என் மலர்
அதர்மக் கதைகள்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 305 | 289 |
Point | 76 | 71 |
நான்கு விதமான பழிவாங்கும் கதையை கொண்டு அதர்மக் கதைகள் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
கதைக்களம்
நர்ஸ் வேலை பார்க்கும் நாயகி அம்மு அபிராமி, எதிரிகளால் படுகாயம் அடைந்த பிரபல ரவுடி அவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் அம்மு அபிராமி ஒரு கட்டத்தில் அவரை பழி வாங்குகிறார்.
பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள் நாயகன் வெற்றி, சாக்ஷி அகர்வால். ஒரு கட்டத்தில் நாயகன் வெற்றி தற்கொலை செய்து கொள்கிறார்.
சுனாமியில் தன் குடும்பத்தை இழந்த பூ ராமு, பீச்சில் பலூன் சுடும் வேலை பார்த்து வருகிறார். இவர் மூன்று இளைஞர்களை சுட்டுக் கொள்கிறார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த திவ்யா துரைசாமி, தன் குடும்ப சூழ்நிலை காரணமாக செல்வந்தர் ஒருத்தருக்கு வாடகை தாயாக மாறுகிறார். ஒரு கட்டத்தில் அந்த செல்வந்தருக்கு எதிராக புகார் கொடுக்கிறார்.
அம்மு அபிராமி, ரவுடியை பழிவாங்க காரணம் என்ன? நாயகன் வெற்றி தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? பூ ராமு, நான்கு இளைஞர்களை சுட்டுக் கொள்ள காரணம் என்ன? திவ்ய துரைசாமி செல்வந்தருக்கு எதிராக புகார் கொடுக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
இயக்கம்
நான்கு பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் காமராஜ் வேல். அம்மு அபிராமி கதைக்கு பழிவாங்குவது ஒரு கலை என்றும், வெற்றி கதைக்கு, தன்னை தானே பழிவாங்குதல் தவறானது என்றும், பூ ராமு கதைக்கு பழிவாங்குவதை மற்றவர்களுக்காக செய்வதும் ஒரு வகையான தர்மமே என்றும், திவ்யா துரைசாமி கதைக்கு மன்னித்தலே ஆகச்சிறந்த பழிவாங்கல் என்றும் தலைப்பு வைத்து உருவாக்கி இருக்கிறார்.
வித்தியாசமான கதை, வித்தியாசமான தலைப்பு வைத்து கவர்ந்து இருக்கிறார். ஒவ்வொரு கதைக்கும் நியாயம் சேர்த்து இருக்கிறார். திரைக்கதையில் இன்னும் அழுத்தம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
நடிகர்கள்
அம்மு அபிராமி நர்ஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். பயப்படுவது, கோபப்படுவது என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். தற்போது உள்ள இளைஞர்களின் பிரதிபலிப்பாக நடித்திருக்கிறார் வெற்றி. இவரது மனைவியாக வரும் சாக்ஷி அகர்வால் பொறுப்புள்ள மனைவியாக நடித்திருக்கிறார். கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பது, அவருக்கு பிரச்சனை என்றும் வந்தவுடன் உறுதுணையாக நிற்பது என்று நடிப்பில் பளிச்சிடுகிறார்.
அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் பூ ராமு. இவரது அலட்டல் இல்லாத நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது. திவ்யா துரைசாமி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இசை
ஏ.ஆர்.ரெஹானா, எஸ்.என்.அருணகிரி, ஹரிஷ் அர்ஜுன், சரண் குமார் ஆகியோர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
பரணி, ராஜிவ் ராஜேந்திரன், ஜெபின் ரெஜினால்ட் ஆகியோரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றார் போல் அமைந்து இருக்கிறது.
தயாரிப்பு
பிக் பேங் மூவீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.