என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
![ஹாங்காங் வாரியர்ஸ் திரைவிமர்சனம் | Hongkong Warriors Review in Tamil ஹாங்காங் வாரியர்ஸ் திரைவிமர்சனம் | Hongkong Warriors Review in Tamil](https://media.maalaimalar.com/h-upload/2025/01/24/500x300_8535217-whatsappimage2025-01-24at33226pm.webp)
![ஹாங்காங் வாரியர்ஸ் திரைவிமர்சனம் | Hongkong Warriors Review in Tamil ஹாங்காங் வாரியர்ஸ் திரைவிமர்சனம் | Hongkong Warriors Review in Tamil](https://media.maalaimalar.com/h-upload/2025/01/24/500x750_8535216-whatsappimage2025-01-24at33219pm.webp)
ஹாங்காங் வாரியர்ஸ்
- 0
- 0
- 1
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 141 |
Point | 486 |
ஹாங்காங் அகதிகளின் மாறுப்பட்ட ஆக்ஷன் கதைக்களமாக அமைந்துள்ளது இத்திரைப்படம்
கதைக்களம்
1980 களில் நடக்கும் கதைக்களமாக இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அக்காலக்கட்டத்தில் ஹாங்காங்கிற்கு அகதிகளாக சில மக்கள் வருகை தருகின்றனர். அவர்களுக்கு உள்ளாகவே ஒரு ஒரு குழுவாக உருமாறி சமூக விரோத கும்பலாக சிலர் மாறுகின்றனர். அப்படி கதாநாயகனான சான் லோக் ஒரு ஸ்டிரீட் பைட்டராக இருக்கிறார். அவரின் சிறப்பான சண்டை திறமையை வைத்து பல சண்டை போட்டியில் கதாநாயகனை வைத்து பந்தயம் கட்டி லாபம் பார்க்கிறார் ஒருவர் . இந்த நாட்டின் குடி உரிமையை நான் வாங்கி தருகிறேன் என சொல்வதால் அவருக்காக சண்டையிடுகிறார் சான் லோக்.
ஒரு கட்டத்தில் அந்த நபர் சான் லோக்கை ஏமாற்றியது அவருக்கே தெரிய வர. அங்கு இருந்து தப்பிக்கிறார். தப்பிக்கும் பொழுது அங்கு இருக்கும் ஒரு பண மூட்டையை எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார். இதனால் கோபம் அடைந்த அந்த நபர் சான் லோக்கை கொல்லவும் அந்த மூட்டையை அபகரிக்கும் படி மற்ற அடியாட்களை அனுப்பி வைக்கிறார். உயிர் பயத்தில் கதாநாயகன் அந்த ஊரில் உள்ள மிக கொடூரமான கிரைம் நடக்கிம் பகுதியான வால்டு சிட்டிக்குள் தெரியாமல் நுழைந்துவிடுகிறார். வால்ட் சிட்டியை சைக்கிலோன் என்ற கதாப்பாத்திரம் அவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அந்த வால்ட் சிட்டியில் யார் தெரியாத நபர் வந்தாலும் அவர்களை உயிரோடு விடமாட்டார்கள். இப்படி இந்த ஆபத்து நிறைந்த பகுத்திக்குள் நுழைந்த சான் லோக்கிற்கு என்ன ஆனது? உயிர் தப்பித்தாரா? உண்மையில் அந்த மூட்டையில் என்ன இருந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
சான் லோக் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். சைக்கிலோன் கதாப்பாத்திரத்தில் நடித்தவரும் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளனர்.
இயக்கம்
இரு பக்காவான கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். ஒரு ஒரு கதாப்பாத்திரத்தின் வடிவமைத்த விதம் அபாரம். பல சண்டை காட்சிகள் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. பல கூஸ்பம்ஸ் சீன்கள் படத்தில் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. படத்தின் திரைக்கதையை பட்டாசாக எழுதியுள்ளார் இயக்குனர். சில லாஜிக் குறைப்பாடுகளை தவிர்த்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
சியு கியுங் செங் மிக சிறப்பான ஒளிப்பதிவை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.
இசை
கெஞ்சி கவாயின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்
தயாரிப்பு
மீடியா ஏசியா பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது