என் மலர்


கடைசி தோட்டா
- 0
- 0
- 1
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 443 |
Point | 15 |
சொகுசு விடுதியில் நடக்கும் கொலை, அதை சுற்றி நடக்கும் விசாரணையே படத்தின் கதை.
கதைக்களம்
வருமானவரி சோதனைக்கு பயந்து கொடைக்கானலில் உள்ள சொகுசு விடுதியில் அரசியல்வாதி ஒருவர் பணத்தை பதுக்கி வைக்கிறார். அதே விடுதியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ராதாரவி, புதுமண தம்பதி ஸ்ரீகுமார், அவரது மனைவி மற்றும் கொட்டாச்சி குடும்பம், 4 நண்பர்கள் தங்குகிறார்கள்.
இந்நிலையில் சொகுசு விடுதியில் இளம் பெண் ஒருவரை ராதாரவி கொலை செய்கிறார். இந்த கொலையை ஶ்ரீ பார்த்து விடுகிறார். இந்த கொலை சம்பவத்தை விசாரிக்க போலீஸ் அதிகாரி வனிதா விஜயகுமார் களமிறங்குகிறார்.
இறுதியில் போலீஸ் அதிகாரி வனிதா விஜயகுமார் கொலையாளி ராதாரவியை கைது செய்தாரா? ராதாரவி அந்த பெண்ணை கொலை செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார் ராதாரவி. மொத்த கதையையும் தாங்கி நிற்கிறார். தனது அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறார். மனைவி ஸ்ரீஜா மீது அன்பை காட்டுவதிலும், மனைவியை இழந்து கஷ்டப்படுவதிலும் அவரது நடிப்பு சமூகத்தில் வாழும் பல தம்பதிகளின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. மனைவியாக வரும் ஸ்ரீஜா ரவி சில காட்சிகளே வந்தாலும் அவரது நடிப்பு மனதில் நிற்கிறது.
போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கும் வனிதா விஜயகுமார் வரும் காட்சிகள் மிரட்டல். கொலையை பார்த்து மிரண்டு நிற்கும் ஸ்ரீகுமார் போலீசாரிடம் தெரிவிக்க போராடும் காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
இயக்கம்
ஒரு சொகுசு விடுதியில் நடக்கும் குற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நவீன்குமார். குறைவான கதாபாத்திரங்களை கொண்டு சஸ்பென்ஸ் திரில்லராக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். முதல் பாதியில் படம் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் காட்சிகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. எதிர்பாராத கிளைமேக்ஸ் காட்சி ரசிக்க வைக்கிறது. வனிதா விஜயகுமாரும், ஶ்ரீயும் அதிகம் நேரம் புகை பிடித்து கொண்டே இருக்கிறார்கள். இதை தவிர்த்து இருக்கலாம்.
இசை
வி.ஆர்.சுவாமி நாதனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
ஒளிப்பதிவு
மோகன்குமார் ஒளிப்பதிவில் காட்சிகளை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
தயாரிப்பு
RVR ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.