என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
![Emakku Thozhil Romance : எமக்கு தொழில் ரொமான்ஸ் Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil Emakku Thozhil Romance : எமக்கு தொழில் ரொமான்ஸ் Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil](https://media.maalaimalar.com/h-upload/2024/11/14/500x300_6206861-whatsappimage2024-11-14at105201am1.webp)
![Emakku Thozhil Romance : எமக்கு தொழில் ரொமான்ஸ் Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil Emakku Thozhil Romance : எமக்கு தொழில் ரொமான்ஸ் Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil](https://media.maalaimalar.com/h-upload/2024/11/14/500x750_6206860-whatsappimage2024-11-14at105201am.webp)
எமக்கு தொழில் ரொமான்ஸ்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 104 | 100 |
Point | 792 | 1035 |
சந்தேகப்பட்ட காதலியிடம் போராடும் காதலனின் கதை
கதைக்களம்
அசோக் செல்வன் திரையுலகில் இயக்குனராக வரவேண்டும் என முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். இவர் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் அவந்திகா மிஷ்ராவை காதலித்து வருகிறார். அவந்திகா ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிப்புரிகிறார். அசோக் செல்வனுக்கு நெருங்கிய தோழி திடீர் கருவுற்ற நிலையில் அந்த கருவை கலைப்பதற்காக அசோக் செல்வன் உதவியை நாடுகிறாள். அசோக் செல்வன் தான் அந்த தோழியின் கணவன் என பொய் கூறி அந்த கருவை கலைப்பதற்கு உதவி செய்கிறார். இந்த விஷயம் காதலியான அவந்திகா மிஷ்ராவுக்கு தெரிந்து பெரிய பிரச்சனை ஆகிறது. இதற்கு அடுத்து என்ன ஆனது? அசோக் செல்வனின் உடைந்த காதல் மீண்டும் சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
அசோக் செல்வன் காதலியிடம் பொய் சொல்லி மாட்டிக்கொள்வதை மிகவும் எதார்த்தமாகவும் நகைச்சுவையாக நடித்துள்ளார். அவந்திகா மிஷ்ரா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். ஊர்வசி, எம்.எஸ் பாஸ்கர், பகவதி பெருமாள், படவா கோபி அனைவரும் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
இயக்கம்
காதலர்கள் இடையே நடக்கும் சண்டையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி கேசவன். படத்தின் முதல் பாதி சிறிது தொய்வாக சென்றாலும் அதை இரண்டாம் பாதியில் சரிக்கட்டியுள்ளார் இயக்குனர். முதல் பாதியின் காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்திருந்தால் திரைப்படம் இன்னும் கூடுதலாக ரசிக்கப்பட்டிருக்கும். இரண்டாம் பாதியில் நகைச்சுவை காட்சிகள் பார்வையாளர்களிடம் வொர்க் அவுட் ஆகியுள்ளது படத்தின் ப்ளஸ்.
இசை
நிவாஸ் கே பிரசன்னாவின் இசை கேட்கும் ரகம்
ஒளிப்பதிவு
கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவில் திரைப்படம் மிக கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.
தயாரிப்பு
எம். திருமலை இப்படத்தை தயாரித்துள்ளார்