என் மலர்


கன்னி
- 0
- 0
- 1
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 415 |
Point | 19 |
இயற்கை வைத்தியத்தை தடுக்க நினைக்கும் ஆங்கிலேய மருந்து கம்பெனியை எதிர்த்து போராடும் கதை.
கதைக்களம்
மலைகிராமத்தில் வசித்து வந்த நாயகி அஸ்வினி சந்திரசேகர், தனது பூர்விகத்தை விட்டு, அண்ணன் மகள் இருவரையும் அழைத்துக் கொண்டு காட்டு வழியாக வேறொரு ஊருக்கு செல்கிறார்.
அங்கு அஸ்வினி சந்திரசேகரை கொலை செய்வதற்காக ஒரு கும்பல் வருகிறது. மேலும் அஸ்வினியை கொலை செய்து அவரிடம் இருக்கும் ஒரு பொருளை எடுப்பதற்காக அந்த கும்பல் முயற்சி செய்கிறது.
இறுதியில் அந்த கும்பல் யார்? எதற்காக அஸ்வினியை கொலை செய்ய துடிக்கிறார்கள்? அஸ்வினியிடம் இருக்கும் பொருள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகியாக நடித்து இருக்கும் அஸ்வினி சந்திரசேகர் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரை சுற்றியே கதை முழுவதும் பயணிக்கிறது. இதை உணர்ந்து அஸ்வினி நடித்து இருக்கிறார். குறிப்பாக தன்னை கொல்ல வருபவர்களை கையில் கிடைக்கும் ஆயுதத்தை எடுத்து அவர்களை வதம் செய்யும் இடத்தில் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.
பல படங்களில் வில்லனாக நடித்த மணிமாறன் இப்படத்தில் நல்லவனாக நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். தாரா க்ரிஷ், ராம் பரதன் உள்ளிட்ட நடிகர்கள், மற்றும் கிராம மக்கள் மிக இயல்பாக நடித்து தங்களது கேரக்டர்களை செய்து முடித்திருந்தனர்.
இயக்கம்
இயற்கை முறை வைத்தியத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மாயோன் சிவா. இயற்கை முறை வைத்தியத்தின் மகிமையையும் அதன் பலன்களையும் தடுக்க நினைக்கும் ஆங்கிலேய மருந்து கம்பெனியை எதிர்த்து போராடும் கதையை திரைக்கதை அமைத்து இருக்கிறார். இயற்கை வைத்தியத்தை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். வழக்கமான சினிமா போல் இல்லாமல் இயக்கி இருப்பது சிறப்பு.
இசை
செபாஸ்டியன் சதீஷின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
ராஜ்குமாரின் ஒளிப்பதிவு மலைகளை அழகாக படம் பிடித்து இருக்கிறது.
தயாரிப்பு
எம். செல்வராஜ் கன்னி திரைப்படத்தை தயாரித்துள்ளார்.