என் மலர்
அதோமுகம்
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 183 | 170 |
Point | 289 | 385 |
புதிய செயலியால் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் மர்மமும் பிரச்சனையும் கதை.
கதைக்களம்
ஊட்டி தேயிலை தோட்டத்தில் நிர்வாக அதிகாரியாக இருக்கிறார் நாயகன் எஸ்.பி.சித்தார்த். இவர் தனது மனைவி சைத்தன்யா பிரதாப் மீது அளவு கடந்த பாசத்துடன் இருக்கிறார். இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
ஆசை மனைவியை சந்தோசப்படுத்துவதற்காக மனைவியின் நடவடிக்கைகளை அவருக்கே தெரியாமல் அவரது செல்போனில் சிறப்பு செயலியை உருவாக்குகிறார் சித்தார்த். இதனால் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்க்கையில் எதிர்பாராத மர்மங்களும், பிரச்சினைகளும் வருகிறது.
இறுதியில் சித்தார்த் - சைத்தன்யா இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? செயலி மூலம் இவர்கள் வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதைக்கு கிடைத்த சரியான கதாபாத்திரம் எஸ்.பி.சித்தார்த். மனைவி மீது கொள்ளை பிரியம் காட்டுவதும் அடுத்தடுத்து எதிர் பாராத மர்மங்கள் என அவரது கண்களே உணர்வுகளை காட்சிகளில் வெளிப்படுத்துகிற விதம் கவனத்தை ஈர்க்கிறது.
அப்பாவி மனைவியாக கணவனிடம் பாசம் காட்டுவதும் அவரால் ஏற்படும் திகில் சம்பவங்களிலும் கணவனை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதும் ஒரே நொடியில் எதிரியை சுட்டு வீழ்த்தி ஆதரவு காட்டுவதும் கிளைமாக்ஸ் காட்சியில் எதிர் பார்க்காத திருப்பத்தை கொடுப்பதும் என பல கோணங்களில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சைத்தன்யா.
சில காட்சிகள் வந்தாலும் அருண்பாண்டியனின் நடிப்பு மிரட்டல், ஆனந்தராஜ், பிபின் குமார், நக்லைட்ஸ் கவி, வர்க்கீஸ் ஆகியோர் கதைக்கேற்ற நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
இயக்கம்
அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை மிகவும் அருமையாக கூறியுள்ளார் இயக்குனர் சுனில்தேவ். காட்சிக்கு காட்சி படத்தில் காட்டியுள்ள மர்மங்கள் வியப்பளிக்கும் வகையில் இருப்பது சிறப்பு. மர்ம முகத்தை இரண்டாம் பாகத்தில் எப்போது பார்ப்போம் என அனைவரையும் காத்திருக்க தூண்டியிருப்பது பாராட்டத்தக்கது. சஸ்பென்ஸ், திரில்லர் கதையில் யாரும் காட்டாத புதிய முகத்தை காட்டியுள்ளார் இயக்குனர்.
இசை
சரண் ராகவன் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை பலம்.
ஒளிப்பதிவு
அருண் விஜய்குமாரின் ஒளிப்பதிவு கதையோடு சரியாக பயணித்திருக்கிறது.