.

    அப்போது, வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகள் கோளாறை விரைவாக சரி செய்து விடுவோம். இதனால் சற்று காத்திருங்கள் என முதல்வரிடம் கூறினர். இதனால் முதல்வர் ஜோரம்தங்கா காத்திருந்தார்.

    இருந்தபோதிலும் அதிகாரிகளால் உடனடியாக கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் முதல்வர் ஜோரம்தங்கா வாக்குச்சாவடியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் வந்து வாக்களிக்க இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 64.4 சதவீத வேட்பாளர்கள், தங்களுக்கு ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
    • தேர்தலில் போட்டியிடும் 16 பெண் வேட்பாளர்களில் காங்கிரஸ் கட்சியின் மெரியம் எல்.ஹிராங்சால்தான் மிகவும் பணக்கார வேட்பாளர்.

    அய்சால்:

    மிசோரம் மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 40 இடங்களுக்கான இந்த தேர்தலில் மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    அந்த வேட்பாளர்கள் சமர்ப்பித்துள்ள பிரமாணபத்திரத்தின் அடிப்படையில், அவர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதாவது 64.4 சதவீத வேட்பாளர்கள், தங்களுக்கு ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    கோடீஸ்வர வேட்பாளர்களிலேயே முதலிடத்தில் இருப்பவர் ஆம் ஆத்மி கட்சி மிசோரம் மாநில தலைவரான ஆண்ட்ரூ லால்ரெம்கிமா பச்சுவா. ரூ.70 கோடி சொத்து கொண்ட இவர், அய்ஸ்வால் வடக்கு 3-வது தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் போட்டியிடும் 16 பெண் வேட்பாளர்களில் காங்கிரஸ் கட்சியின் மெரியம் எல்.ஹிராங்சால்தான் மிகவும் பணக்கார வேட்பாளர் ஆவார். லுங்லே தெற்கு தொகுதியில் போட்டியிடும் இவருக்கு ரூ.18.63 கோடி சொத்துகள் உள்ளன.

    இந்த பணக்கார வேட்பாளர்களுக்கு மத்தியில், செர்ச்சிப் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராம்லன்-எடேனாதான் மிகவும் ஏழை வேட்பாளர் ஆவார்.

    அவர் தனக்கு ஒரே ஒரு அசையும் சொத்து மட்டும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் மதிப்பு ரூ.1,500!

    • ஆளுங்கட்சி சார்பில் மீண்டும் 26 எம்.எல்.ஏ.க்கள் மனுத்தாக்கல்
    • பா.ஜனதா சார்பில் 23 பேர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 பேர் மனுத்தாக்கல்

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நவம்பர் 30-ந்தேதி வரை தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் நவம்பர் 7-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று, வேட்மனு மீதான பரிசீலனை நடைபெற இருக்கிறது. அதன்பின் அக்டோபர் 23-ந்தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

    மிசோரம் மாநிலத்தில் 16 பெண்கள் உள்பட 174 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து பின், அக்டோபர் 23-ந்தேதி இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது அதிகாரப்பூர்வமாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

    ஆளும மிசோரம் தேசிய முன்னணி (MNF), எதிர்க்கட்சிகளான சோரம் மக்கள் இயக்கம் (ZPM), காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 35 பேருக்கு மீண்டும் வாயப்பு அளித்துள்ளது ஆளுங்கட்சி. அதேவேளையில் சோரம் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.-க்கள் உள்பட 40 பேர் மறுதேர்தல் நடத்த வலியுறுத்தியுள்ளனர்.

    இவர்களைத்தவிர பா.ஜனதா சார்பில் 23 பேர், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 பேர், சுயேட்சையாக 27 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    • எதிர்கட்சிகள் இந்தியா எனும் பெயரில் ஒரு கூட்டணையை உருவாக்கியுள்ளன
    • 1986ல் முதல்முதலாக மிசோரம் வந்தேன் என்றார் ராகுல்

    இந்தியாவில் அடுத்த வருடம் பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இவ்வருட இறுதிக்குள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்களும் நடைபெற உள்ளது.

    மத்தியில் உள்ள தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை அடுத்த வருட தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி பல மாநிலங்களின் முக்கிய 25க்கும் மேற்பட்ட கட்சிகள், இந்தியா கூட்டணி (I.N.D.I.A.) என கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளன. இப்பின்னணியில் நடைபெறவுள்ள 5 மாநில தேர்தல்களை அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுவதால், கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மிசோரம் மாநிலத்தின் 40 இடங்களுக்கு வரும் நவம்பர் 7 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மிசோரம் தலைநகர் ஐசால் (Aizawl) வந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் (INC) மூத்த தலைவர் ராகுல் காந்தி, அங்கு 2 நாள் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    மிசோரம் வந்த அவர் ஒரு பொது கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    மிசோரம் வருவது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. முதல்முதலாக 1986ல் நான் இங்கு வந்தேன். அப்போது மிசோரம் மெதுவாக வன்முறையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தது. நான் என் தந்தையுடன் வந்த போது மிசோ ஒப்பந்தம் கையெழுத்தானது. 1987ல் மாநில அந்தஸ்து கிடைத்தது. தற்போதுள்ள தலைமுறையினர் இங்கு வன்முறையை பார்க்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், வன்முறையினால் ஏற்படும் பாதிப்பு மூத்த தலைமுறையினருக்கு தெரிந்திருக்கும்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

    அதிக மலைப்பிரதேசங்களை கொண்டதால் "மலை மாநிலம்" (mountain state) என்றும் அழைக்கப்படும் மிசோரம் மாநிலத்தில், 2008லிருந்து 2018 வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மிசோரம் மாநிலத்திற்கு வரும் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது.
    • காங்கிஸ் கட்சியின் மாநிலத் தலைவர் லால்சவ்தா அய்ஸ்வால் மேற்கு-3 தொகுதியில் களமிறங்குகிறார்.

    மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மிசோரமில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக ஐஸ்வால் நகருக்கு சென்றார். இந்நிலையில், வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில், காங்கிஸ் கட்சியின் மாநிலத் தலைவர் லால்சவ்தா அய்ஸ்வால் மேற்கு-3 தொகுதியில் களமிறங்குகிறார். லால்னுன்மாவியா சுவாங்கோ ஐஸ்வால் வடக்கு- Iல் போட்டியிட பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    லால்ரிந்திகா ரால்டே ஹச்சேக், லால்மிங்தங்கா சைலோ தம்பா மற்றும் லால்ரின்மாவியா ஐஸ்வால் வடக்கு-II தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

    40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் மாநிலத்திற்கு வரும் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மணிப்பூர் தற்போது ஒரு மாநிலமாக இல்லை. இரண்டு மாநிலங்களாக பிரிந்து நிற்கின்றன.
    • பேரணிக்கு பிறகு கவர்னர் மாளிகை அருகே நடைபெற்றது.

    5 மாநில சட்டசபை தேர்தல்களில் மிசோரமும் ஒன்றாகும். 40 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்துக்கு நவம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று மிசோரமில் பாத யாத்திரை மேற்கொண்டார். ஜஸ்வால் சென்ற அவருக்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர். அங்குள்ள சன்மாரி சந்திப்பில் இருந்து அவர் பாத யாத்திரையை தொடங்கினார்.

    பேரணிக்கு பிறகு கவர்னர் மாளிகை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது காங்கிரஸ் எம்.பி கூறியதாவது:-

    சிறு மற்றும் குறு வணிகங்களை அழிக்க வடிவமைக்கப்பட்டதுதான் ஜிஎஸ்டி. இது நம் நாட்டு விவசாயிகளை பலவீனப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இது நமது நாட்டு பிரதமரின் அபத்தமான யோசனை. பொருளாதாரம் இன்னும் மீளவில்லை.

    இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான பிரதமரின் உத்தியை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால், அதை ஒரே வார்த்தையில் சுருக்கமாகக் கூறலாம் 'அதானி'. எல்லாமே ஒரு தொழிலதிபருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுதான் தேசத்தின் நிலை.

    மணிப்பூர் தற்போது ஒரு மாநிலமாக இல்லை. இரண்டு மாநிலங்களாக பிரிந்து நிற்கின்றன. இவ்வளவு நடந்தும், மணிப்பூர் செல்ல வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தோன்றவே இல்லை.

    மணிப்பூரில் என்ன நடக்கிறது என அறிவதை விட, இஸ்ரேலில் என்ன நடக்கிறது என அறிவதில்தான் பிரதமர் மோடி ஆவலாக உள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஜஸ்வால் சென்ற ராகுல் காந்தியை ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர்.
    • பேரணிக்கு பிறகு கவர்னர் மாளிகை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார்.

    ஜஸ்வால்:

    5 மாநில சட்டசபை தேர்தல்களில் மிசோரமும் ஒன்றாகும். 40 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்துக்கு நவம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று மிசோரமில் பாத யாத்திரை மேற்கொண்டார். ஜஸ்வால் சென்ற அவருக்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்றனர். அங்குள்ள சன்மாரி சந்திப்பில் இருந்து அவர் பாத யாத்திரையை தொடங்கினார். சாலையின் இருபுறமும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கவர்னர் மாளிகை வரை 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை ராகுல்காந்தி நடந்து செல்கிறார். பேரணிக்கு பிறகு கவர்னர் மாளிகை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

    • மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் இருப்பதால் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
    • மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    5 மாநிலங்களிலும் கடந்த திங்கட்கிழமை முதல் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 5 மாநிலங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சிகள் அறிவித்து இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 5 மாநில தேர்தலில் மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    ஆனால் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்கள் இருப்பதால் சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17-ந்தேதிகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

    மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 40 சட்டசபை தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அங்கு மனு தாக்கல் செய்ய 20-ந்தேதி கடைசி நாளாகும்.

    21-ந்தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 23-ந்தேதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். நவம்பர் 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. முதல் கட்டமாக நவம்பர் 7-ந்தேதி 20 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான மனு தாக்கலும் இன்று தொடங்கியது.

    ×