என் மலர்tooltip icon

    திரிபுரா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரிபுரா சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது.
    • அமளியில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி வந்தது

    ஆனால், யாராவது புகார் கொடுத்தால்தான் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என சபாநாயகர் விஸ்வபந்து சென் கூறினார்.

    இந்நிலையில், திரிபுரா சட்டசபையில் படஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ. செல்போனில் ஆபாசப் படம் பார்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், பல்வேறு முக்கிய பிரச்சனைகள் இருப்பதால் அவர்களது இருக்கையில் சென்று அமரும்படி கூறினார்.

    இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமளியில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

    • காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டம் குமார்காட் நகரில் இன்று ஜெகன்னாதர் ரத யாத்திரை நடைபெற்றது. இரும்பினால் செய்யப்பட்ட ரதத்தை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். ரதம் சவுமுகானி பகுதியில் சென்றபோது உயர் அழுத்த மின் கம்பியில் ரதம் உரசியது. அப்போது ரதத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் ரதம் இழுத்த பக்தர்கள் பலத்த மின் தாக்குதலுக்கு உள்ளாகி தூக்கி வீசப்பட்டனர். அத்துடன் ரதமும் தீப்பற்றியது.

    இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் குமார்காட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக உனகோட்டி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், முதலமைச்சர் மாணிக் சஹா தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். அத்துடன், நேரில் பார்வையிடுவதற்காக குமார்காட் சென்றுகொண்டிருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் மாநில அதிகாரிகளுடன் கங்குலியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் அறிவிப்பு.
    • கங்குலி பிரச்சாரங்களில் பங்கேற்பது மூலம் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கும்.

    திரிபுரா மாநில சுற்றலாத்துறை தூதராக கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் மாநில அதிகாரிகளுடன் கங்குலியை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, முதல்வர் மாணிக் சாஹா கங்குலியிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். கங்குலி பிரச்சாரங்களில் பங்கேற்பது மூலம் மாநிலத்தின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மேலும் இதுகுறித்து சாஹா தனது பேஸ்புக் பக்கத்தில், "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தங்களின் முன்மொழிவை ஏற்றுக்கொண்டு திரிபுரா சுற்றுலா துறையின் விளம்பர தூதராக பொறுப்பேற்று இருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • புல்வாமா தாக்குதலையும், பாலக்கோட்டில் வான்தாக்குதல் நடத்தி அளித்த பதிலடியையும் பா.ஜ.க. பயன்படுத்தி 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது.
    • காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ள தகவல்களால், அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பும் என நான் நினைத்தேன்.

    அகர்தலா:

    காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி துணை ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற வாகனம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினார்கள். இதில் துணை ராணுவ வீரர்கள் (மத்திய ஆயுதப்படை போலீசார்) 40 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதல், அமைப்பு ரீதியான தோல்வி, ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடுகளைக்கொண்டது என்று காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு பேட்டியின்போது குற்றம்சாட்டினார்.

    அப்போது, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய தரப்பில் நடத்தப்பட்ட பாலக்கோட் வான் தாக்குதல் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சந்தேகத்தை வெளிப்படுத்தியது. ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் என்கிறபோது அதற்கு முன்னதாக இந்த தாக்குதலை நடத்தி வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினையை மறைக்க பா.ஜ.க. தீவிர சதி செய்துள்ளது என்பதுதான் அந்த கட்சியின் குற்றச்சாட்டாக இருந்தது.

    இந்த நிலையில் புல்வாமா தாக்குதலையும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் நடத்தப்பட்ட இந்தியாவின் வான்தாக்குதல் குறித்தும் திரிபுரா முன்னாள் முதல்-மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான மாணிக் சர்க்கார் கூறியதாவது:-

    புல்வாமா தாக்குதலையும், பாலக்கோட்டில் வான்தாக்குதல் நடத்தி அளித்த பதிலடியையும் பா.ஜ.க. பயன்படுத்தி 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. இந்த சம்பவம் நடந்தபோது அங்கு கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் இதுபற்றி இப்போது பேசி உள்ளார்.

    சத்யபால் மாலிக் தற்போது தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து பிரதமரும், உள்துறை மந்திரியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மவுனம் சாதிக்கின்றனர்.

    ஓய்வுபெற்ற ராணுவ தளபதி சங்கர்ராய் சவுத்ரியும், இந்த பிரச்சினையை எழுப்பி உள்ளார்.

    காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ள தகவல்களால், அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பும் என நான் நினைத்தேன். அது சரியாகி உள்ளது. அவருக்கு காப்பீட்டு மோசடி ஊழலில் சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். அவர் கருத்துகளை வெளியிட்ட ஒரே வாரத்தில் இது நடந்துள்ளது.

    நமது நாடு இப்படி எதிர்வினையாற்றக்கூடிய அரசை முதல் முறையாக பெற்றிருக்கிறது.

    திரிபுராவில் 60 சதவீத வாக்காளர்கள் பா.ஜ.க.வை ஆதரிக்கவில்லை. பா.ஜ.க.வை வெளிப்படையாக விமர்சித்து வந்த திப்ரா மோதா, சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற உதவியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
    • அங்கு அனைத்து அரசு பள்ளிகளும் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை மூடப்படுகிறது.

    அகர்தலா:

    இந்தியாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர்.

    இதற்கிடையே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை அடுத்த சில நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து காணப்படுகிறது. கடும் வெயில் எதிரொலியாக திரிபுராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஏப்.23-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

    ஏற்கனவே, மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
    • அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வற்புறுத்தி வருகிறது.

    அகர்தலா :

    திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. நேற்று முன்தினம், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி வருகிறது. ஆனால், யாராவது புகார் கொடுத்தால்தான் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும் என்று சபாநாயகர் விஸ்வபந்து சென் கூறினார்.

    இதற்கிடையே, தனக்கு திரும்ப திரும்ப செல்போனில் அழைப்பு வந்ததால், அதை எடுத்து பேசியபோது, தானாகவே ஆபாச வீடியோ ஓடத்தொடங்கியதாகவும், அதை உடனே அணைத்து விட்டதாகவும் ஜடாப் லால் நாத் விளக்கம் அளித்துள்ளார்.

    • திரிபுராவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.
    • ஆளுநர் முதல்வர் மாணிக் சகாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 32 தொகுதிகளில் பா.ஜ.க.வும், ஒரு தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

    இதற்கிடையே, பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திரிபுரா முதல்வராக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், திரிபுராவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சகா முதல்வராக பதவியேற்றார். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் திரிபுரா முதல் மந்திரியாக மாணிக் சகா தேர்வானார்.
    • திரிபுரா ஆளுநரைச் சந்தித்த மாணிக் சகா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    அகர்தலா:

    திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 32 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 1 தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

    இதற்கிடையே, பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திரிபுரா முதல் மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

    இதன்மூலம் திரிபுராவின் முதல் மந்திரியாக 2-வது முறையாக மாணிக் சகா பதவியேற்க உள்ளார். இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்த மாணிக் சகா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    இந்நிலையில், திரிபுராவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடக்கிறது. பா.ஜ.க.வை சேர்ந்த மாணிக் சகா முதல் மந்திரியாக பதவியேற்கிறார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    • உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
    • இதில் திரிபுரா முதல் மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

    அகர்தலா:

    திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 32 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 1 தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது.

    இதற்கிடையே, திரிபுரா முதல் மந்திரியான மாணிக் சகா மீண்டும் 2-வது முறையாக முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மற்றொரு பா.ஜ.க. மூத்த தலைவரும் திரிபுரா முன்னாள் முதல் மந்திரியுமான பிப்லோப் குமார் தீப் மீண்டும் முதல் மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியானது. இதனால் தேர்தலில் வெற்றிபெற்ற போதும் முதல் மந்திரி யார் என்பதில் திரிபுரா பா.ஜ.க.வில் குழப்பம் நீடித்தது. இதனால் பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் திரிபுரா விரைந்தனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. உயர்மட்டக்குழு தலைவர்கள் தலைமையில் திரிபுரா பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் திரிபுரா முதல் மந்திரியாக மாணிக் சகா தேர்ந்தெடுக்கப்படுவதாக ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக நிலவி வந்த சர்ச்சை குழப்பம் முடிவுக்கு வந்தது.

    இதன்மூலம் திரிபுராவின் முதல் மந்திரியாக 2-வது முறையாக மாணிக் சகா விரைவில் பதவியேற்க உள்ளார். இதைத்தொடர்ந்து ஆளுநரைச் சந்தித்த மாணிக் சகா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    முதல் மந்திரியாக மாணிக் சகா மற்றும் மந்திரிகள் பதவியேற்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதல்வர் மாணிக் சாஹா தனது அரசின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யாவிடம் நேற்று அளித்தார்.
    • பிரதமர் மோடியின் திரிபுரா மாநில பயணம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் எஸ்.கே. சின்ஹா ஆலோசனை.

    சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா சட்டசபைத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியில் பாஜக 32 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஒரு இடத்தையும் பிடித்து ஆட்சியை கைப்பற்றியது.

    தொடர்ந்து, முதல்வர் மாணிக் சாஹா தனது அரசின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யாவிடம் நேற்று அளித்தார். புதிய அரசு மார்ச் 8ம் தேதி பதவியேற்பதாகவும், விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாகவும் ஆளுநர் ஏற்கனவே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், திரிபுராவில் வரும் மார்ச் 8 ம் தேதி நடைபெறும் பாஜக- ஐபிஎஃப்டி அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரதமர் மோடியின் திரிபுரா மாநில பயணம் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் எஸ்.கே. சின்ஹா ஆலோசனை நடத்துகிறார். இதற்காக சிறப்பு பாதுகாப்பு குழு திரிபுரா வருகிறது என்றும் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    திரிபுராவில் உள்ள விவேகானந்தர் மைதானத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.
    • திரிபுரா , நாகாலாந்து ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

    திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. திரிபுராவில் 90 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    இதில், திரிபுரா மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி 40 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக- திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கூட்டணி 30 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், பாஜக சார்பில் டவுன் போர்டோவாலி தொகுதியில் போட்டியிட்ட திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

    திரிபுரா , நாகாலாந்து ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

    • 20 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
    • வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந்தேதி நடக்கிறது.

    அகர்தலா :

    வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது.

    இங்கு 60 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி, மாநிலக்கட்சியான திப்ரா மோதா ஆகியவற்றுக்கு இடையே பலத்த போட்டி நிலவியது. 20 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பா.ஜ.க. அதிகபட்சமாக 55 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 47 இடங்களிலும், மாநிலக்கட்சியான திப்ரா மோதா கட்சி 42 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

    28.13 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர்.

    ஆட்சியைத்தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் கடும் போட்டியில் இறங்கின.

    பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடந்தது. மிகுந்த ஆர்வத்துடன் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கி படையெடுத்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்குப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக்கடமையை ஆற்றினர்.

    ரெய்மா தொகுதியில், வாக்காளர்கள் டும்புர் ஏரியில் படகுகளில் வந்து வாக்குப்பதிவு செய்தனர்.

    பிரதாப்கார் தொகுதியில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர்.

    வாக்குப்பதிவின்போது ஒரு சில வன்முறைச்சம்பவங்களும் அரங்கேறின.

    செபாஹிஜலா மாவட்டத்தின் பாக்சாநகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளைச்செயலாளர் தாக்கப்பட்டார். கோமதி மாவட்டத்தில் காக்ரபான் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 2 தேர்தல் ஏஜெண்டுகள் தாக்கப்பட்டனர்.

    கயெர்பூர் என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பபித்ரா கர்ரின் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.

    40-45 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது பட்டதாகவும், அவை மாற்றப்பட்டு, வாக்குப்பதிவு மீண்டும் நடந்ததாகவும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கித்தே கிரண்குமார் தினகர்ராவ் தெரிவித்தார்.

    போர்டோவாலி தொகுதியில் போட்டியிடும் முதல்-மந்திரி மாணிக் சகா, அகர்தலாவில் காலையிலேயே வாக்குப்பதிவு செய்தார். அங்கு அவர் நிருபர்கள் மத்தியில் பேசும்போது, "பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறும் என்று 100 சதவீதம் நம்புகிறேன். கடந்த முறையை விட அதிக இடங்களைப் பெறுவோம்" என தெரிவித்தார். பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் தேப், கோமதி மாவட்டத்தில் வாக்குப்பதிவு செய்தார்.

    இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார், அகர்தலாவில் வாக்குப்பதிவு செய்தார். 25 ஆண்டுகளில் முதல்முறையாக இவர் இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

    எதிர்க்கட்சி தலைவர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ராம் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு செய்தார். மக்கள் தைரியமாக வந்து வாக்கு அளித்து, ஜனநாயகம், அமைதி, சமாதானமான சூழலை உருவாக்கும் புதிய அரசை தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    பெருந்திரளாக வந்து வாக்கு அளித்த மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

    திரிபுராவில் 4 மணிக்கு வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. 85 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

    வாக்குப்பதிவு அமோகமாக இருந்ததால், அது எதிர்க்கட்சிக்கு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆதரவாக அமைந்து, அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. கடந்த தேர்தலில் அங்கு 89 சதவீத வாக்குகள் பதிவானது, அப்போதும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

    வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 2-ந்தேதி நடக்கிறது. அதே நாளில்தான் மேகாலயா, நாகலாந்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×