என் மலர்


கருப்பு பெட்டி
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 366 | 335 |
Point | 40 | 42 |
அமைதியாக இருக்கும் குடும்பத்தில் சந்தேகக்கோடுகள் வருவதும் அதனால் ஏற்படும் விபரீதத்தையும் உணர்த்தும் படம்.
கதைக்களம்
கே.சி.பிரபாத்-தேவிகா வேணு இருவரும் புதிதாகத் திருமணம் ஆகி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது பிரபாத்துக்கு சில கனவுகள் வருகின்றன. அவை பெரும்பாலும் அந்தரங்கமான கனவுகளாக இருக்கின்றன. அவர் தன் மனைவியின் தங்கை, வீட்டில் வேலை செய்யும் பெண், எதிர் வீட்டுப் பெண் என்று அக்கம் பக்கம் உள்ள பெண்களுடன் எல்லாம் நெருக்கமாக இருக்கும் கனவுகள் வருகின்றன.
இது குறித்து டாக்டரைச் சந்தித்து ஆலோசனை கேட்கிறார். டாக்டர் இப்படி வரும் கனவுகளை வரிசையாக டைரியில் எழுதி வரச் சொல்கிறார். அதன்படி பிரபாத்தும் செய்து வருகிறார்.
கணவன் தினமும் ஏதோ மர்மமாக எழுதுகிறானே என்று சந்தேகப்பட்டு கணவன் தூங்கிய பிறகு பெட்டியைத் திறந்து டைரியை எடுத்துப் படிக்கிறாள் தேவிகா. அதில் எழுதி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். மனம் வெறுத்துப் போன அவர், அம்மா வீட்டுக்குக் கோபித்துக் கொண்டு செல்கிறாள். அத்துடன் விடாமல் விவாகரத்துக்கு நோட்டீஸ் விடுகிறாள்.
இறுதியில் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் கே.சி. பிரபாத் கனவு கண்டு மனம் குழம்பும் போதும் டாக்டருக்கு தெரிய வரும் போதும் மனைவி சந்தேகிக்கும் போதும் பல்வேறு உணர்ச்சிகர சந்தர்ப்பங்களில் ஓரளவிற்கு நடித்துள்ளார். கதாநாயகியாக நடித்துள்ள தேவிகா வேணு நடிப்பால் மனதைக் கவர்ந்து இருக்கிறார்.
இயக்கம்
விமானத்தில் கருப்பு பெட்டி என்று ஒன்று இருக்கும். அதில் விமானத்தின் ஒவ்வொரு அசைவும் பதிவு செய்யப்பட்டு, ரகசிய தகவல்களைக் கொண்டதாக இருக்கும். அது போல் மனமும் ஒரு கருப்பு பெட்டி தான். அதில் உள்ள தகவல்களைப் பூட்டி வைத்திருப்பது தான் நல்லது. திறந்து பார்த்தால் தேவையில்லாத விபரீதங்கள் வரும் என்கிற வகையில் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.
கற்பனை கனவுகளை மாறுபட்ட கோணத்தில் படமாக்கி உள்ளார் இயக்குனர் தாஸ். அமைதியாக இருக்கும் குடும்பத்தில் சந்தேகக்கோடுகள் வருவதும் அதனால் ஏற்படும் விபரீதத்தையும் உணர்த்தும் வகையில் உருவாக்கி இருக்கிறார். கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதை இருந்திருந்தால் ரசித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
கதைக்குத் தேவையான ஒளிப்பதிவினை டேனியல் மோசஸ் வழங்கி உள்ளார்.
இசை
பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இசையமைப்பாளர் அருண் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.