என் மலர்
அரிமாபட்டி சக்திவேல்
- 1
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 218 | 235 | 196 |
Point | 187 | 148 | 4 |
சினிமா இயக்குநர் மற்றும் காதல் வாழ்க்கையில் ஜெயிக்க நினைக்கும் நாயகனின் கதை.
கதைக்களம்
கதாநாயகன் சக்திவேல் சென்னையில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்கிறான். அவனுக்கு தமிழ் திரையுலகில் ஒரு பெரிய இயக்குநராக வர வேண்டும் என்பது கனவு. அவ்வப்போது குறும் படங்களை இயக்கி அதை திரைப்பட விழாவிற்க்கு அனுப்பி வைக்கிறான். இவன் சொந்த ஊர் அரிமாபட்டியில் வேற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலிக்கிறான்.
வீட்டை எதிர்த்து அவளை திருமணமும் செய்துக் சென்னை வந்து விடுகிறான். பெண் வீட்டார் கதாநாயகனை தேடி அவன் வீட்டிற்கு செல்கிறனர், ஆனால் அவன் அங்கு இல்லை. அவன் அப்பாவான சார்லியை மிரட்டுகிறார்கள். பின் சார்லி சென்னைக்கு சென்று தன் மகனை பார்க்க முயற்சிக்கிறார். மகன் என்ன ஆனான்? நாயகனின் கனவு நிறைவேறியதா? பெண் வீட்டார் காதல் திருமணத்தை ஏற்று கொண்டார்களா? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
அரிமாபட்டி படத்தில் அறிமுக நாயகன் ’பவன்’ சக்திவேல் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேக்னா இலன் கதாநாயகியாக நடித்துள்ளார். சார்லி கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்து இருக்கிறார். இம்மான் அண்ணாச்சி மற்றும் சிலர் நடித்துள்ளனர்.
இயக்கம்
அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் உண்மை பிண்ணனி கொண்ட கதையை தேர்வு செய்தாலும், அதை அவரால் நேர்த்தியாக திரையில் கொண்டு வர முடியவில்லை.
பார்க்கும் ரசிகர்களுக்கு ஆங்காங்கே சலிப்பு தட்டுகிறது. நடிகர் பவனும் அந்தளவுக்கு கதைக்கு ஏற்ற நடிப்பை கொடுக்கவில்லை. சிறந்த நடிகரான சார்லி ஏன் இப்படத்தை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை ஒரு சிறந்த நடிகரை இயக்குநருக்கு சரியாக பயன்படுத்த தெரியவில்லை.
இசை
இப்படத்திற்கு மணி அமுதவன் இசையமைத்துள்ளார். பிரபல பாடகர் தேவா பாடிய ’வாயா ராசா’என்ற பாடல் ரசிக்கும்படியாக இருந்தது
ஒளிப்பதிவு
ஜேபி மான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மதுரையின் அழகை தனது ஒளிப்பதிவு மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
ப்ரொடக்ஷன்
’லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.