என் மலர்


கபில் ரிட்டன்ஸ்
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 270 | 242 |
Point | 129 | 164 |
கிரிக்கெட் வீரராக போராடும் இளைஞன் குறித்த கதை
கதைக்களம்
ஐடியில் வேலை பார்த்து நன்றாக சம்பாதித்து வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீனி சவுந்தரராஜன், தன் மகனிடம் நீ இன்ஜினியர் ஆகணும், என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார். அவரது மனைவிக்கு தன் மகன் டாக்டராக வேண்டும் என்பது விருப்பம். அந்த பையனின் தாத்தாவுக்கு பேரனை கலெக்டராக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை.
தங்கள் விருப்பத்தை தன் மீது திணிக்கிற மூவரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கிற அந்த பையனுக்கு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கிறது. மகனது விருப்பத்தை அசோக் கடுமையாக எதிர்க்கிறார். இறுதியில் ஸ்ரீனி சவுந்தரராஜன் தன் மகன் விருப்பத்தை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
நடிகர்கள்
படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் டாக்டர் ஸ்ரீனி சவுந்தரராஜன். யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சி செய்து இருக்கிறார். சண்டை போடுவது, கிரிக்கெட் தேர்வுக் குழுவிடம் கெஞ்சுவது, என நடித்து இருக்கிறார்.
கணவனிடம் பிரியமாக இருப்பது, மகனிடம் பாசம் காட்டி ஊக்குவிப்பது என இயல்பான நடிப்பால் தனது பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் நிமிஷா.
கிரிக்கெட் பயிற்சியாளராக வருகிற ரியாஸ்கான், கதாநாயகனின் மகனாக வருகிற மாஸ்டர் பரத், மற்றும் பருத்தி வீரன் சரவணன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
படத்தின் முன்பாதி சுவாரஸ்யமில்லாமல் கதை நகர்கிறது. பின் பாதியில் கொலைப்பழி, போலீஸ் விசாரணை, கிரிக்கெட் விளையாடும் காட்சி என கொஞ்சம் சுவாரஸ்யமாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். வாழ்க்கையில் சாதிக்க வயது தடை இல்லை என்பதை சொல்ல வந்திருக்கிறார்.
இசை
ஆர்.எஸ்.ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓரளவிற்கு காட்சிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது.
ஒளிப்பதிவு
கதைக்கு தேவையான உழைப்பைக் கொடுத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷியாம் ராஜ்.
படத்தொகுப்பு
வில்சி படத்தொகுப்பு ஓகே.
புரொடக்ஷன்
தனலட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் ‘கபில் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.