search icon
என் மலர்tooltip icon
    < Back
    கண்நீரா திரைவிமர்சனம்  | Kanneera Review in Tamil
    கண்நீரா திரைவிமர்சனம்  | Kanneera Review in Tamil

    கண்நீரா

    இயக்குனர்: கதிர் ராவன்
    ஒளிப்பதிவாளர்:யேகணேஷ் நாயர்
    இசை:ஹரி மாறன்
    வெளியீட்டு தேதி:2025-02-14
    Points:6

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை492
    Point6
    கரு

    முழுக்க முழுக்க காதல் கதையாக அமைந்துள்ள திரைப்படமாகும்

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    இக்கதைக்களம் மலேசியாவில் நடக்கும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகனான கதிரவனும் நாயகி சாந்தினி கவுரும் காதலித்து வருகின்றனர். கதிருக்கு சாந்தினியை திருமணம் செய்துக் கொண்டு குடும்பமாக வாழ வேண்டும் என்பது ஆசை. ஆனால் திருமண பேச்சு எடுத்தாலே சாந்தினி ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி தட்டி கழிக்கிறாள். சாந்தினி தனது வாழ்க்கை , முன்னேற்றம் பற்றி மட்டுமே யோசிப்பதால் கதிரவன் மீதுள்ள காதல் குறைய தொடங்குகிறது.

    இச்சூழ்நிலையில் கதிரவன் அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்கிறார் படத்தின் இரண்டாம் கதாநாயகியான மாயா கிளாமி. இவரது செயல்களால் மெதுவாக கதிரவன் ஈர்க்கப்படுகிறார். ஆனால் மாயாவிற்கு ஏற்கனவே ஒரு காதலன் இருக்கிறார். ஆனால் இது தெரியாமல் கதிரவன் அவரது முதல் காதலை முறித்துக் கொண்டு மாயாவிடம் காதலை தெரிவிக்கிறார். ஆனால் மாயா அவரது காதலை மறுத்துவிடுகிறார். ஆனாலும் கதிரவன் தொடர்ந்து மாயாவை காதலித்து வருகிறார். கதிரவனின் காதல் ஜெயித்ததா? மாயா காதலை சம்மதித்தாளா? சாந்தினி கவுரின் நிலை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகனான கதிரவன் கதாப்பாதிரத்திற்கு ஓரளவுக்கு நடித்து நியாயம் சேர்த்துள்ளார். நாயகிகளாக நடித்திருக்கும் சாந்தினி கவுர் மற்றும் மாயா கிளாம்மி அழகான அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தில் நடித்த பிற கதாப்பாத்திரங்கள் அவர்கள் கொடுத்த வேலையை நன்றாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தாலும் அதை மிக அழகாகவும், ஆழமாகவும் எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் கதிரவன், முதல் பாதியில் பொழுதுபோக்கு அம்சங்களை சரியாக கையாளமல் படத்தை மெதுவாக நகர்த்தி சென்றிருப்பது பலவீனமாக அமைந்துள்ளது. காட்சிப் படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.

    இசை

    ஹரிமாறன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஏகணேஷ் நாயர், தமிழ் சினிமாவில் வழக்கமாக கட்டப்படும் மலேசிய பகுதிகளை தவிர்த்துவிட்டு புதிய லொக்கேஷன்கள் மூலம் பார்வையாளர்களின் கண்களுக்கு மட்டும் இன்றி கதைக்கும் புத்துணர்ச்சியளித்திருக்கிறார்.

    தயாரிப்பு

    Uthraa Productions நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×