என் மலர்


கட்டில்
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 381 | 336 |
Point | 33 | 41 |
ஒரு கட்டில் குறித்த கதை.
கதைக்களம்
மூன்று தலைமுறையாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார் நாயகன் கணேஷ். மனைவி சிருஷ்டி டாங்கே, தாய் மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்கிறார். இந்த வீட்டில் 250 வருட பழமை வாய்ந்த கட்டில் இருக்கிறது. இந்த கட்டிலை தன் உயிருக்கு நிகராக வைத்து இருக்கிறார்.
வேறு ஊர்களில் வாழும் கணேசனின் சகோதர, சகோதரிகள் இந்த வீட்டை விற்க நினைக்கிறார்கள். ஆனால், கணேஷ் வீட்டை விற்க மறுக்கிறார். மேலும் கட்டிலையும் தர மறுக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த வீட்டை விற்கிறார்கள். இதில் வரும் பணத்தை வைத்து கட்டில் வைக்கும் அளவிற்கு பெரிய வீடு வாங்க நினைக்கிறார் கணேஷ். ஆனால், அதற்கு தகுந்தாற்போல் வீடு கிடைக்கவில்லை.
இதனால், கட்டிலை வேறு இடத்தில் தற்காலிகமாக வைத்து விட்டு புதிய வீட்டிற்கு வாடகைக்கு செல்கிறார்கள். இறுதியில் கணேஷ் சொந்த வீடு வாங்கினாரா? கட்டிலை பாதுகாத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கணேஷ், தாத்தா, தந்தை, மகன் என மூன்று தலைமுறை கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடிப்பிலும் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, கர்ப்பிணி பெண்ணாக படம் முழுக்க நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் கன்னிகா அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரம் மட்டுமே வந்து மனதில் பதிகிறார் விதார்த்.
இயக்கம்
நாயகனாக நடித்திருக்கும் கணேஷ் இப்படத்தை இயக்கியும் இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். கட்டில் வைத்து தான் முழு கதையும் நகர்த்தி இருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். கட்டிலோடு ஒரு மெசேஜையும் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர்.
இசை
படத்திற்கு பெரிய பலம் ஶ்ரீகாந்த் தேவாவின் இசை. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
ஒய்டு ஆங்கிள் ரவி சங்கரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக அமைந்து உள்ளது.
படத்தொகுப்பு
பி. லெனின் படத்தொகுப்பு ரசிக்கும் படி அமைந்துள்ளது.
காஸ்டியூம்
ஜெ.ராஜேந்திரன் காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.
புரொடக்ஷன்
பல்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து ‘கட்டில்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.