என் மலர்
அந்த நாள்
- 1
- 0
- 0
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 427 |
Point | 6 |
கதை எழுத சென்ற இடத்தில், சிக்கலில் மாட்டிக் கொள்ளும் இயக்குனரின் கதை
கதைக்களம்
திரைப்பட இயக்குனராக இருக்கும் நாயகன் ஆர்யன் ஷாம், அடுத்த படத்தின் பணிக்காக ஆத்யா, லீமா, ராஜ்குமார், கிஷோர் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பஞ்சமி பங்களா என்ற இடத்திற்கு செல்கிறார். அங்கு இரவு நேரத்தில் மர்மான சில சம்பவங்கள் நடக்க, பயத்தில் அங்கிருந்து அனைவரும் வெளியேற முயற்சி செய்கிறார்கள்.
ஆனால், அவர்களால் வெளியில் செல்ல முடியவில்லை. மேலும் முகமூடி மனிதன் ஒருவன் இவர்களை தாக்கி மிரட்டுகிறான். இறுதியில் பஞ்சமி பங்களாவில் இருந்து ஆர்யன் ஷாம் மற்றும் குழுவினர் அனைவரும் தப்பித்தார்களா? அந்த பங்களாவில் இருக்கும் மர்மம் என்ன? முகமூடி மனிதன் யார்? எதற்காக துரத்துகிறான்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஆர்யன் ஷாம், புதுமுக நடிகர் என்று தெரியாத அளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். பயம், கோபம் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.
ஆர்யன் ஷாமின் உதவியாளர்களாக நடித்திருக்கும் ஆத்யா, லீமா பாபு, கிஷோர் ராஜ்குமார், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் ஆங்காங்கே சிரிக்க வைத்தும் பயந்தும் நடித்திருக்கிறார்கள்.
இயக்கம்
நரபலியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வீவீ கதிரேசன். பேய் படங்களுக்கு உரிய ஒரு பங்களா பயமுறுத்து காட்சிகள் என அனைத்தையும் இப்படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர். திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பது படத்திற்கு பலவீனம். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி இருக்கலாம்.
இசை
இசையமைப்பாளர் என்.எஸ்.ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது
ஒளிப்பதிவு
திகில் காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்குமஒளிப்பதிவாளர் சதிஷ் கதிர்வேலை பாராட்டலாம்.