என் மலர்


கடமை
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 451 | 416 |
Point | 12 | 4 |
போலீஸ் பணியில் ஓய்வு பெற்ற பிறகும் கடமை செய்யும் ஒருவரின் கதை.
கதைக்களம்
நாயகன் சிராளன் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ஒருவரை பிடிக்கிறார். ஆனால், பிடிபட்டவர் பண பலத்தால் விடுதலை ஆகிறார். அதுபோல் செயின் பறிப்பில் ஈடுபடும் ஒருவரை பிடிக்கிறார், அவரும் பண பலத்தால் வெளியில் வந்துவிடுகிறார்.
பின்னர் போலீஸ் பணியில் இருந்து ஓய்வு பெறும் சிராளன், அவர்கள் இரண்டு பேரையும் கொலை செய்கிறார். ஒரு கட்டத்தில் போலீஸ் சிராளனை பிடிக்கிறது. மேலும் சிராளன் கொன்ற இரண்டு பேரும் உயிருடன் வருகிறார்கள்.
இறுதியில் சிராளன் கொன்ற இரண்டு பேரும் எப்படி உயிருடன் வந்தார்கள்? சிராளன் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிராளன், ஒரு சதவிகிதம் கூட நடிப்பை வெளிப்படுத்த வில்லை. போலீஸ் உடை, இவர் பேசும் வசனங்கள் மற்றும் நடிப்பு ஆகியவை கொஞ்சம் கூட ஒத்து போகவில்லை. இவரே இப்படத்தை தயாரிக்கவும் செய்து இருக்கிறார். நடிப்பு ஆசையில் ஒரு மட்டமான படத்தை எடுத்து இருக்கிறார். படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் கூட நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.
இயக்கம்
போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஒருவர், பணியில் செய்ய முடியாத காரியத்தை ஓய்வு பெற்ற நிலையில் குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுக்ரன் சங்கர். கதாபாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் ரொம்ப சொதப்பல். காட்சிகள் தொடர்ச்சி இல்லாமல் அங்கும் இங்குமாக நகர்கிறது. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்ல தவறி இருக்கிறார்.
ஒளிப்பதிவு
பாபு ஒளிப்பதிவில் காட்சிகள் கொஞ்சம் கூட தெளிவு இல்லை. நிறைய காட்சிகள் இருட்டிலேயே படமாக்கி இருக்கிறார்கள்.
இசை
பிரசாத் கணேஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கவரவில்லை.
தயாரிப்பு
இப்படத்தை KSNS நிறுவனம் தயாரித்துள்ளது.