என் மலர்


கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 457 | 371 |
Point | 11 | 18 |
பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் ஐஏஎஸ் மாணவனின் கதை.
கதைக்களம்
நாயகன் அஸ்வின் விஜய் ஐஏஎஸ் படித்து வருகிறார். அதே ஊரில் கல்லூரியில் படித்து வரும் நாயகி நித்யஶ்ரீ ஒரு நாள் தேர்வுக்கு செல்லும் வழியில் ரெயில்வே கேட்டில் சிக்கிக் கொள்கிறார். அப்போது அஸ்வின் விஜயின் வண்டியை நித்யஶ்ரீயும், இவர் வண்டியை அஸ்வினும் மாற்றிக் கொண்டு தேர்வுக்கு செல்கிறார்கள்.
அஸ்வின் செல்லும் வழியில் போலீஸ் வழிமறித்து பிடிக்கிறார்கள். போலீசுடன் அஸ்வின் சண்டை போட, அவரை போலீஸ் கைது செய்கிறது. மேலும் பொய் கேஸ் போட்டு வேறு ஒருவர் பெயரில் ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். இந்நிலையில் நாயகி நித்யஸ்ரீக்கு அஸ்வின் விஜய் மீது காதல் வருகிறது.
இறுதியில் அஸ்வின் விஜயும் நித்யஸ்ரீயும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? அஸ்வின் விஜயை போலீஸ் கைது செய்து ஜெயிலில் அடைக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின் விஜய் தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் நித்யஸ்ரீ நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். கராத்தே ராஜாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.
இயக்கம்
சில ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற அப்பாவி பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நேசம் முரளி. நல்ல கதை ஆனால் காட்சிப்படுத்திய விதம் சிறப்பாக இல்லை. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி இருக்கலாம். காட்சிகள் அங்கும் இங்குமாக இருக்கிறது. காமெடி ட்ராக் திரைக்கதைக்கு ஒட்டாமல் இருக்கிறது.
இசை
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவுக்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
செல்வாவின் ஒளிப்பதிவு பெரிதாக எடுபடவில்லை.