search icon
என் மலர்tooltip icon
    < Back
    1982 Anbarasin Kaadhal
    1982 Anbarasin Kaadhal

    1982 அன்பரசின் காதல்

    இயக்குனர்: உல்லாஸ் சங்கர்
    எடிட்டர்:க்ரேசன்
    ஒளிப்பதிவாளர்:ஜிஸ்பின் செபாஸ்டியன்
    இசை:எஸ்.சிந்தாமணி
    வெளியீட்டு தேதி:2023-05-26
    Points:17

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை400387
    Point143
    கரு

    இரண்டு காதலர்கள் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கேரள எல்லையோரம் வசிக்கும் தமிழக இளைஞன் ஆஷிக் மெர்லினும் மலையாள பெண் சந்தனாவும் நட்பாக பழகுகிறார்கள். சந்தனா மீது ஆஷிக் மெர்லினுக்கு காதல் வருகிறது. ஆனாலும் மூன்று வருடமாக காதலை வெளிப்படுத்தாமலே இருக்கிறார். இந்த நிலையில் ஆஷிக் மெர்லினை சந்தனா போனில் தொடர்பு கொண்டு தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும்படி கூறுகிறார்.



    ஆஷிக் மெர்லினும் கேரளா சென்று சந்தனாவை அழைத்துக் கொண்டு மலைக்காடுகள் வழியாக பயணிக்கும்போது ரவுடிகள் மறிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து இருவரும் தப்பி ஓடுகின்றனர்.



    உல்லாஷ் சங்கர் இருவரையும் காப்பாற்றி தனது இருப்பிடத்துக்கு அழைத்து செல்கிறார். அங்கு அவர்களை உல்லாஷ் சங்கர் முறைத்து பார்க்க பயந்து மீண்டும் தப்பி ஓடுகிறார்கள். அவர்களை விடாது உல்லாஷ் துரத்துகிறார். அவரிடம் இருவரும் சிக்கினார்களா? காதல் என்ன ஆனது? உல்லாஷ் சங்கர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.




    ஆஷிக் மெர்லின் காதல் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தும் இளம் காதலனாக துறுதுறுவென வருகிறார். காதலி நினைவாக நிலைமறந்து இருப்பது, போன் அழைப்புக்காக காத்திருப்பது என்று காதல் தவிப்புகளை வெளிப்படுத்துகிறார். ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க காதலியை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடும் காட்சி நிமிர வைக்கிறது.




    சந்தனா அழகும் கவர்ச்சியுமாய் வசீகரிக்கிறார். இன்னொரு நாயகனாக வரும் அமல் ரவீந்திரன் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். அவரது காதலியாக வரும் அருணிமா ராஜ் சிரிப்பிலும் நடிப்பிலும் அம்சம். உல்லாஷ் சங்கர் காதல் ஜோடியை விரட்டும்போது வில்லத்தனத்தில் பயமுறுத்துகிறார். பிளாஷ்பேக்கில் இன்னொரு முகம் காட்டுகிறார்.



    இரண்டு வெவ்வேறு காதல் கதையை திகில் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் உல்லாஷ் ஷங்கர். துப்பாக்கி செய்யும் நீளமான காட்சிகள் சலிப்பை தருகிறது.




    சிந்தாமணி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். செபாஸ்டியன் ஒளிப்பதிவு மலை பிரதேசத்தின் அழகை அள்ளியுள்ளது.


    மொத்தத்தில் 1982 அன்பரசின் காதல் - பாதி வெற்றி


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×