என் மலர்
கருமேகங்கள் கலைகின்றன
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 | 4 |
---|---|---|---|---|
தரவரிசை | 136 | 148 | 150 | 109 |
Point | 471 | 495 | 25 | 12 |
தந்தை மற்றும் பிள்ளைகளுக்கு இடையே நடக்கும் பாசப்போராட்டம் குறித்த கதை.
கதைக்களம்
ஓய்வுபெற்ற நீதிபதியான பாரதி ராஜாவிற்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில், கவுதம் மேனன் மட்டும் பாரதி ராஜாவுடன் இருக்கிறார் மற்றவர்கள் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.
கிரிமினல் வழக்கறிஞராக இருக்கும் கவுதம் மேனன் காசுக்காக எல்லா வழக்குகளையும் எடுத்து நடத்துகிறார். இது தந்தை பாரதிராஜாவுக்கு பிடிக்காமல் போகவே இருவரும் பத்து வருடங்களாக பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர். இப்படி போய்கொண்டிருக்கும் போது பாரதிராஜாவின் 75-வது பிறந்தநாளை கொண்டாட அவரது பிள்ளைகள் நினைக்கின்றனர். வெளிநாட்டில் இருப்பவர்கள் வரமுடியாத காரணத்தால் விழாவிற்கு தேவையான அனைத்து வேலைகளையும் கவுதம் மேனன் பார்க்கிறார்.
விழா நடைபெறும் அன்று கவுதம் மேனன் வழக்கு விஷயமாக வெளியூர் செல்கிறார். இதனால் பாரதிராஜா மூன்று பிள்ளைகள் இருந்தும் விழாவிற்கு தன்னுடன் யாரும் இல்லையே என்று மனமுடைந்து போகிறார். அப்போது பாரதிராஜாவிற்கு ஒரு கடிதம் வருகிறது. இதை பார்த்தவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
இறுதியில் பாரதிராஜா ஏன் வீட்டை விட்டு சென்றார்? அந்த கடிதத்தில் என்ன இருந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
தன் கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் செய்திருக்கிறார் பாரதிராஜா. அன்புக்காக ஏங்குவது, செய்த குற்றத்துக்காக பரிதவிப்பது என ஓராயிரம் உணர்வுகளை மிக இலகுவாக வெளிப்படுத்தி கலங்க வைத்துள்ளார். அவர் மன்னிப்பு கேட்கும் காட்சி மனதை உலுக்குகிறது.
வக்கீல் கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார் கவுதம் மேனன். பணம் முக்கியம் என்று அலைவது பிறகு அப்பா, குடும்பம் மீது பாசம் கொள்வது என நுண்ணிய உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி கவனிக்க வைத்துள்ளார். அதிதி பாலன், யோகிபாபு ஆகியோ கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்குனர்
தங்கர் பச்சானின் திரைக்கதை வடிவம் இதமாக அமைந்துள்ளது. வழக்கமாக தன் படங்களில் இருக்கும் அன்பு, நேர்மை, காதல் போன்றவற்றை இந்த படத்திலும் கொண்டு வந்துள்ளார். திரைக்கதை வடிவம் சிறப்பாக அமைந்தாலும் ஒரு சில இடங்களில் காட்சிகள் மெதுவாக நகருவது குறையாக உள்ளது.
இசை
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
என்.கே.ஏகாம்பரமின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளித்துள்ளது.
படத்தொகுப்பு
லெனின் படத்தொகுப்பு ரசிக்கும் படி அமைந்துள்ளது.
புரொடக்ஷன்
ரியோடா மீடியா தயாரிப்பில் ’கருமேகங்கள் கலைகின்றன’ பாசப்போராட்ட படமாக அமைந்துள்ளது.