search icon
என் மலர்tooltip icon
    < Back
    காதல் என்பது பொதுவுடைமை திரைவிமர்சனம்  |Kaadhal Enbadhu Podhu Udamai Review in Tamil
    காதல் என்பது பொதுவுடைமை திரைவிமர்சனம்  |Kaadhal Enbadhu Podhu Udamai Review in Tamil

    காதல் என்பது போதுவுடமை

    இயக்குனர்: ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
    எடிட்டர்:டானி சார்லஸ்
    ஒளிப்பதிவாளர்:ஸ்ரீ சரவணன்
    இசை:கண்ணன் நாராயணன்
    வெளியீட்டு தேதி:2025-02-14
    Points:34

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை380
    Point34
    கரு

    ஓரினசேர்க்கையாளரின் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    கதாநாயகியான லிஜோமோல் ஓரினசேர்க்கையாளர் ஆவார். இவர் அனுஷா என்ற பெண்ணை காதலித்து வருகிறார். தான் காதலிப்பதாக லிஜோமோல் அவரது தாய் ரோகிணியிடம் தெரிவிக்கிறார். அவரும் மகளின் காதலுக்கு மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவித்து அந்த நபரை வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறுகிறார். லிஜோமோல் தான் காதலிக்கும் அனுஷாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார். தன்னுடைய மகள் ஒரு பெண்ணை காதலிக்கிறாள் என தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைகிறார் ரோகிணி.இதற்கு அடுத்து என்ன ஆனது? ஒரு தாயாக ரோகிணி, அதை எப்படி எதிர்க்கொள்கிறார், லிஜோமோல் ஜோஸ் தனக்கு ஏற்பட்டிருக்கும் தன் பாலினச் சேர்க்கை உணர்வை தனது தாய்க்கும், சமூகத்திற்கும் எப்படி புரிய வைக்கிறார், தன் பாலினச் சேர்க்கை மீதான சமூகத்தின் பார்வை, கேள்விகள், என அனைத்தையும் பற்றி அலசும் திரைப்படமே காதல் என்பது பொதுவுடைமை.

    நடிகர்கள்

    கதாநாயகியான லிஜோமோல் தன்பாலின சேர்க்கை கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சவாலான கதாப்பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார். ரோகிணி முற்போக்கு சிந்தனையாளராக இருந்தாலும் அவரது வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தவிப்பது என அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகியின் அப்பாவாக நடித்து இருக்கும் வினீத் எதார்த்தமான பெற்றோர்களின் மனநிலையை வெளிப்பட்டுத்தி நடித்துள்ளார். தீபா, கலேஷ் அவர்களது கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

    இயக்கம்

    தன் பாலின் சேர்க்கை என்பது உடல் தேவை அல்ல உணரவேண்டிய மனிதர்களின் உணர்ச்சி என்பதை மிக அழகாகவும், எளிமையாகவும் இயக்கியுள்ளார் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். ஒரு வீட்டுக்குள் நடக்கும் விவாதம் தான் படம் என்றாலும், அதை முடிந்தவரை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருப்பவர் மிக நாகரீகமான காட்சிகள் மற்றும் கருத்துகள் மூலம் தன் பாலினச் சேர்க்கையாளர்களின் மனங்களையும், உணர்வுகளையும் மக்களுக்கு புரிய வைத்திருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர் கண்ணன் நாராயணின் இசை கேட்கும் ரகம்.

    ஒளிப்பதிவு

    ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. வாக்குவாதம் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

    தயாரிப்பு

    Jomon Jacob, Nithiyah Atputharajah, Dijo Augustine, Vishnu Rajan, and Sajin S Raj ஆகியோர் இணைந்து இப்படத்ஹ்டை தயாரித்துள்ளனர்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×