என் மலர்
ஆதிபுருஷ்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 141 | 130 | 140 |
Point | 453 | 625 | 45 |
இராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை.
அயோத்தி இளவரசன் பிரபாஸ், மனைவி கீர்த்தி சனோன், தம்பி சன்னி சிங் ஆகியோர் 14 ஆண்டுகள் வனவாசம் செல்கிறார்கள். பிரபாஸ் மீதான ஆசை காரணமாக கீர்த்தியை தாக்க முயல்கிறார் சூர்ப்பனகை. இதனால் சன்னி சிங், அவள் மூக்கை அறுத்து விடுகிறார்.
இதையடுத்து சூர்ப்பனகை இலங்கை அரசனான தன் அண்ணன் சைஃப் அலிகானிடம் முறையிடுகிறாள். கீர்த்தியை மனைவியாக்க வேண்டும் என்கிறாள் இதனால் சைஃப் அலிகான் சந்நியாசி வேடத்தில் சென்று கீர்த்தியை சிறைவைக்கிறார். இறுதியில் பிரபாஸ், கீர்த்தியை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
ராமனாக பிரபாஸ், உடல்மொழியைக் கச்சிதமாகப் பிரதிபலித்தாலும் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளில் தடுமாறுகிறார். சீதையாக கீர்த்தி சனோன் அமைதியான நடிப்பைத் வெளிப்படுத்தியிருக்கிறார். சன்னி சிங் படம் முழுவதும் வந்தாலும் அவருக்கு முக்கிய காட்சிகள் எதுவும் இல்லை. அனுமனாக நடித்திருக்கும் தேவதத்தா நாகே கொடுத்த வேலையை சிறப்பாகப் செய்துள்ளார். ராவணனாக வரும் சைஃப் அலி கான் தோற்றம், உடல்மொழி, நடிப்பு என மிரட்டியிருக்கிறார்.
ராமாயணத்தின் கதையிலிருந்து வெகுஜன சினிமா ரசனைக்குத் தோதான பகுதியை எடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஓம் ராவத். ராமாயணத்தில் உள்ள உன்னதத் தருணங்களை திரைக்கதையில் போதுமான அளவு கொண்டுவரத் தவறிவிட்டார் இயக்குனர். சில உணர்வுபூர்வமான காட்சிகள் உணர்ச்சியை இல்லாமல் இருக்கிறது.
சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாரா இணையின் பின்னணி இசை திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது. கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான பிரம்மாண்டத்தை உணரச் செய்கிறது.
மொத்தத்தில் ஆதிபுருஷ் - உணரமுடியவில்லை